Tuesday, August 21, 2007

வலைப்பதிவர் சந்திப்பு - இந்த வாரம்..

இந்த வாரம் சென்னையில் வலைப்பதிவர் சந்திப்பு நடக்கவிருக்கிறது.

ஞாயிறு 26-ஆகஸ்ட்-2007 அன்று மதியம் அல்லது மாலை நடக்க இருக்கும் இந்த சந்திப்பின் நிகழ்ச்சி நிரல் பின்வருமாறு:

* பதிவர் பட்டறையின் அடுத்த நகர்வு குறித்து விவாதித்தல் - மா.சிவகுமார்
* டி.எம்.ஐ நிறுவனத்தின் பணிகள் குறித்த அறிமுகம் - டி.எம்.ஐ சார்பாக நண்பர்கள் சொர்ணம் சங்கரபாண்டி மற்றும் சுந்தரவடிவேல்

மேலும், இணையத்தமிழ் வளர்ச்சியில் முக்கியமான பங்குக்கு சொந்தக்காரரான நண்பர் சுரதா யாழ்வாணனும் இந்த சந்திப்பில் கலந்து கொள்கிறார்.

சந்திப்பின் இடமும் சரியான நேரமும் குறித்து சென்னைப் பட்டினத்தில்்..

<இன்று இணையம் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு முன்னோட்டமாகவும், உங்கள் நாட்காட்டியில் குறித்துக்கொள்ளவுமே இந்த அறிவிப்பு!>

Wednesday, August 15, 2007

வாழ்த்துக்கள்

போன வருடம் இதே நாளில் தான் நான் அலுவல் தொடர்பான வெளிநாட்டுப் பயணம் முடிந்து இந்திய மண்ணில் காலடி எடுத்து வைத்தேன்.. நல்லா சாப்பிட்ட களைப்பு தீர தூங்கி எழுந்து மதியம் போல போன் செய்த போது தான் அருள் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க செய்தியைச் சொன்னார்.

2006 ஆகஸ்ட் 15 அன்று தி.நகர் நடேசன் பூங்காவில் வலைப்பதிவு நண்பர்கள் சந்திப்பொன்று நிகழ்ந்தது.. அதுவரை சென்னையில் அதிகம் சந்தித்திராத வலைப்பதிவர்களை ஒன்றிணைக்கவும், இன்று பதிவர் பட்டறை நடத்தும் அளவில் விரிவடையவும், ஒரு விதத்தில் முதல் விதையாக இருந்த அந்தச் சந்திப்பில் அருள்குமார், ஜெய், பாலபாரதி, ப்ரியன், மதுமிதா, சிங். செயக்குமார், குப்புசாமி செல்லமுத்து, மா.சிவகுமார், வீரமணி என்று பத்துக்கும் குறைவான எண்ணிக்கையிலான நண்பர்களே குழுமியிருந்தார்கள். காலை நடேசன் பூங்காவில் மொக்கை போட்டு அங்கே இருந்த ஒரு வயதானவரின் தூக்கத்தைக் கெடுத்த பின்னர் மாமல்லபுரம் கடற்கரைக்கோயிலை நோக்கிய ஒரு சிற்றுலாவும் இருந்தது.. (இது பற்றிய முழு அறிக்கையைப் படிக்க கிலுகிலுப்பையிலிருந்து தொடங்குங்கள்)

சந்திப்பின் நீட்சியாகத் தான் அடுத்த ஒரு மாதத்தில் நடந்த நாகேஸ்வரராவ் பூங்கா சந்திப்பும், நவம்பரில் மயிலையில் முதன்முதலில் நிகழ்ச்சி நிரலுடன் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த மற்றொரு சந்திப்பும் என்று மெல்ல சென்னையிலும் வலைஞர் சந்திப்புகள் தயக்கமின்றி நடைபெறத் துவங்கின. நடேசன் பூங்காவில் சந்தித்தவர்களில் சிலர் சேர்ந்து தொடங்கிய சென்னைப்பட்டினம் கூட்டு வலைப்பதிவும், நவம்பர் சந்திப்பில் உருவான தமிழ்வலைப்பதிவர் உதவிப்பக்கமும் என்று கூட்டுமுயற்சிகளுக்கான விதைகளும் இந்த சந்திப்புகளில் தான் உருப்பெற்றன..

