Tuesday, August 21, 2007

வலைப்பதிவர் சந்திப்பு - இந்த வாரம்..

இந்த வாரம் சென்னையில் வலைப்பதிவர் சந்திப்பு நடக்கவிருக்கிறது.

ஞாயிறு 26-ஆகஸ்ட்-2007 அன்று மதியம் அல்லது மாலை நடக்க இருக்கும் இந்த சந்திப்பின் நிகழ்ச்சி நிரல் பின்வருமாறு:

* பதிவர் பட்டறையின் அடுத்த நகர்வு குறித்து விவாதித்தல் - மா.சிவகுமார்
* டி.எம்.ஐ நிறுவனத்தின் பணிகள் குறித்த அறிமுகம் - டி.எம்.ஐ சார்பாக நண்பர்கள் சொர்ணம் சங்கரபாண்டி மற்றும் சுந்தரவடிவேல்

மேலும், இணையத்தமிழ் வளர்ச்சியில் முக்கியமான பங்குக்கு சொந்தக்காரரான நண்பர் சுரதா யாழ்வாணனும் இந்த சந்திப்பில் கலந்து கொள்கிறார்.

சந்திப்பின் இடமும் சரியான நேரமும் குறித்து சென்னைப் பட்டினத்தில்்..

<இன்று இணையம் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு முன்னோட்டமாகவும், உங்கள் நாட்காட்டியில் குறித்துக்கொள்ளவுமே இந்த அறிவிப்பு!>

16 comments:

 1. லத்திக்கா சரன் said...

  வாழ்த்துக்கள்!!!

  சென்னையில் இன்னொரு சந்திப்பு !!! பொன்ஸின் டெல் எனக்கு லேப்டாபை கொள்ளை அடிக்க அந்த JK எப்படியும் மாறுவேசத்தில் வருவார் அப்ப புடிச்சிடனும்.

 2. குசும்பன் said...

  நல்லபடியா நடக்க வாழ்த்துக்கள்!!!

  JK நம்ம டீல் நினைவு இருக்குல்ல!!!

  ம்ம்ம் டெல் டெல் டெல்:)))

 3. PRINCENRSAMA said...

  பார்த்தாச்சுங்கோ!

 4. Thamizth Thenee said...

  மிகவும் சந்தோஷம்,இடம் ,காலம்,நேரம்,அறிவித்தால் கலந்து கொள்ள,வசதியாக இருக்கும்,முகமறியா இணையக நண்பர்களின் அகமறிய ஒரு சந்தர்ப்பம்

  அன்புடன்
  தமிழ்த்தேனீ

 5. Thamizth Thenee said...

  என்னுடைய

  http://thamizthenee.blogspot
  சென்று படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள்

  அன்புடன்
  தமிழ்த்தேனீ

 6. நிலவு நண்பன் said...

  நாட்காட்டியில் குறித்துக் கொண்டேன்
  ஆனால் என்னால் வாழ்த்துக்கள் மட்டுமே தரமுடியும்

  இனிதே நடைபெற வாழ்த்துக்கள்...

 7. OSAI Chella said...

  நான் சந்திக்க விரும்பும் நபர்களில் ஒருத்தர் வருகிறார். என்னால் தான் வர இயலாது. அவர்தான் சுரதா யாழ்வாணன். அவருக்கு என் வாழ்த்துக்களை மறக்காமல் சொல்லவும்...

  அன்புடன்
  ஓசை செல்லா

 8. கோபி(Gopi) said...

  //நான் சந்திக்க விரும்பும் நபர்களில் ஒருத்தர் வருகிறார். என்னால் தான் வர இயலாது. அவர்தான் சுரதா யாழ்வாணன். அவருக்கு என் வாழ்த்துக்களை மறக்காமல் சொல்லவும்...
  //

  ரிப்பீட்டே!

 9. Anonymous said...
  This comment has been removed by a blog administrator.
 10. முரளி கண்ணன் said...

  ஆவலுடன் எதிர்பார்க்கிரேன் அனைவரையும்

 11. வவ்வால் said...

  வாழ்த்துகள்,
  பதிவர் பட்டறையை அடுத்த நிலைக்கு நகர்த்த சுறு சுறுப்பாக , களம் இறங்கியாச்சு போல. நிறைய செயல் திட்டம் எல்லாம் போடுங்க! விடக்கூடாது இதை!

  ஆனால் இதில் எங்கே இருந்து டி.எம்.ஐ யின் செயல்விளக்கம் எல்லாம் வருகிறது. ஒரு வேளை அவர்கள் தமிழ்வலைப்பதிவுகளை ஸ்பான்சர் செய்ய போகிறார்களா?
  DMI = Daughters of Mary Immaculate , கிருத்துவ மிஷன் ஆ?

 12. பொன்ஸ்~~Poorna said...

  வவ்வால்,
  போகிற போக்கில் கொளுத்திப் போடாதீர் ஐயா..
  இது தனி, அது தனின்னு தானே தனித் தனி எண்ணிட்டு காட்டிருக்கேன்..

 13. உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

  //சென்னையில் இன்னொரு சந்திப்பு !!! பொன்ஸின் டெல் எனக்கு லேப்டாபை கொள்ளை அடிக்க அந்த JK எப்படியும் மாறுவேசத்தில் வருவார் அப்ப புடிச்சிடனும்.//

  //JK நம்ம டீல் நினைவு இருக்குல்ல!!!
  ம்ம்ம் டெல் டெல் டெல்..//

  கண்ணுகளா.. நான் ஏற்கெனவே துண்டு போட்டு இடம் புடிச்சு வைச்சிருக்கேன்.. டெல் எனக்குத்தான்.. யார் கைய நீட்டினாலும் கைமாதான்.. வேண்ணா புத்சா கூட வருமே.. டெல் எலிக்குட்டி.. அதை வேண்ணா போன தபா மாதிரியே தானமா உங்களுக்குத் தரேன்.. வாங்கிக்கிட்டு போனவாட்டி மாதிரியே கமுக்கமா போயிரணுமாக்கும்..

 14. லக்கிலுக் said...

  குறுஞ்செய்தி கிடைத்தது. கட்டாயம் கலந்துக் கொள்கிறேன்.

 15. தமிழ்பித்தன் said...

  //நான் சந்திக்க விரும்பும் நபர்களில் ஒருத்தர் வருகிறார். என்னால் தான் வர இயலாது. அவர்தான் சுரதா யாழ்வாணன். அவருக்கு என் வாழ்த்துக்களை மறக்காமல் சொல்லவும்...
  //

  ரிப்பீட்டே!

  அடப்பாவிகளா வருசத்தில் எத்தனை சந்திப்புக்கள் உங்களுக்கே இது ஓவரா தெரியலை

 16. siva gnanamji(#18100882083107547329) said...

  யாரைத்தான் நம்புவதோ பேதைநெஞ்சம்

  உங்க பதிவில் சந்திப்பு நேரமும் இடமும் நிர்ணயிக்கப் படவில்லை னு
  சொல்றீங்க(வெள்ளி இரவு 8=00 மணி)

  மதியம் ஒருபதிவில்கதீட்ரல் சாலை
  ட்ரைவ் இன் உட்லேண்ட்ஸ்,5=00
  முதல் 7=00 வரை, கான்பரென்ஸ்
  ஹால்
  என்று படித்தேன்........