Monday, January 22, 2007

அரசாங்கம் கவனிக்க...

நண்பரின் ஆசை: பெண்களும் அர்ச்சகர் ஆக வேண்டும்

மற்றொரு நண்பரின் பதில்: பெண்கள் பூசாரியானால், அதே இடத்தில் தெய்வ பக்தி, இறைவனை நம்பாத வெறும் விருப்பம் மட்டும் இருக்கும் நபர் பூசாரி வேலையில் இருக்கும் நிலையில் பூஜை பகவானுக்கு நடக்குமா? அர்ச்சக அம்பாளை மட்டுமே விருப்பத்தால் வேலையாக ஏற்றவர் ஆறுகாலம் தாண்டியும் துதித்து பூஜை தொடர்வது தெய்வக் குத்தமாகிவிடாதா?:-)))

--------------------------

பரம்பொருள் அமர்ந்திருக்கும் கோயில்களில் பெண்கள் வேலை செய்தால், கண்டிப்பாக நிலை தவறி நடந்து கொள்வார்கள். உடன் வேலை செய்யும் ஆண்களையும், நிலை தவறி நடக்கச் செய்வார்கள் என்று நண்பர் சொல்வது எத்தனை உண்மை என்று அறிய, உடன் பணிபுரிய பெண்மோகினிகள் இல்லாமலேயே, செய்யும் தொழிலைத் தெய்வமாக எண்ணிக் கொண்டிருந்த ஆண் ஒருவரின் தொழில் பக்திக்குச் சான்று இங்கே


---------------------------

"இதே வழியில் பார்த்தால், மென்பொருளகங்களில், காவல் நிலையங்களில், கல்விக் கூடங்களில், அரசு அலுவலகங்களில், வங்கிகளில், எல்லா இடங்களிலும் ஆண்கள் அதிக நேரம் வேலை செய்வதற்கு ஒரே காரணம் வேலை மீதான பற்று கிடையாது; உடன்பணிபுரியும் எதிர்பாலினரின் மீதான பற்று மட்டுமே! ஆகவே, இந்த இடங்களில் இருந்தும் பெண்களை நீக்கிவிட்டால், எல்லாருக்குமே சராசரியாக வேலை நேரம் குறைந்து விடும்; வேலையும் ஒழுங்காக நடக்கும். " என்கிறார் நண்பர் ஒருவர்

கவனிக்குமா நமது அரசு?!!!!

213 comments:

 1. சிந்தாநதி said...

  கண்டிப்பா கவனிக்க வேண்டிய விஷயம்.

  அரசாங்கமே! உடனடியாக ஒரு சட்டம் போட்டு வேலையில் இருக்கும் பெண்களை எல்லாம் தூக்கிடுங்க..

 2. பொன்ஸ் said...

  நட்சத்திரமே கவனிச்சாச்சே.. அடுத்து அரசாங்கம் கவனிக்க வேண்டியது தான் :)

 3. யெஸ்.பாலபாரதி said...

  சும்மா இருந்த வலைதிரட்டியில பத்த வச்சுட்டீங்களே ஆத்தா...!

 4. கோவி.கண்ணன் said...

  பொன்ஸ்,
  போட்டு தாக்கும் உள்குத்து பதிவு !!!!
  :))))))))))

 5. சென்ஷி said...

  //பொன்ஸ்,
  போட்டு தாக்கும் உள்குத்து பதிவு !!!!//

  நான் இதை வழிமொழிகிறேன்

  சென்ஷி

 6. பொன்ஸ் said...

  பாலா, நானா? நான் என்ன செஞ்சேன்? எங்க செஞ்சேன்? இப்படி ஆண்களுக்காக, ஆண்களின் நன்மைக்காக, அவங்க கெட்ட பேர் எடுக்கக் கூடாதுன்னு பதிவு போட்டா என்னைப் போய் இப்படிச் சொல்றீங்களே!! ;)

  கோவி, சென்ஷி, உள்குத்து அப்டீன்னா என்னங்க? அதுக்கு பொது ளகரமா? இல்லை சாதா லகரமா? :)

 7. யெஸ்.பாலபாரதி said...