சரி, ஒரு வருடம் முன்னால் நான் போன் செய்த போது, இந்த உருப்படாத மொக்கைகளைப் பற்றி எல்லாம் அருள் பேசவில்லை.. காலை நடேசன் பூங்கா சந்திப்பில் உருவான பா.க.ச என்று அன்பாகவும், பாலபாரதியைக் கலாய்ப்போர் சங்கம் என்று சுருக்கமாகவும் அழைக்கப்படும் இயக்கத்தைப் பற்றித் தான் அருள் தகவல் சொன்னார். அருள் சொன்ன உடனேயே அதில் தொலைபேசி மூலமே உறுப்பினராகி அட்டை வாங்கி இரண்டாவது உறுப்பினராக சேர்ந்த பொறுப்புள்ள மகளிரணித் தலைவி என்ற முறையில் பா.க.சவின் ஆண்டுவிழா பற்றிய இந்த இடுகையைக் கொஞ்சம் மகிழ்ச்சியுடனே இடுகிறேன்..

பா.க.ச மகளிரணியின் பிற முக்கிய தலைவிகள் :
* முதல் முதலில் சேர்ந்த founder உறுப்பினர்களில் ஒருவரான மதுமிதா
* கனடா - மதி கந்தசாமி
* மதுரை - லிவிங் ஸ்மைல் வித்யா
* சென்னை - கவிதா மற்றும் அனிதா
* பின்னூட்ட சூறாவளி சேதுக்கரசி
* கவிஞர் தமிழ்நதி

பாருங்க, உண்மையான சனநாயக இயக்கமான பாகசவில் எல்லாரும் தலைங்க தான்.. கிட்டத்தட்ட ஐம்பது தலைவர்களுக்கு மேல் இருந்தாலும் சரியளவு தலைவிகள் இல்லை என்பதை மனதில் கொண்டு உங்களுக்கான இடத்தைப் பிடிக்க தோழிகளே, சீக்கிரம் முன்பதிவு செய்யுங்க..

ஆண்டுவிழாக் கொண்டாட்டத்தின் பகுதியான பாகச போட்டியிலும் பங்கு கொண்டு உறுப்பினர் அட்டை வாங்கலாம் என்பதை மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொள்கிறேன்.. எனவே.. மக்கள்ஸ் ஸ்டார்ட் மிசிக்...

எல்லாருக்கும் இனிய பாகச ஆண்டுவிழா வாழ்த்துக்கள்!!!

தொடர்புடைய பதிவு : பா.க.சவில் சேர்வது எப்படி?

Friday, August 10, 2007

பதிவர் பட்டறை - காணாமல் போன எலிக்குட்டி

இந்த விவகாரத்தைப் பற்றி இனிமேல் எழுதக் கூடாது என்று தான் நினைத்திருந்தேன்.... ஆனால் இனியும் எழுதாமல் இருந்தால் முக்கியத்துவம் குறைந்து விடுமோ என்ற பயத்தில் இப்போதே எழுதிவிடலாமே என்று..

சென்னை பதிவர் பட்டறை நிகழ்ந்த அன்று, கலந்துரையாடுபவர்களுக்கு வசதியாக முன்பக்கத்தில் ப்ரோஜக்டரில் போட்டுக் காட்ட என் மடிக் கணினியையும் கொடுத்திருந்தேன். திரும்பி அது என் கைக்கு வந்த போது, என் செல்ல எலிக்குட்டியை மட்டும் காணவில்லை.. டெல் கணினிகளில் மட்டும் இணைக்கக் கூடிய, USB முறைப்படி இணைக்கும் அந்த ஆப்டிகல் மவுஸை யாராச்சும் பார்த்தீங்களா?

கடைசியாக கிடைத்த தகவலின்படி, முதல் வரிசையில் அமர்ந்திருந்த எல்லாரும் அவரவர் பொருட்களைத் திரட்டிக் கொண்டு போன பிறகு, நம்மாட்களில் (பதிவர்களில்) யாரோ ஒருவர் தான் பத்திரமாக அதை எடுத்து வைத்ததாக சொல்லப்பட்டது..

யாராச்சும் பார்த்தீங்களா?

[பின்குறிப்பு: இந்த இடுகை மொத்தமும் என் சொந்தக் கருத்தே.. பதிவர் பட்டறை அமைப்பாளர்களுக்கும் இந்த இடுகையின் கருத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை..

