Friday, August 10, 2007

பதிவர் பட்டறை - காணாமல் போன எலிக்குட்டி

இந்த விவகாரத்தைப் பற்றி இனிமேல் எழுதக் கூடாது என்று தான் நினைத்திருந்தேன்.... ஆனால் இனியும் எழுதாமல் இருந்தால் முக்கியத்துவம் குறைந்து விடுமோ என்ற பயத்தில் இப்போதே எழுதிவிடலாமே என்று..

சென்னை பதிவர் பட்டறை நிகழ்ந்த அன்று, கலந்துரையாடுபவர்களுக்கு வசதியாக முன்பக்கத்தில் ப்ரோஜக்டரில் போட்டுக் காட்ட என் மடிக் கணினியையும் கொடுத்திருந்தேன். திரும்பி அது என் கைக்கு வந்த போது, என் செல்ல எலிக்குட்டியை மட்டும் காணவில்லை.. டெல் கணினிகளில் மட்டும் இணைக்கக் கூடிய, USB முறைப்படி இணைக்கும் அந்த ஆப்டிகல் மவுஸை யாராச்சும் பார்த்தீங்களா?

கடைசியாக கிடைத்த தகவலின்படி, முதல் வரிசையில் அமர்ந்திருந்த எல்லாரும் அவரவர் பொருட்களைத் திரட்டிக் கொண்டு போன பிறகு, நம்மாட்களில் (பதிவர்களில்) யாரோ ஒருவர் தான் பத்திரமாக அதை எடுத்து வைத்ததாக சொல்லப்பட்டது..

யாராச்சும் பார்த்தீங்களா?

[பின்குறிப்பு: இந்த இடுகை மொத்தமும் என் சொந்தக் கருத்தே.. பதிவர் பட்டறை அமைப்பாளர்களுக்கும் இந்த இடுகையின் கருத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை..

டிஸ்கி 2: - அண்ணன் உண்மைத்தமிழனுக்காக.. - இந்த இடுகையின் மூலம் யாரையும் கோபிக்கவில்லை.. யாருடையது என்று தெரியாமல் பத்திரப்படுத்தி இருந்தால், என்னுடையது என்று விளக்கவே இந்த இடுகை.. ]

27 comments:

 1. துளசி கோபால் said...

  அடப்பாவமே........... வேணுமுன்னா எங்க ஜிகே வை அனுப்பவா? கண்டுபிடிச்சுத் தர்றதுக்கு?

  ச்சும்மா:-)

  நம்மாட்கள்தான் யாராவது பத்திரமா எடுத்து வச்சுருப்பாங்க.

 2. லக்கிலுக் said...

  பொதுவாக எலிக்குட்டிகள் சுட்டியானவை. பரபரப்பாக அங்கும் இங்கும் ஓடிக்கொண்டேயிருக்கும். தேவைப்பட்டால் தன் அணில் (எலி) பற்களால் பாயையோ அல்லது ஏதாவது துணிமணியையோ கடித்து வைத்துவிடும்.

  எலி ஜூரம் என்று சென்னையில் ஒரு ஜூரம் வரும். ஒரு முறை எனக்கும் வந்தது. அந்த ஜூரத்துக்கும் எலிக்குட்டிக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று என்னை பரிசோதித்த மருத்துவர் சொன்னார்.

  எலிக்குட்டிகளில் பலவகை உண்டு. பெருசாளிக்குட்டியும் பார்க்க சாதாரண எலிக்குட்டியைப் போலவே இருக்கும். மூஞ்சூறு வளர்ந்தால் கூட குட்டியாகவே இருக்கும்.

  எலிக்குட்டி அங்கும் இங்கும் சுறுசுறுப்பாக தேனீயைப் போலவே இயங்கிக் கொண்டிருக்கும் என்பதால் உங்கள் எலிக்குட்டி எங்கேயாவது ஓடிவிட்டிருக்கலாம். அல்லது எலிக்குட்டி சோதனை செய்பவர் யாராவது சோதனை செய்து, ரிசல்ட் கடுப்பேற்றியிருந்தால், அந்த எலியை பலி வாங்கியிருக்கலாம்.

