Friday, March 16, 2007

ஆண்டுவிழாக் கொண்டாட்டங்கள்

கவிதைப் போட்டி:

1. இயல்கவிதை - வாசிக்க
வழமையான வடிவம் தான். படைப்பாளி தன் கவிதையை யுனித்தமிழில்(Unicode) தட்டச்சு செய்து அனுப்பவேண்டும்.

2. இசைக்கவிதை - பாட
சில பாடல்கள் இசையோடு கேட்க இன்பம் கூட்டும். அவ்வகைக் கவிதைகளுகான (பாடல்களுக்கான) பிரிவு இது. படைக்கப்பட்ட கவிதை பாடலாக இசையோடு பதியப்பட்டு அனுப்பப்படவேண்டும்.

3. ஒலிக்கவிதை - கேட்க

சில கவிதைகள் படைப்பாளியின் உணர்வோடு கேட்க நம்மை உலுக்கியெடுக்கும்.அவ்வகைக் கவிதைகளுக்கான பகுதி இது. படைக்கப்பட்ட கவிதை படைப்பாளியின் குரலில் பதியப்பட்டு அனுப்பப்படவேண்டும்.

4. படக்கவிதை - பார்க்க

புகைப்படங்களுடக்கான கவிதை. பார்வைக்கு வைக்கப்படும் சில புகைப்படங்களுக்குப் படைப்பாளியின் கற்பனை வடிக்கும் கவிதையைத் தரவேண்டும்.

5. காட்சிக்கவிதை - இயக்க

இது ஒலி - ஒளி கவிதை. கவிதையைக் காட்சியாக்கித் தரவேண்டும்.

விதிமுறைகள்:

1. எந்தப் பிரிவுக்கும் தலைப்பு கிடையாது. எந்தத் தலைப்பின் கீழ் எழுதுவது என்பது படைப்பாளியின் விருப்பத்திற்கு விடப்படுகிறது.

2. ஒவ்வொரு பிரிவின் கீழும் ஒரு படைப்பாளி அதிகபட்சமாக நான்கு படைப்புகளை மட்டுமே அனுப்பலாம்.

3.படக்கவிதைக்கான படைப்பை அனுப்புவோர், எந்த படத்திற்கான கவிதை எனக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டுகிறோம்.அப்படிக் குறிப்பிடப்படாத படைப்புகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா.

4. படைப்பு முழுக்க முழுக்கப் புதியதாய் இருக்க வேண்டும். முன்னரே எந்த ஒரு ஊடகத்திலும் வெளிவந்த படைப்பாய் இருத்தல் கூடாது. முடிவுகள் அறிவிக்கப்படும்வரை எங்கும் படைப்பை பிரசுரித்தல் கூடாது. முடிவுகள் வெளியானதும் தாங்கள் தங்கள் கவிதைகளைப் பிரசுரம் செய்துக் கொள்ளலாம்.

5. படைப்பாளியின் பெயர், தொடர்பு எண், முகவரி ஆகியவை ஒவ்வொரு படைப்பு அனுப்பப்படும் போதும் குறிப்பிடப்பட வேண்டும். அவை எக்காரணம் கொண்டும் எங்கும் பொதுவில் வைக்கப்பட மாட்டாது என்று உறுதி அளிக்கின்றோம்.

6. படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 14-04-2007 (சனிக்கிழமை ஏப்ரல் 14, 2007 - சித்திரை மாத முதல்நாள்) இந்திய நேரம் இரவு 12.00 மணிக்குள்.

7. போட்டிக்கு வரும் படைப்புகளைப் போட்டி முடிந்ததும் அன்புடன் குழுமத்தில் பிரசுரிக்கும் அனுமதியை இப்போதே பெற்றுக் கொள்கிறோம்.

8. படைப்பை anbudan.pootti@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே அனுப்ப வேண்டுகிறோம். அன்புடன் குழுமத்துக்கு நேரடியாய் அனுப்பப்படும் படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

9. ஒலிக்கவிதை, இசைக்கவிதை, காட்சிக்கவிதை போன்றவற்றில் கோப்பின் பருமளவு (file size) அதிகமாகும் பட்சத்தில் ஏதாவது ஒரு கோப்பு மாற்று (File Share) இணைய தளத்தில் ஏற்றிவிட்டு அதைத் தரவிறக்கத் தேவையான (link) சுட்டியை மட்டும் anbudan.pootti@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் போதுமானது.

10. நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.


எங்கயோ படிச்சா மாதிரி இருக்குங்களா? இது பொன்ஸ் பக்கங்கள் ஆண்டுவிழாவுக்காக இல்லீங்க, நம்ம அன்புடன் குழுமத்தின் ஆண்டுவிழா போட்டி அறிவிப்பு :))

மேலும் தகவலுக்கு அன்புடனுக்கே போய்ப் பாருங்க :)

10 comments:

  1. siva gnanamji(#18100882083107547329) said...

    பொன்ஸ் பக்கங்கள் ஆண்டுவிழாப் போட்டிகள்னு நினைச்சிட்டேன்

  2. சேதுக்கரசி said...

    அறிவிப்புக்கு நன்றி பொன்ஸ் :-)

    அன்புடனோட சேர்ந்து உங்களுக்கும் ஆண்டு விழா போல.. வாழ்த்துக்கள்.