டிஸ்கி 2: - அண்ணன் உண்மைத்தமிழனுக்காக.. - இந்த இடுகையின் மூலம் யாரையும் கோபிக்கவில்லை.. யாருடையது என்று தெரியாமல் பத்திரப்படுத்தி இருந்தால், என்னுடையது என்று விளக்கவே இந்த இடுகை.. ]

Monday, July 16, 2007

பாகச புதுவரவுகள்

பாகச புதுவரவுகள் சிலரின் அனுபவங்கள்.. அனானிகளாக..

1.
பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்கும் போது ஒரு தொலைபேசி அழைப்பு...:

அனானி: பொன்ஸ், உங்க தலைய இப்பத் தான் பார்த்திட்டு வரேன். என்னைக் கூட அவர் தலன்னு கூப்பிடறாரே!

நான்: அதனால தாங்க அவரை நாங்க தலன்னு சொல்றோம்.. எல்லாரையும் தலன்னு சொல்லுறார் இல்ல.. வேற ஏதும் பெரிசா செய்து தலைவராகிட்டார்ன்னு நினைச்சீங்களா என்ன?

அனானி: ஙே!

2.

வீட்டில் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்த நண்பர் ஒருவர் தல குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்து கொள்கிறார்..

நண்பர்: யாரு? யாரு!?

நண்பரின் நண்பர்: இஞ்ச பாரு.. ரீவியில் தெரியறவர், உங்க பாலாண்ணே மாதிரியில்ல?

நண்பர்: அட! ஆமாம்.. பாலாண்ணனே தான்.. எடு எடு, போன் போடு.. பேசுவோம்..

ந.ந.(போன் செய்து கொண்டே): கூகிளில் என் பேர் போட்டு தேடிலாம்னு சொல்லுறார்.. அது என்ன எண்டு கேட்போம்.

ந.: அது இருக்கட்டும், முதல்ல, பாகச எண்டால் என்னவெண்டு கேளு..

ந.ந. வுக்கு அதற்குள் லைன் கிடைத்துவிட்டது.. முதலில் பெயர் ஊர் கேட்கும் நிலைய ஆட்கள் போன் எடுத்து, இவரின் விவரங்களைக் கேட்டார்கள். தன் பெயர், ஊர் சொல்லிவிட்டு, அடுத்து, என்ன கேள்வி என்னும்போது, ந.ந., முதல் நண்பரிடம் விவரம் கேட்டார்...

: 'பா.க.ச எண்டால் என்ன?' எண்டு கேளு!

ந.ந.: பா.க.ச எண்டால் என்ன?

நிலைய அதிகாரி: பாகசவா? அப்படீன்னா?

ந.ந (முதல் நண்பரிடம்): பாகசவா? அப்படி எண்டால் என்ன?

: பாலபாரதியைக் கலாய்ப்போர் சங்கம்.

நிலைய அதிகாரி: அப்படி எல்லாம் இங்க கேட்கக் கூடாது சார்.. அப்புறம் பண்ணுங்க..

போனை வைத்துவிட்டார்..


3.
நிகழ்ச்சி முடிந்த பின்னர், ஒரு வயதான அம்மையார் பாலாவுக்கு போன் போட்டு: நல்லா முழிக்கிறீங்க..சார்...

யெஸ்.பா: என்னது?

அம்மையார்: எந்தெந்த கேள்விக்கு உங்களுக்குப் பதில் தெரியலைன்னு நல்லாவே புரியுது..

யெஸ்.பா: !@#!@#$


4.
திருநெல்வேலியில் மற்றொரு நிகழ்ச்சி:

அண்ணன் பாலபாரதியும், மற்றொரு நீண்ட நாள் உறுப்பினரான பாகசங்கத்தினரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

உறுப்பினர்: அண்ணே, சங்கத்தை நல்லா டெவலப் பண்ணனும்ணே.... தலைமைக் கழகத்துகிட்ட பேசிகிட்டிருக்கோம்..

யெஸ்.பா: அடப்பாவி!

அப்போது உறுப்பினரின் நண்பர் ஒருவர் வருகிறார். அவர் இந்த பேச்சு வார்த்தையைக் கேட்டு, 'அதென்ன சங்கம்?' என்கிறார்.