  // இப்படி ஆண்களுக்காக, ஆண்களின் நன்மைக்காக, அவங்க கெட்ட பேர் எடுக்கக் கூடாதுன்னு பதிவு போட்டா என்னைப் போய் இப்படிச் சொல்றீங்களே!! ;)
  //

  அது சரி..

  ஆண் பித்தளை????

  பிரியலையே தாயே...!

  :-((

 8. கலை said...

  :))))

 9. நாடோடி said...

  யக்கா பத்த வச்சுடேயே .. பத்த வச்சுடேயே...

 10. பொன்ஸ் said...

  பாலா,
  பெண்"ஈயத்தை" சிலர் பேரீச்சம் பழத்திற்கு விற்றுவிட்டதால், ஆணீயமாவது தப்பிக்கட்டுமேன்னு ஆண் பித்தளை ஆக்கியாச்சு..

  இதை ஒரு மோதிரம், பிரேஸ்லெட்டாவது செய்து மாட்டிக்கிடலாமில்லையா, யாரும் எடுத்து விற்கிறதுக்குள்ளே... ;)

 11. பொன்ஸ் said...

  கலை,
  வருகைக்கு நன்றி, சிரிக்கிற அளவுலயா கீது?

  நாடோடி,
  யாரு, நானா? ;)

 12. ஆமோதிப்பவன் said...

  //நாடோடி,
  யாரு, நானா? ;)
  //

  ஆமா..ஆமா..

  //யக்கா பத்த வச்சுடேயே .. பத்த வச்சுடேயே...//

  ரிபிட்..ரிபிட்..ரிபிட்..

 13. G.Ragavan said...

  இதத்தான் நானும் சொன்னேன்.

 14. சென்ஷி said...

  //அரசாங்கமே! உடனடியாக ஒரு சட்டம் போட்டு வேலையில் இருக்கும் பெண்களை எல்லாம் தூக்கிடுங்க..//

  அடுத்து பொன்ஸ் அக்கா எங்க வேலைக்கு சேர்றாப்பல.
  அனேகமா முதுமலை காட்டுலதான்னு நான் நினைக்கிறேன்..அப்போதானே நிறைய யானய பார்க்கலாம். :-))

  யாராச்சும் அடுத்து பொன்ஸ் எங்க வேலைக்கு போவாங்கன்னு சர்வே போடுங்கப்பா... :))))

  பின்குறிப்பு : இதில் எந்த உல்குத்தோ (அ) உள்குத்தோ இல்லை.

  சென்ஷி

 15. Hariharan # 26491540 said...

  பொன்ஸ்,

  குற்றம் /தவறிழைப்போரின் ஜாதியை தைரியமாக வெளிப்படுத்தி அம்பலப்படுத்தும் உங்கள் பதிவுக்குப் பாராட்டுக்கள்.

  அப்படியே தமிழகத்துப் பள்ளிகளில் ஆண்டுக்குப் பல மாணவிகளைக் கற்பழித்து பலாத்காரம் செய்கின்ற ஆசிரியர்களின் ஜாதியை வெளியிடும்படி அரசுக்கு எடுத்துரைக்க வேண்டுகிறேன்.

  தமிழகத்துக் காவல்நிலையங்களில் புகார் சொல்ல / நீதி கேட்டு தனியாக வரும் பெண்களை கற்பழிக்கும் காவலர்களது ஜாதியை பகிரங்கப்படுத்தி வெளியிடும்படி அரசிடம் அறிவுறுத்துவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

  நம்மூர் காவல்நிலையத்தில் உடன் பணிபுரியும் பெண்காவலரை மானபங்கப்படுத்தும் காவலரது ஜாதியையும் பகிரங்கப்படுத்த ஆவன செய்ய அரசைக் கேட்டுக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.

  சாராய வியாபாரி சரோஜாக்களுடன் சல்லாபம் செய்யும் சட்டம் ஒழுங்கு காக்க வேண்டிய காவலதிகாரிகள் சாதியை வெளிப்படையாக அரசு அறிவிக்கும்படியாகச் செய்வீர்கள் என நம்புகிறேன்

  நீதிக்கு உயர்ந்து ஒலிக்கும் உங்களது பெண்ணியக்குரல் பூணுல் அணிவோர் செய்கிற குற்றங்கள் என்கிற சிறு புள்ளிக்குள் மட்டுமே குறுகிவிடாது என நம்புகிறேன்.