    (நேத்து மறுமொழியிட்டேனான்னு நினைவில்லை)

  3. Jazeela said...

    ஹப்பா, எல்லா வலைப்பூவாளியின் சார்பாக நீங்க வெளியிட்ட அறிவுப்புக்கு நன்றி பொன்ஸ். நிறையப் பேர் வாசிக்கப்படும் உங்க வலைப்பூவில் இந்த அறிவுப்பு வருவதுதான் மிகப் பொருத்தம். ஆண்டுவிழாக் கொண்டாடத்திற்கு வாழ்த்துக்கள்.

  4. வெற்றி said...

    /* sivagnanamji(#16342789) said...
    பொன்ஸ் பக்கங்கள் ஆண்டுவிழாப் போட்டிகள்னு நினைச்சிட்டேன் */

    வழி மொழிகிறேன்.

    பொன்ஸ், சொன்னால் நம்புவீர்களோ தெரியாது. உங்களின் பதிவின் தலைப்பைப் பார்த்துவிட்டு, நானும் பொன்ஸ் பக்கங்களின் ஆண்டு விழா போட்டி என்றே நினைத்து வந்தேன். :))

    போட்டி இனிதே நடந்து முடிய வாழ்த்துக்கள்.

  5. சேதுக்கரசி said...

    //நிறையப் பேர் வாசிக்கப்படும் உங்க வலைப்பூவில் இந்த அறிவுப்பு வருவதுதான் மிகப் பொருத்தம்//

    அதுக்காக மத்தவங்க வலைப்பூவிலும் வரவேணாம்னு எதுவுமில்ல ;-)

    //ஆண்டுவிழாக் கொண்டாடத்திற்கு வாழ்த்துக்கள்//

    இங்கேயாவது வந்து வாழ்த்தினதுக்கு நன்றி ஜெஸிலா :-)

  6. சேதுக்கரசி said...

    நன்றி வெற்றி & சிவஞானம்ஜி.. உங்க நண்பர்களுக்கும் தகவலைத் தெரிவிக்கவும்.. நன்றி.

  7. ✪சிந்தாநதி said...

    பொன்ஸ் பக்கங்கள் ஆண்டு விழாவை முன்னிட்டு...

  8. பொன்ஸ்~~Poorna said...

    சிஜி, வெற்றி, நீங்க எல்லாம் அப்படி நினைத்துக் குழம்பணும்னு தான் தலைப்பு வச்சதே! :)

    சேது :) நன்றி :))
    [இந்தப் பதிவுக்கு முந்தைய பதிவில் இருப்பது போன்ற கவுஜகள்னா பரவாயில்லையா ;) ]

    வெற்றி, நீங்களும் கலந்து கொள்ளுங்களேன்..

    ஜெஸிலா, அப்படி இல்லீங்க, நிறைய வலைப்பூக்களில் வந்திடுச்சு.. புதுசா ஏதாவது தலைப்பு வைத்தால் பார்ப்பாங்கன்னு இந்த கொண்டாட்டம் :))

    சிந்தாநதி, வரேன்.. .:)

  9. பொன்ஸ்~~Poorna said...

    சிஜி, வெற்றி, நீங்க எல்லாம் அப்படி நினைத்துக் குழம்பணும்னு தான் தலைப்பு வச்சதே! :)

    சேது :) நன்றி :))
    [இந்தப் பதிவுக்கு முந்தைய பதிவில் இருப்பது போன்ற கவுஜகள்னா பரவாயில்லையா ;) ]

    வெற்றி, நீங்களும் கலந்து கொள்ளுங்களேன்..

    ஜெஸிலா, அப்படி இல்லீங்க, நிறைய வலைப்பூக்களில் வந்திடுச்சு.. புதுசா ஏதாவது தலைப்பு வைத்தால் பார்ப்பாங்கன்னு இந்த கொண்டாட்டம் :))

    சிந்தாநதி, வரேன்.. .:)

  10. சேதுக்கரசி said...

    //ஜெஸிலா, அப்படி இல்லீங்க, நிறைய வலைப்பூக்களில் வந்திடுச்சு//

    அதானே.. என்ன இப்படி சொல்லிப்புட்டாங்க. இங்கே பார்க்கலாம்:

    ஜெயசங்கர் - We The People
    சிந்தாநதி
    SP.VR. சுப்பையா
    டுபுக்கு - தேசி பண்டிட்
    பாஸ்டன் பாலா - கில்லி
    பொன்ஸ்
    ப்ரியன்
    நிலவுநண்பன்
    கவிநயா - ரிச்மண்ட் தமிழ்ச் சங்கம்
    நதியலை
    தனசேகர் - 1
    தனசேகர் - 2
    ஜீவாத்மா
    கவிப்ரியன்
    நெல்லை காந்த்

    இதைத் தவிர, நிலாச்சாரல் , சென்னை நூலகம் - சென்னை நெட்வொர்க் , முத்தமிழ்மன்றம் , தமிழ் மன்றம் , கவிஞர் ரமணன் வலைத்தளம், புதுச்சேரி வலைத்தளம் அப்படின்னு எல்லாப் பக்கமும் இருக்கோம்ல :-) இன்னும் சில இடங்களில் வரப்போகுது... we're working on it!