உறுப்பினர் சங்கக் கடமையை நினைத்து விளக்கம் கொடுத்ததும், புதியவர்:
'அண்ணே, நானும் இனிமே பா.மு.நா.பா.க.ச'

யெஸ்.பா: அடேய்.. என்னடா, இப்படித் திட்டுறே!

புதியவர்: இல்லண்ணே, நானும் பார்த்த முதல் நாளே பா.க.ச உறுப்பினராகிக்குறேன்னு சொன்னேண்ணே.. ஏதும் ஃபார்ம் இருந்தா கொடுங்கண்ணே.


டிஸ்கி:
1. மேற்குறிப்பிட்ட பேச்சுவார்த்தைகள் எதுவுமே பொய்யில்லை.. தரவு வேண்டுமெனில் ஒரு அரை மணி நேரம் பாலாவைப் பேச விட்டால் தெரிந்து விடும்.. இன்னும் இது போன்ற நிறைய கதைகளைத் தலையைப் பேச விட்டு உங்களுக்காக பதிவு செய்வதே என்னுடைய தலையாய பணி..

2. பாகசவின் புதிய உறுப்பினர்களான இவர்கள் அனைவரும் தற்போது தமிழ்வலைபதிவுகளில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்கள் அனுமதியின்றி, அவர்கள் பெயரைப் பயன்படுத்தக்கூடாதென்று அனானியாக சொல்லி இருக்கிறேன். விருப்பமிருந்தால் யார் யார் என தானே குறிப்பிட்டு மகிழலாம் ;)

Tuesday, July 10, 2007

அண்ணாச்சி சென்னை விஜயம்

எச்சரிக்கை: இது ஒரு கும்மிப் பதிவு

ஆசிப் அண்ணாச்சி சென்னை வந்ததை ஒட்டி எல்லாரும் பதிவு போட்டுக் கொண்டிருக்கையில், தாஸ் மற்றும் கவிஞர் வா.மவைத் தொடர்ந்து, இன்றைய அண்ணாச்சி பதிவாக மலர்கிறது இந்த இடுகை.

நேற்று மதியம் அண்ணாச்சியிடமிருந்து போன் வந்தது..

'அட! அண்ணாச்சி, உங்களுக்கு எப்படி இந்த நம்பர் தெரியும்?' - இது நான்

'ஆமாம், பெரிய ரகசியம், அடப் போங்க, சென்னை வந்து இறங்கியதுமே தல எல்லா நம்பரையும் அனுப்பிட்டாரில்ல.. அவர் கடைல வேலை ஏதாச்சும் பார்க்கிறாரா, இல்லை இப்படி நம்பர் அனுப்புறது தான் முழுநேரத் தொழிலான்னு சந்தேகமா இருக்கு!'

'அண்ணாச்சி, தலைமைக் கழகத்தைச் சேர்ந்த நாங்களே அடக்கமா இருக்கும், இப்படி துபாய் பாகசவிலிருந்து வந்து அநியாயத்துக்கு ஓட்டுறீங்களே!'

'தலைமைக் கழகத்தைப் பேசாம இடம் மாத்திரலாம்னு இருக்கோம். தலையை துபாய்க்கு கடத்திட்டம்னு வைங்க, அப்புறம் எங்க சிவ்ஸ்டார் ஆப்பக் கடை தான் தலைமைக் கழகம், நீங்க எல்லாம் கிளைக் கழகம் தானே?'

'என்னது துபாய்க்கு கடத்துறதா? அப்படி ஏதாச்சும் நடந்தா, நாங்க சென்னை பாகசவிலிருந்து ஏர்போர்ட் முன்னால காலவரையற்ற டீக்குடிக்கும் போராட்டம் நடத்துவோம், நினைவிருக்கட்டும்!'

'ஆமாமாம், நீங்க எல்லாம் டீ குடிக்கத் தொடங்கினதும், அதைப் பார்த்து நம்ம தலையும் டீ எங்கன்னு கேட்டுகிட்டு அந்தப் பக்கம் போயிடுவாரு.. கொஞ்சம் கஷ்டம் தான்..'

'சரி, இத்தனை தூரம் பக்கத்துல வந்துட்டீங்க, எப்ப சந்திக்கலாம்?'

'வீட்டுக்கு வாங்களேன் எல்லாரும்..'