 16. சென்ஷி said...

  //பாலா,
  பெண்"ஈயத்தை" சிலர் பேரீச்சம் பழத்திற்கு விற்றுவிட்டதால், ஆணீயமாவது தப்பிக்கட்டுமேன்னு ஆண் பித்தளை ஆக்கியாச்சு.. //

  பெண்களை வெறும் பாத்திரமாய் கருதாமல்தான் ஈயத்தை எடுத்திருப்பார்கள். இது தெரியாமல் எங்களை பித்தளை ஆக்கிவிட்டீர்களே. :)


  ஆண்குலம்
  விலை போவது
  சிரமம்.
  பித்தளை ஆகிவிட்டான்..
  (உபயம் :பொன்ஸ்)

  எப்படி நம்ம கவுஜ

 17. செந்தில் குமரன் said...


  பெண்கள் போகப் பொருளாக மட்டும் பார்க்க வேண்டும் என்பது எல்லா மதங்களிலும் எழுதப்பட்ட விதி.


  கிறிஸ்துவத்தில் பெண்கள் படித்திருந்தார்கள் என்பதால் அவர்களைக் சூனியக்காரிகள் என்ற பெயரில் கொளுத்தினார்கள்.

  ஹரிஹரனும் இஸ்லாமும் ஒரே கருத்தைத் தான் சொல்கிறார்கள். பெண்கள் போகப் பொருள் ஆகவே பர்தா போட வேண்டும் என்கிறது இஸ்லாம். ஹரிஹரன் ஏன் பர்தா போட்டு வெளியே விடணும்? வீட்டுக்குள்ளேயே அடைச்சிடுவோங்கறாரு.

  சாத்தான் சொல்லை புனிதமாக கருதுபவர்களிடம் இருந்து வேறொன்றும் எதிர்பார்க்க முடியாது.

  இது இப்படி எல்லாம் இருந்தாலும் இதை எல்லாம் கண்டுக்காம தான் மக்கள் இருப்பாங்க.

  இது சொல்லும் வழியில் சென்று ஞானம் வேற அடையறாங்களாம் சிரிப்பு தான் வருது.

  இன்னும் இதை எல்லாம் குறை சொன்ன உம்மாச்சி கண்ணைக் குத்தீடும், நரகத்தில் தூக்கிப் போட்டுவாங்கன்னு பூமியை நரகமாக்கிட்டு இருக்காங்க.

 18. பொன்ஸ் said...

  ஹரிஹரன்,

  //குற்றம் /தவறிழைப்போரின் ஜாதியை தைரியமாக வெளிப்படுத்தி அம்பலப்படுத்தும் உங்கள் பதிவுக்குப் பாராட்டுக்கள். //

  என்னுடைய இந்தப் பதிவில், எந்த வார்த்தை எந்தச் சாதியைக் குறிக்கிறது?

  //நீதிக்கு உயர்ந்து ஒலிக்கும் உங்களது பெண்ணியக்குரல் பூணுல் அணிவோர் செய்கிற குற்றங்கள் என்கிற சிறு புள்ளிக்குள் மட்டுமே குறுகிவிடாது என நம்புகிறேன். //
  இது பெண்ணியக் குரல் அல்ல. ஆண் பித்தளைக் குரல். ஏற்கனவே பதிவு செய்து விட்டேன்.

  நீங்கள் இந்தப் பதிவு சொல்வதை மிக மிக கவனமாக திசை திருப்புவதாக தெரிகிறது.

  என்னுடைய பதிவில்
  1. எந்தச் சொல் சாதியைக் குறிக்கிறது?
  2. எந்த இடத்தில் பூணூல் அல்லது பிராமண அடையாளங்கள் தெரிக்கின்றன?
  3. எந்த இடத்தில் வேறு எதாவது ஒரு சாதியின் அடையாளம் தென்படுகிறது?
  இதை மட்டும் தயவு செய்து விளக்க வேண்டுகிறேன்.. -

 19. பொன்ஸ் said...

  ஆமோதிப்பவன்,
  இதெல்லாம் டூ மச்சுங்கண்ணா..

