Tuesday, July 10, 2007

அண்ணாச்சி சென்னை விஜயம்

எச்சரிக்கை: இது ஒரு கும்மிப் பதிவு

ஆசிப் அண்ணாச்சி சென்னை வந்ததை ஒட்டி எல்லாரும் பதிவு போட்டுக் கொண்டிருக்கையில், தாஸ் மற்றும் கவிஞர் வா.மவைத் தொடர்ந்து, இன்றைய அண்ணாச்சி பதிவாக மலர்கிறது இந்த இடுகை.

நேற்று மதியம் அண்ணாச்சியிடமிருந்து போன் வந்தது..

'அட! அண்ணாச்சி, உங்களுக்கு எப்படி இந்த நம்பர் தெரியும்?' - இது நான்

'ஆமாம், பெரிய ரகசியம், அடப் போங்க, சென்னை வந்து இறங்கியதுமே தல எல்லா நம்பரையும் அனுப்பிட்டாரில்ல.. அவர் கடைல வேலை ஏதாச்சும் பார்க்கிறாரா, இல்லை இப்படி நம்பர் அனுப்புறது தான் முழுநேரத் தொழிலான்னு சந்தேகமா இருக்கு!'

'அண்ணாச்சி, தலைமைக் கழகத்தைச் சேர்ந்த நாங்களே அடக்கமா இருக்கும், இப்படி துபாய் பாகசவிலிருந்து வந்து அநியாயத்துக்கு ஓட்டுறீங்களே!'

'தலைமைக் கழகத்தைப் பேசாம இடம் மாத்திரலாம்னு இருக்கோம். தலையை துபாய்க்கு கடத்திட்டம்னு வைங்க, அப்புறம் எங்க சிவ்ஸ்டார் ஆப்பக் கடை தான் தலைமைக் கழகம், நீங்க எல்லாம் கிளைக் கழகம் தானே?'

'என்னது துபாய்க்கு கடத்துறதா? அப்படி ஏதாச்சும் நடந்தா, நாங்க சென்னை பாகசவிலிருந்து ஏர்போர்ட் முன்னால காலவரையற்ற டீக்குடிக்கும் போராட்டம் நடத்துவோம், நினைவிருக்கட்டும்!'

'ஆமாமாம், நீங்க எல்லாம் டீ குடிக்கத் தொடங்கினதும், அதைப் பார்த்து நம்ம தலையும் டீ எங்கன்னு கேட்டுகிட்டு அந்தப் பக்கம் போயிடுவாரு.. கொஞ்சம் கஷ்டம் தான்..'

'சரி, இத்தனை தூரம் பக்கத்துல வந்துட்டீங்க, எப்ப சந்திக்கலாம்?'

'வீட்டுக்கு வாங்களேன் எல்லாரும்..'

***************

மாலை வழி கேட்டுக் கொண்டு நான், பாலா, லக்கி என்று பேரணியாக புறப்பட்டோம்.

'அண்ணாச்சி, முத்தாலம்மன்னு இங்க கோயிலே இல்லையாமே! முத்து மாரியம்மன் தான் இருக்காம்! '

'அடப்பாவி மக்கா.. நெசமாவே கெளம்பி வந்துட்டீங்களா?! இருங்க, கேட்டு சொல்லுதேன்.. அந்தக் கோயில் தானாம்!'

*************

பதினைந்து நிமிடத்துக்குப் பிறகு :

'அண்ணாச்சி, இங்க ட்ரான்ஸ்பார்மரே காணமே! ஜங்க்ஷன் பாக்ஸ் தானே இருக்கு!'

'அதான்லே துபாய்ல ட்ரான்ஸ்பார்மர்.. அப்படியே திரும்புங்கடே!'

ஒருவழியாக வீட்டுக்குப் போய் உட்கார்ந்தவுடன் அண்ணாச்சி சொன்னது: 'ஆச்சரியமா இருக்கு! என்னைக் கூட நாலுபேர் இவ்வளவு தூரம் தேடிகிட்டு வந்து பார்க்குறாங்கங்கிறதை நம்பவே முடியலை!'

'எங்களால கூட தான் நம்பவே முடியலை.. நீங்க வழி சொன்ன அழகுக்கு சரியான வீட்டுக்கு வந்திருக்கமே!'

__________________

அப்புறம்?

அப்புறமென்ன, இந்த இடுகை போலவே அரைமணி மொக்கை போட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தோம்.

இத்துடன் இன்றைய பாகச கடமை இனிதே நிறைவு பெறுகிறது.. மற்றவை நாளை

6 comments:

  1. பூனைக்குட்டி said...

    //தாஸ்//

    நான் போடலை :( அண்ணாச்சி அனுமதி தரமாட்டேன்னு சொல்லிட்டார். :(

  2. பங்காளி... said...

    //இத்துடன் இன்றைய பாகச கடமை இனிதே நிறைவு பெறுகிறது.. மற்றவை நாளை//

    கடமை வீராங்கனை...:-)))

  3. obili's corner said...

    பொன்ஸ்,

    // அப்புறமென்ன, இந்த இடுகை போலவே அரைமணி மொக்கை போட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தோம். //

    அடடா! அண்ணாச்சியுடன் அரைமணிநேரம் மொக்கையா?! கொடுத்துவைச்சவங்க நீங்க! :)

  4. அபி அப்பா said...

    அண்ணாச்சி வரும் போது உப்புகண்டம் போட்டு குடுத்துவிடுங்க! கிடேசன் பார்க்கின் சார்பா வந்து ஏர்போர்டிலேயே வந்து வாங்கிக்கறேன்:-))

  5. லக்கிலுக் said...

    //ஒருவழியாக வீட்டுக்குப் போய் உட்கார்ந்தவுடன் அண்ணாச்சி சொன்னது: 'ஆச்சரியமா இருக்கு! என்னைக் கூட நாலுபேர் இவ்வளவு தூரம் தேடிகிட்டு வந்து பார்க்குறாங்கங்கிறதை நம்பவே முடியலை!'//

    அண்ணாச்சி கணக்குலேயும் வீக்கா? போனது மூணு பேரு தானே?

  6. வவ்வால் said...

    என்ன கொடுமை இது பொன்ஸ் !