***************

மாலை வழி கேட்டுக் கொண்டு நான், பாலா, லக்கி என்று பேரணியாக புறப்பட்டோம்.

'அண்ணாச்சி, முத்தாலம்மன்னு இங்க கோயிலே இல்லையாமே! முத்து மாரியம்மன் தான் இருக்காம்! '

'அடப்பாவி மக்கா.. நெசமாவே கெளம்பி வந்துட்டீங்களா?! இருங்க, கேட்டு சொல்லுதேன்.. அந்தக் கோயில் தானாம்!'

*************

பதினைந்து நிமிடத்துக்குப் பிறகு :

'அண்ணாச்சி, இங்க ட்ரான்ஸ்பார்மரே காணமே! ஜங்க்ஷன் பாக்ஸ் தானே இருக்கு!'

'அதான்லே துபாய்ல ட்ரான்ஸ்பார்மர்.. அப்படியே திரும்புங்கடே!'

ஒருவழியாக வீட்டுக்குப் போய் உட்கார்ந்தவுடன் அண்ணாச்சி சொன்னது: 'ஆச்சரியமா இருக்கு! என்னைக் கூட நாலுபேர் இவ்வளவு தூரம் தேடிகிட்டு வந்து பார்க்குறாங்கங்கிறதை நம்பவே முடியலை!'

'எங்களால கூட தான் நம்பவே முடியலை.. நீங்க வழி சொன்ன அழகுக்கு சரியான வீட்டுக்கு வந்திருக்கமே!'

__________________

அப்புறம்?

அப்புறமென்ன, இந்த இடுகை போலவே அரைமணி மொக்கை போட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தோம்.

இத்துடன் இன்றைய பாகச கடமை இனிதே நிறைவு பெறுகிறது.. மற்றவை நாளை

Friday, March 16, 2007

ஆண்டுவிழாக் கொண்டாட்டங்கள்

கவிதைப் போட்டி:

1. இயல்கவிதை - வாசிக்க
வழமையான வடிவம் தான். படைப்பாளி தன் கவிதையை யுனித்தமிழில்(Unicode) தட்டச்சு செய்து அனுப்பவேண்டும்.

2. இசைக்கவிதை - பாட
சில பாடல்கள் இசையோடு கேட்க இன்பம் கூட்டும். அவ்வகைக் கவிதைகளுகான (பாடல்களுக்கான) பிரிவு இது. படைக்கப்பட்ட கவிதை பாடலாக இசையோடு பதியப்பட்டு அனுப்பப்படவேண்டும்.

3. ஒலிக்கவிதை - கேட்க

சில கவிதைகள் படைப்பாளியின் உணர்வோடு கேட்க நம்மை உலுக்கியெடுக்கும்.அவ்வகைக் கவிதைகளுக்கான பகுதி இது. படைக்கப்பட்ட கவிதை படைப்பாளியின் குரலில் பதியப்பட்டு அனுப்பப்படவேண்டும்.

4. படக்கவிதை - பார்க்க

புகைப்படங்களுடக்கான கவிதை. பார்வைக்கு வைக்கப்படும் சில புகைப்படங்களுக்குப் படைப்பாளியின் கற்பனை வடிக்கும் கவிதையைத் தரவேண்டும்.

5. காட்சிக்கவிதை - இயக்க

இது ஒலி - ஒளி கவிதை. கவிதையைக் காட்சியாக்கித் தரவேண்டும்.

விதிமுறைகள்:

1. எந்தப் பிரிவுக்கும் தலைப்பு கிடையாது. எந்தத் தலைப்பின் கீழ் எழுதுவது என்பது படைப்பாளியின் விருப்பத்திற்கு விடப்படுகிறது.

2. ஒவ்வொரு பிரிவின் கீழும் ஒரு படைப்பாளி அதிகபட்சமாக நான்கு படைப்புகளை மட்டுமே அனுப்பலாம்.

3.படக்கவிதைக்கான படைப்பை அனுப்புவோர், எந்த படத்திற்கான கவிதை எனக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டுகிறோம்.அப்படிக் குறிப்பிடப்படாத படைப்புகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா.