  ஜி.ரா. :)

  //யாராச்சும் அடுத்து பொன்ஸ் எங்க வேலைக்கு போவாங்கன்னு சர்வே போடுங்கப்பா//
  சென்ஷி,
  இதுக்கெல்லாம் நாங்க அசர மாட்டோம்ல.. தனியா ஒரு பெண்கள் மென்பொருளகம் தொடங்கி தனியா வேலை செய்யத் தொடங்கிடுவோம்ல. ஆண்கள் நாட் அலவுட்.

  ஆமாம், ஐஸ் நடிக்கும் பிளாட்டினம் விளம்பரங்கள் பார்த்ததில்லையா நீங்க? பிளாட்டினம் பொன்னை விட விலையதிகம் தெரியுமில்ல? உங்களை நான் எத்தனை உயர்வா நினைச்சு பதிவு போடுறேன், இப்படிப் பேசுறீங்களே :))

  செந்தில்குமரன்,
  என்னங்க, இவ்வளவு பேசுறீங்க, உம்மாச்சி கண்ணைக் குத்திடப் போகுது :)

 20. Hariharan # 26491540 said...

  //நீங்கள் இந்தப் பதிவு சொல்வதை மிக மிக கவனமாக திசை திருப்புவதாக தெரிகிறது.//

  என்னங்க பொன்ஸ், இப்படி திசை திருப்பிட்டீங்க :-))

  //என்னுடைய பதிவில்
  1. எந்தச் சொல் சாதியைக் குறிக்கிறது?
  2. எந்த இடத்தில் பூணூல் அல்லது பிராமண அடையாளங்கள் தெரிக்கின்றன?
  3. எந்த இடத்தில் வேறு எதாவது ஒரு சாதியின் அடையாளம் தென்படுகிறது?
  இதை மட்டும் தயவு செய்து விளக்க வேண்டுகிறேன்..//

  தங்களது பதிவில் தொழில் பக்திக்குச் சான்று இங்கே என்று தந்திருக்கும் சுட்டியில் இருப்பது மேற்சொன்ன மூன்றையும் சொல்கிறது.

  எனவேதான் குற்றங்களை சாதிய அடையாளத்தோடு வெளிப்படுத்தும் பாங்கு (நிச்சயமாகப் பலனளிக்கும் பாங்கு என்பது என் கருத்து) என்பதை பூணூல் சாதியை மட்டும் சுட்டுவதுடன் இல்லாமல் இதர பெண்களுக்கெதிரான பாலியல் மற்றும் கொடிய குற்றங்களைச் செய்வோரது சாதியை வெளிப்படுத்தி ஒலிக்கட்டும் உங்கள் குரல் என்கிறேன்.

  பூணூல் குற்றத்தைச் சுட்டியதை இருகரம் கூப்பி வரவேற்கிறேன். இவர்கள் முதலில் இப்பணியிலிருந்து நீக்கப்படவேண்டியவர்க்ள் என்பதில் மாற்றுக்கருத்து எனக்கில்லை.

  இம்மாதிரியே சாதி அடையாளங்களுடன் குற்றவாளிகள் ஊடகங்களில் பொதுவில் தோலுரிக்கப்படவேண்டும் என்பது எனது கருத்து.

  வெறும் பூணூலை மட்டும் காட்டுவதும், அதைச் சுட்டியாக்கிப் பதிவதும் என்றிருக்கமாட்டீர்கள் என நம்புகிறேன்.

  நீங்கள் சாதி, பூணூல் என்று வார்த்தைகளில் சொல்லாமல் இன்னொரு பதிவின் சுட்டியை இணைத்து தந்து இருப்பது அக்கருத்தில் உங்களுக்கு ஒப்புமை இல்லை என்றால் அது சொ.செ.சூ :-))

 21. Hariharan # 26491540 said...

  //ஹரிஹரனும் இஸ்லாமும் ஒரே கருத்தைத் தான் சொல்கிறார்கள். பெண்கள் போகப் பொருள் ஆகவே பர்தா போட வேண்டும் என்கிறது இஸ்லாம். ஹரிஹரன் ஏன் பர்தா போட்டு வெளியே விடணும்? வீட்டுக்குள்ளேயே அடைச்சிடுவோங்கறாரு.//