  வலையுலகில் எது எதுக்கோ நீங்களெல்லாம் எலிக்குட்டியை யூஸ் பண்ணுவதைப் பார்த்தால் பாண்டிய மன்னன் செண்பகப் பாண்டியன் சொல்லுவதைப் போல "என்னடா இது எலிக்குட்டிக்கு வந்த சோதனை?" என்று சொல்ல வேண்டும் போலிருக்கிறது.

  எலிக்குட்டி சம்பந்தமான மேலதிக விவரங்களுக்கு எலிக்குட்டி கொண்டு இப்பதிவினை சோதனை செய்யவும்.

 3. We The People said...

  //[பின்குறிப்பு: இந்த இடுகை மொத்தமும் என் சொந்தக் கருத்தே.. பதிவர் பட்டறை அமைப்பாளர்களுக்கும் இந்த இடுகையின் கருத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.. ]//

  பொன்ஸ் ரெம்ப பயந்து போயிருக்க போல... ஐயோ!பாவம்!! ;)

  பி.கு: அந்த எலிக்குட்டிக்கு எனக்கு எந்த கனெக்ஷனும் இல்லை, நான் பார்க்கவும் இல்லை :D

 4. TBCD said...

  எலிக்குட்டிய தூக்கிக்கிட்டு போன பூனை யாருப்பா..

  //*[பின்குறிப்பு: இந்த இடுகை மொத்தமும் என் சொந்தக் கருத்தே.. பதிவர் பட்டறை அமைப்பாளர்களுக்கும் இந்த இடுகையின் கருத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.. ]*//

  உஷாராத்தான் இருக்காங்க...அதுக்காக விட்டுட முடியும்மா...

 5. இம்சை said...

  பூனை தான் சுட்டிடுசி

 6. இம்சை said...

  sorry பூனை தான் சாப்பிட்டிசி

 7. உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

  அம்மணி..

  நானும் செல்லாவும், நந்தாவும்தான் கடைசியா பேக்கப் பண்ணிட்டு வெளில வந்தோம்.

  உங்க மடிக்கணினியை நான்தான் வெளில என் கைல எடுத்திட்டு வந்து வாசல்லஇ இருந்த டேபிள்ல வைச்சுட்டு பக்கத்துல நின்றிருந்தேன்.

  ஆனால் மவுஸ்..? உள் அரங்கத்தில் அதை பார்த்ததாக எனக்கு ஞாபகமில்லை. கண்ணில் பட்டிருந்தால் நிச்சயம் எடுத்து வந்திருப்பேன்..

  ஸாரி அம்மணி.. யாரையும் கோச்சுக்காதீங்க..

  நான் அப்பவே உங்ககிட்ட இதைச் சொல்லிட்டேன்..

  என் யூகம், யாராவது ஒருவர் தன்னுடையது என்று நினைத்து கொண்டு சென்றிருக்கலாம். அல்லது பேக்கப் செய்யும்போது அவர்களிடத்தில் போய் ஒட்டியிருக்கலாம்.

  எது எப்படியிருந்தாலும், வலைப்பதிவுப் பட்டறைக்காக ஒரு எலிக்குட்டியைத் தியாகம் செய்த பொன்ஸ் அம்மணி அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் உரித்தாகுக..)))))))

 8. நந்தா said...

  சத்தியமா அந்த எலிக்குட்டியை நான் எடுக்கலை...

 9. பொன்ஸ்~~Poorna said...

  //ஸாரி அம்மணி.. யாரையும் கோச்சுக்காதீங்க.. //
  உண்மைத்தமிழன், உங்க கிட்ட எனக்கு இது தாங்க பிடிக்கிறதில்ல.. யாரையும் கைகாட்டாமல், குற்றம் சொல்லாமல் தானேங்க இந்த இடுகை எழுதிருக்கேன்.. இங்க வந்து யாரையும் கோச்சிக்காதீங்க என்றால் என்னங்க அர்த்தம்? என்னவோ போங்க..