4. படைப்பு முழுக்க முழுக்கப் புதியதாய் இருக்க வேண்டும். முன்னரே எந்த ஒரு ஊடகத்திலும் வெளிவந்த படைப்பாய் இருத்தல் கூடாது. முடிவுகள் அறிவிக்கப்படும்வரை எங்கும் படைப்பை பிரசுரித்தல் கூடாது. முடிவுகள் வெளியானதும் தாங்கள் தங்கள் கவிதைகளைப் பிரசுரம் செய்துக் கொள்ளலாம்.

5. படைப்பாளியின் பெயர், தொடர்பு எண், முகவரி ஆகியவை ஒவ்வொரு படைப்பு அனுப்பப்படும் போதும் குறிப்பிடப்பட வேண்டும். அவை எக்காரணம் கொண்டும் எங்கும் பொதுவில் வைக்கப்பட மாட்டாது என்று உறுதி அளிக்கின்றோம்.

6. படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 14-04-2007 (சனிக்கிழமை ஏப்ரல் 14, 2007 - சித்திரை மாத முதல்நாள்) இந்திய நேரம் இரவு 12.00 மணிக்குள்.

7. போட்டிக்கு வரும் படைப்புகளைப் போட்டி முடிந்ததும் அன்புடன் குழுமத்தில் பிரசுரிக்கும் அனுமதியை இப்போதே பெற்றுக் கொள்கிறோம்.

8. படைப்பை anbudan.pootti@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே அனுப்ப வேண்டுகிறோம். அன்புடன் குழுமத்துக்கு நேரடியாய் அனுப்பப்படும் படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

9. ஒலிக்கவிதை, இசைக்கவிதை, காட்சிக்கவிதை போன்றவற்றில் கோப்பின் பருமளவு (file size) அதிகமாகும் பட்சத்தில் ஏதாவது ஒரு கோப்பு மாற்று (File Share) இணைய தளத்தில் ஏற்றிவிட்டு அதைத் தரவிறக்கத் தேவையான (link) சுட்டியை மட்டும் anbudan.pootti@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் போதுமானது.

10. நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.


எங்கயோ படிச்சா மாதிரி இருக்குங்களா? இது பொன்ஸ் பக்கங்கள் ஆண்டுவிழாவுக்காக இல்லீங்க, நம்ம அன்புடன் குழுமத்தின் ஆண்டுவிழா போட்டி அறிவிப்பு :))

மேலும் தகவலுக்கு அன்புடனுக்கே போய்ப் பாருங்க :)

Tuesday, March 06, 2007

யானையாரின் அதிரடி ரிப்போர்ட்!

♠ யெஸ்.பாலபாரதி ♠


இதற்காகத் தான் சொன்னேன்
இரவு நேரங்களில்
மொட்டை மாடிக்கு வராதே என
இப்போது பார்
நட்சத்திரங்கள் வெட்கித்
தற்கொலை செய்து கொள்கின்றன.

வரவனையான்:


மாம்ஸ்!
மொட்டை மாடியிலிரூந்து
குதித்து தற்கொலை
செய்து கொண்டிருக்கலாம்
நீயும்..


ஆசிப் மீரான்:


இதனால் தான் சொன்னேன்
நீ பகலிலும் வெளியே வராதே என
கோபமாகிச் சூரியன்
என்னைச் சுட்டெரிக்கிறான்!


ஒண்ணுமில்லை, ரெண்டு நாள் முன்னால இவங்க எல்லாம் வச்சிருந்த கூகிள் சொந்த நிலை (அதாங்க, பர்சனலைஸ்டு ஸ்டேடஸ் மெசெஜ்!).

வரவனையான் காலையில் எழுதியிருந்ததையும் நினைவில் வைத்துக் கொண்டு தங்கவேலுவின் பதிவைப் படிச்சி பாருங்க.. அதில் எது பொய், எது கற்பனைன்னு தெளிவா புரியும்.. ஹி ஹி..

(ஏதோ நம்மாலானது.. குறிச் சொல்லைக் கவனிக்க... :) )

Tuesday, January 30, 2007

பெங்களூரு இன்னும் கொஞ்ச நாளில்







மெயிலில் வந்தது :)

Wednesday, January 24, 2007

அரசாங்கம் கவனிக்குமா? - 2

இங்கு பதிந்திருந்த பதிவில் எனக்கே புரியாத உள்குத்தொன்றை நண்பர் ஒருவர் கண்டுபிடித்துச் சொன்னதால், அந்தப் பதிவின் உண்மையான நோக்கம் அது இல்லை என்பதால், பதிவைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.