  செந்தில் குமரன் நான் சொன்னது மீண்டும் உங்களுக்கு ரிபீட்டு

  "கோவிலில் பெண்கள் அர்ச்சகராகின்ற சூழலில், அதே கோவிலில் வட்ட, மாவட்ட அரசியல் தலைமையின் பரிந்துரையில், கையூட்டுத் தந்து அரசினால் நியமிக்கப்பட்ட, இப்பணியில் விருப்பமுடைய நபர் அர்ச்சகராக வரும் நிலையில் தழைப்பது ஆன்மீகமாக இருக்குமா? கோவில் இன்னொரு ஆர்டிஓ ஆபீஸ் ஆகும். இத்தகையவர் பணியிடத்தில் இருக்கும் பெண்களை ஆறுகாலம் தாண்டியும் துதித்துப் பூஜிப்பது தெய்வகுத்தம் இல்லையா என்பதே நான் கேட்பது."

  இங்கே தெய்வக்குத்தம் என்பது ஸ்மைலியோடு கேட்கப்பட்ட நக்கல் Dogmatic கட்டளையாக நீங்கள் எடுத்துக்கொண்டால் பதில் இன்னொரு சிரிப்பான் :-))

  பெண்களுக்கு இதுதான் உடனடித் தேவையாக இருக்கிறதா என்பதுதான் எனது நிலைப்பாடு.

  பர்தா, இஸ்லாம்னு எனக்குத் தெரியாத சம்பந்தம் இல்லாததை நீங்களாக கற்பனை செய்து கொள்வதற்கு இன்னொரு சிரிப்பான் :-))

 22. பொன்ஸ் said...

  //நீங்கள் சாதி, பூணூல் என்று வார்த்தைகளில் சொல்லாமல் இன்னொரு பதிவின் சுட்டியை இணைத்து தந்து இருப்பது அக்கருத்தில் உங்களுக்கு ஒப்புமை இல்லை என்றால் அது சொ.செ.சூ :-)) //
  :) பூணூல் பேசும் பதிவுடன் கூடவே, திரா'விடம்' பேசும் உங்களின் பதிவொன்றின் சுட்டி கூட அங்கே உள்ளதே ஹரிஹரன்! அதன் மூலம், மற்ற சாதியினர் அர்ச்சகர் ஆவதை நானும் விரும்பவில்லை என்று நிரூபிக்கப் புறப்படமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

  அத்துடன், நீங்கள் பட்டியலிட்டிருக்கும் சாதிக்காரர்களைப் பற்றிய விவரணைகள் இருந்தால், அவற்றின் சுட்டிகளையும் தந்துதவ வேண்டுகிறேன். சேர்ப்பதில் எனக்கென்ன துன்பம் இருக்கக்கூடும்?!

  இந்தப் பதிவின் முக்கிய நோக்கமே, ஆண்கள், சிரத்தையாக தம் வேலையில் கவனம் செலுத்தும் போது அவர்கள் கவனத்தைக் கலைத்து, அவர்கள் வேலைநேரத்தை அதிகரிக்கும் துரோகிகளான பெண் மோகினிகள் எந்த நாட்டிலும் வேலையில் இருக்கக் கூடாது என்ற நல்லெண்ணமே.

  நீங்கள் பூசும் சாதிச் சாயம் எதுவும் இந்தப் பதிவில் ஏறாது என்று நம்புகிறேன்.

 23. பங்காளி... said...

  "ஈயத்தப் பார்த்து இளித்ததாம் பித்தாளை"...ன்னு ஒரு பழமொழி எங்கூரு பக்கம் சொல்லுவாய்ங்க....எபப்டிடா இதெல்லாம்னு இம்புட்டு வருசமா மண்டய ஒடச்சும் பலனில்லை.....

  இப்ப இந்த அரிய சந்தேகத்தை தீர்த்தவைத்த தாயே....வாழிய நீ பல்லாண்டு.

 24. பங்காளி... said...

  "ஈயத்தப் பார்த்து இளித்ததாம் பித்தாளை"...ன்னு ஒரு பழமொழி எங்கூரு பக்கம் சொல்லுவாய்ங்க....எபப்டிடா இதெல்லாம்னு இம்புட்டு வருசமா மண்டய ஒடச்சும் பலனில்லை.....