 10. நந்தா said...

  எனக்கு என்னமோ இந்த பதிவுல நிறைய்ய உள்குத்து இருக்குதோன்னு தோணுது....

  இதைப் பற்றி தமிழ் தெரிந்த அறிஞர்கள் யாரேனும் ஆராய்ந்து விளக்கம் சொன்னால் பரவாயில்லை.

  பி.கு: இந்த பின்னூட்டத்தில் எந்த உள்குத்தும் இல்லை. :-)

 11. எட்டி பார்த்த அனானி said...

  //நான் அப்பவே உங்ககிட்ட இதைச் சொல்லிட்டேன்..
  //

  அதை சொல்றப்போ க.ர.அதியமான் சாரும் பக்கத்துலே இருந்தாரு.

 12. Anonymous said...

  அப்டியே என்னோட சாக்பீஸ யாராவது எடுத்தீங்களான்னும் சொல்லிடுங்க?.

  சாக்பீஸைத் தொலைத்தவன்

 13. உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

  இதுக்குத்தான் நான் யாருக்கும் 'வில்லங்கமால்லாம்' கமெண்ட்ஸ் போடுறதில்ல..

  நீங்கதான் போடுங்க.. போடுங்கன்னீங்க.. இப்ப நீங்களே திட்டுறீங்க..

  என்னமோ அம்மணி.. என்னைய பார்த்தா எல்லாருக்கும் ஒரு மாதிரியாத்தான் இருக்கு..

 14. Dmax online said...

  இதற்கு எலிக்குட்டி கிடைக்காதா..?

 15. முத்துலெட்சுமி said...

  யானைக்கு நியாபகசக்தி நிறையவாம்..
  பட்டறக்கு போகும் போது உங்க யானை யை கூட்டிட்டு போயிருந்தா நியாபகமா எல்லாத்தையும் எடுத்து வச்சிருக்கும்.. இல்ல.:)

 16. J K said...

  ஆமாங்க, நான் கூட உங்க பொட்டிய மட்டும் பார்த்தேன், ஆனா எலிகுட்டியவோ, பெரிய எலியவோ நான் பார்க்கலை, பாக்கல, பாக்கல...

 17. siva gnanamji(#18100882083107547329) said...

  Eligy ஒன்று எழுதிடுங்க.

 18. கோபிநாத் said...

  பொன்ஸ்க்கா உங்களுக்கா இப்படி எல்லாம் நடக்க வேண்டும் ;-((

 19. Anonymous said...

  லக்கி அடங்க மாட்ட போல.

 20. எதுக்கும் ஜகா வாங்காதவன் said...

  அம்மணி..

  வருத்த படதப நமகு வேண்ட பாய் இருக்கார் பா

  சொன்னா வச்சிக சுனீயம் வச்சி சொல்லிடுவார் பா

  ஒ எலியை எடுத்தது யார இருந்தாலும் மாட்டிகுவாங்க னைனா

  பேட்டையான்ட வருபோது பதிவர் பட்டறை காலடி மண் எடுத்தா

 21. எதுக்கும் ஜகா வாங்காதவன் said...

  "அந்த ஆப்டிகல் மவுஸை யாராச்சும் பார்த்தீங்களா?"

  எம்மா,, ஆப்டிகல் மவுஸைசுனா காண்ணாடி போட்ட

  வயசான எலியா பா.

 22. குசும்பன் said...

  அன்புள்ள JK நீங்கள் கூரியரில் அனுப்பிய Dell கணினியில் பயன்படுத்த கூடிய எலி குட்டி கிடைக்க பெற்றேன் மிக்க நன்றி, ஜிடாக்கில் நான் உங்களிடம் இதை மட்டும் என்ன செய்வது என்றதற்கு நீங்கள் அடுத்த முறை டெல் கண்னியையே அனுப்புவதாக சொன்னீர்கள், அதற்காக காத்துகொண்டு இருக்கிறேன்.