வேறு ஏதும் இங்கே போடும் வரை



இந்த வெட்டியானையைப் பாருங்க.. வாரேன்..





Tuesday, January 23, 2007

முத்தமிழ்க் குழுமக் கொண்டாட்டங்கள்



முத்தமிழ் குழுமம் பற்றி நண்பர்கள் பலருக்கும் தெரிந்திருக்கும். நண்பர் மஞ்சூர் ராசா, மற்றும் நம்பிக்கை குழுமத்தின் பாசிடிவ் ராமா, முதலியோர் இணைந்து நடத்தும் யுனித்தமிழ் கூகிள் குழுமம்.

பதிவெழுதத் தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே முத்தமிழ்க் குழுமத்தில் இணைய எனக்கும் அழைப்பு வந்தது. நண்பர் மஞ்சூர் ராசா புதுப் பதிவர்களை அவ்வப்போது பார்த்து இது போல் அழைப்பு அனுப்பி விடுகிறார். குழுமத்தில் சேர்ந்த புதிதில் அங்கே நடக்கும் விவாதங்களை வெறுமே படிப்பதோடு சரி. நமது ரசிகவ் ஞானியார், கீதா சாம்பசிவம், செல்வன், ஸ்ரீஷிவ், நாமக்கல்லார் எல்லாரும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த முத்தமிழ்க் குழுமத்தின் அமைதிப்படையிலேயே என்னுடைய முதல் மூன்று மாதம் கழிந்தது.

அப்புறம் நமது நண்பர் அசுரன் மற்றும் நண்பர் ராஜாவனஜ்ஜும் வந்து சேர்ந்த பின்னர் கொஞ்சம் விறுவிறுப்பான விவாதங்களுடன் பொறிபறந்து கொண்டிருந்தபோதும் முத்தமிழ்க் குழுமத்தில் நான் வெறும் அமைதிப்படை உறுப்பினர் தான். சில சிறுவர் கதைகளைத் தாண்டி எதுவும் எழுதவில்லை அங்கே.

ஆனால், முத்தமிழ்க் குழுமம் இந்த ஜனவரி 20ஆம் தேதியன்று தான் முதல் ஆண்டு முடிவைக் கொண்டாடுகிறது என்பது மிக மிக ஆச்சரியமான தகவல் எனக்கு. ஒரு வருடத்தில் எத்தனை உறுப்பினர்கள், மடல்கள், விவாதங்கள்!!! வியப்பு அகலும் முன்னரே அவர்களின் பிறந்தநாள் விழாக் கொண்டாட்டங்கள் நல்லதொரு அறிவிப்பாக வந்தது.

இதோ முத்தமிழின் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களின் அறிவிப்பு:

* இந்தப் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் முத்தமிழ் குழுமத்தில் கடந்த ஒரு வருடத்தில் எழுதப்பட்ட முக்கிய கட்டுரைகள் முத்தமிழ் வலைப்பதிவிலும், நண்பர் செல்வனின் வலைப்பதிவிலும் தொடர்ந்து இடப்படுகிறது. இதன்மூலம் பல படைப்பாளர்களுக்கு வலைப்பதிவுகளின் அறிமுகமும் அவர்களின் படைப்புகள் பரவலாக அறியப்படவும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதுமட்டுமல்லாது முக்கிய படைப்புகள் விக்கிப்பீடியாவிலும் இணைக்கப்படும்.

* ஆண்டுவிழாவை ஒட்டி, புதுமையான கட்டுரை , கவிதை மற்றும் சிறுகதை போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டிக்காக அனுப்பப்படும் கவிதை, கட்டுரை மற்றும் சிறுகதைகளுக்கு தலைப்பு எதுவும் கிடையாது, தமிழ்மொழி மற்றும் தமிழ்நாட்டைப்பற்றி இருந்தாலே போதுமானது; சொந்த அனுபவங்களையும் கூட எழுதலாம். 400 வார்த்தைகளுக்கு மிகாத படைப்புகள் படைப்புகள் முத்தமிழ் குழுமத்திற்கு வந்து சேரவேண்டிய கடைசி நாள் பிப்ரவரி 10, 2007. படைப்புகளில் ஆங்கில வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது.

படைப்புகளை muththamiz@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிவையுங்கள்

சிறந்த படைப்புகளுக்கு சிறப்பான பரிசுகள் காத்துக்கொண்டிருக்கின்றன.

* மிக மிக முக்கியமான அடுத்த அறிவிப்பு, தமிழ்நாட்டு நூலகங்களை மேம்படுத்துதல். அதாவது தமிழ்நாட்டிலுள்ள சில கிராம பள்ளிக்கூடங்களுக்கு நூலகங்கள் அமைத்து தரலாம் என முத்தமிழ்க் குழுமம் முடிவுசெய்துள்ளது. நண்பர் உமாநாத் (விழியன்) அவர்கள் பொறுப்பில் நடக்க இருக்கும் இந்த நல்ல காரியத்திற்கு புத்தகங்களாகவோ அல்லது பணமாகவோ அனுப்பி உதவ விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:



Citibank Account
Bangalore - Koramangala

A/c No. 5637000804 - Umanath

Ph numbers : 09886217301/ 09894110534 (Tn number)


Mailing Address

S.Umanath
Bluestar Infotech Limited
#7, 18th Main Road,
7th Block
Koramangala -
Bangalore - 560095



ஆக, போட்டிகள், பரிசுகள், கிராமப்புற பிள்ளைகளின் படிப்புக்கு உதவ ஒரு வாய்ப்பு... வாருங்கள் நாமும் சேர்ந்து முத்தமிழின் ஆண்டுவிழாவைக் கொண்டாடி சிறப்பாக்க உதவுவோம்..

முத்தமிழ்க் குழுமத்தின் முதல் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்களுடன், இந்த அறிவிப்பை வெளியிட அமைதிப்படை உறுப்பினரான எனக்கும் வாய்ப்பளித்தமைக்கும் என் நன்றிகள்.. இன்னும் பல பிறந்த நாள் கண்டு சிறக்கட்டும் முத்தமிழ்க் குழுமம்.

Monday, January 22, 2007

அரசாங்கம் கவனிக்க...

நண்பரின் ஆசை: பெண்களும் அர்ச்சகர் ஆக வேண்டும்

மற்றொரு நண்பரின் பதில்: பெண்கள் பூசாரியானால், அதே இடத்தில் தெய்வ பக்தி, இறைவனை நம்பாத வெறும் விருப்பம் மட்டும் இருக்கும் நபர் பூசாரி வேலையில் இருக்கும் நிலையில் பூஜை பகவானுக்கு நடக்குமா? அர்ச்சக அம்பாளை மட்டுமே விருப்பத்தால் வேலையாக ஏற்றவர் ஆறுகாலம் தாண்டியும் துதித்து பூஜை தொடர்வது தெய்வக் குத்தமாகிவிடாதா?:-)))

--------------------------

பரம்பொருள் அமர்ந்திருக்கும் கோயில்களில் பெண்கள் வேலை செய்தால், கண்டிப்பாக நிலை தவறி நடந்து கொள்வார்கள். உடன் வேலை செய்யும் ஆண்களையும், நிலை தவறி நடக்கச் செய்வார்கள் என்று நண்பர் சொல்வது எத்தனை உண்மை என்று அறிய, உடன் பணிபுரிய பெண்மோகினிகள் இல்லாமலேயே, செய்யும் தொழிலைத் தெய்வமாக எண்ணிக் கொண்டிருந்த ஆண் ஒருவரின் தொழில் பக்திக்குச் சான்று இங்கே


---------------------------

"இதே வழியில் பார்த்தால், மென்பொருளகங்களில், காவல் நிலையங்களில், கல்விக் கூடங்களில், அரசு அலுவலகங்களில், வங்கிகளில், எல்லா இடங்களிலும் ஆண்கள் அதிக நேரம் வேலை செய்வதற்கு ஒரே காரணம் வேலை மீதான பற்று கிடையாது; உடன்பணிபுரியும் எதிர்பாலினரின் மீதான பற்று மட்டுமே! ஆகவே, இந்த இடங்களில் இருந்தும் பெண்களை நீக்கிவிட்டால், எல்லாருக்குமே சராசரியாக வேலை நேரம் குறைந்து விடும்; வேலையும் ஒழுங்காக நடக்கும். " என்கிறார் நண்பர் ஒருவர்

கவனிக்குமா நமது அரசு?!!!!