  என்றும் அன்புடன்
  குசும்பன்

  டிஸ்கி: இந்த பதிவுக்கு இந்த பின்னூட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. :) இது எனது சொந்த அக்மார் ISO 9001 அங்கீகாரம் பெற்ற என் கருத்து.

  டிஸ்கி2: அண்ணன் JKக்குகாக இந்த பின்னூட்டம் மூலம் அன்பளிப்பை உலகுக்கு தெரிவிப்பதே என் நோக்கம்.

  (பின்னூட்டத்துக்கே டிஸ்கியா அடங்கொக்கமக்கா) அப்படின்னு அக்கா அடிக்க வர்றாங்க மி தி எஸ்கேப்

 23. லத்திகா சரண் said...

  பொன்ஸ் கொடுத்த புகார்க்கும் குசும்பனின் வாக்குமூலத்துக்கும் தொடர்பு இருப்பதாக முதல் கட்ட விசாரனையில் தெரியவந்துல்லது,
  இதையடுத்து தலைமறைவாக உள்ள JK வை கைது செய்ய 500 பேர் கொண்ட நடக்கும் படை முடுக்கிவிடபட்டுல்லது, விரைவில் JK கைது செய்யபடுவார்.

 24. J K said...

  குசும்ஸ், உங்களுக்கு லேப்டாப் கிடையாது. ஏன்னா என்னோட சேவைய ஊர், உலகுக்கு எல்லாம செல்லுவாங்க. ஏதோ நம்ம பெஸ்ட் பிரண்டாச்சே அப்படினு, நம்ம பொன்ஸ் அக்கா எலிய மட்டும் அனுப்பினா இப்படி பண்ணிட்டீகலே.

 25. அபி அப்பா said...

  அபிஅப்பா நீங்கள் தாயகம் வரும் போது உங்களுக்காக ஒரு எலிகுட்டி பரிசாக தருகிறேன் என தல என்னிடம் சொன்னதுக்கும் இந்த பதிவுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என தல பாலபாரதி மேல சத்தியமா தலயின் தலைல அடிச்சு சத்தியம் செய்கிறேன்!

 26. கலைடாஸ்கோப் said...

  அக்கா... பசி நேரத்துல அந்த பொட்டியை... அதாங்க லேப்டாப்பை உங்க அம்மாவிடம் கொடுத்தீர்களே... அதே மாதிரி எலியை யார்கிட்டையாவது கொடுத்தீங்களா? அவங்க பசி மயக்கத்தில வெஜிடபிள் ரைசுக்கோ, தயிர் சாதத்துக்கோ சைடு டிஷ்ஷா வைச்சு சாப்பிட்டிருக்கப் போறாங்க!
  பி.கு: தயிர்சாத பாக்கெட்டுக்குள்ளே இருந்த சின்னிஸ் மாங்கா ஊறுகாய் நல்லா இருந்தது. என்ன... பிரிக்கறதுதான் ரொம்ப சிரமமா போச்சு... அடுத்த முறை மொக்கைப் பதிவர்களிடம் பிளேடு அல்லது மொட்டைக்கத்தி கொடுத்து வெட்டிக்கொடுக்கச் சொல்லவும்.
  பி.பி.கு: பின் குறிப்பு போட்டதாலும், உணவு பற்றி பேசியதாலும் இப்போதே சொல்லி விடுகிறேன்... நான் 'தாளிக்கும் ஓசை' அல்ல!

 27. சென்ஷி said...

  :)


  unmai thamilanukku atharavai ethum kural thara venuma...

  thevaipattal intha kuralai eduthu kollungal...

  inna seytharai orukka avar naana nannyam seythu vidal

  senshe

  from sharjah