  இப்ப இந்த அரிய சந்தேகத்தை தீர்த்தவைத்த தாயே....வாழிய நீ பல்லாண்டு.

 25. சென்ஷி said...

  திரு ஹரிஹரன் அவர்களுக்கு,
  நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைவருமே ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்களே - ஆண்கள்.

  பொன்ஸ்,

  சில ஆண்கள் (அ) மனிதர்கள் செய்யும் தவறுகள் சபையேறாமல் போவதற்கு காரணம் அவர்கள் பெரிய மனித போர்வையில் இருப்பதனால்தான். போர்வை விலகும் போதிலும் முதலில் பத்திரிகைகள் பெண்களை (அ) பாதிக்கப்பட்டவர்களை குறி வைத்தே வெளிச்சம் பாய்கிறது.
  சட்டம் தரும் தண்டனை ஆண்களுக்கு என்றால்.. பெண்ணுக்கு எது நிம்மதி, அவள் பெயர் தின, வாரப் பத்திரிகையில் இடம் பெற்றதா?

  தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது என்றது - இஸ்லாம்

  தாயின் சிறந்ததொரு கோயில் இல்லை என்றது - இந்துத்துவம்

  அன்பே மிகச்சிறந்த மருந்து என்றவர் - இயேசு

  இம் மும்மதம் மட்டுமல்ல உலகின் அனைத்து மதங்களுமே பெண்களை உயர்வாகத் தான் சொல்லிவைத்தன.

  தனிப்பட்ட முறையில் பெண்களால் முடியாது என்ற அவச்சொல்லை நீக்க போராடி வென்ற வரலாறுகள் ஏராளம்.

  என்னுடைய கருத்து - பெண்கள் அர்ச்சகர் ஆக வேண்டாம் என்போரே. எப்போதும் அவர்களே பெருந்தெய்வங்கள்.


  என்னுடைய கவிதை:

  கர்ப்பகிரகத்திற்கு
  அனுமதி மறுத்தாய்..
  கர்ப்பப்பை
  நீ சுமந்து காட்டேன்..

  உன் சுமையை
  பெரிதாய் எண்ணவில்லை
  ஆனால்
  என் சுவடுகளை
  ஏன் அழிக்கின்றாய்?


  காதலுக்கு
  காமத்துக்கு
  பால் ஊட்ட
  தோள் கொடுக்க
  மட்டுமல்லாது
  உன் பூஜையிலும்
  பெண்கள்
  தெய்வமாக,
  அவள்
  உன் தரிசனத்துக்கு மட்டுமல்ல...

  சென்ஷி

 26. Hariharan # 26491540 said...

  ஈயம், பித்தளை ரெண்டுக்கும் பேரீச்சம்பழம் கிடைக்கும்ங்க.

  பித்தளைக்குடம், தவலையாத் தந்தா ஏதோ ஒண்ணு/ரெண்டுகிலோ பேரீச்சம்பழம் குடம்சுமந்ததுக்கு கிடைக்கும்.

  பொன்ஸ்ன்னு பேர் ஆனா பித்தளைமோதிரம்,பிரேஸ்லெட்ன்னு மாந்தோப்புக்கிளியே சுருளி ரேஞ்சுக்கு கஞ்சமா இருக்கீங்க. கொஞ்சம் தயை பண்ணுங்க தாயீ!

  யப்பா மீண்டும் நகைச்சுவை/ நையாண்டி டிராக்குக்கு உங்க பதிவை சீரியஸா எடுத்துவந்துட்டேனுங்க!

  பழிபாவத்துக்கு பயப்படுறவனுங்க நானு!
  எதுக்கும் ரிசர்வ்ல இருக்கட்டும் இந்த ரெண்டு சிரிப்பான்ஸ் :-)) :-))

 27. பங்காளி... said...

  நண்பர் ஹரிஹரனை நினைத்து ரொம்ப வருத்தமாயிருக்கிறது.எப்படி இருந்த இவரு இப்படி ஆயிட்டாரேன்னு....

  எதுக்கு இம்புட்டு டென்சன்....இருப்பது ஒரு வாழ்க்கை...சந்தோஷமாய் களிப்போம் நண்பரே!

 28. யெஸ்.பாலபாரதி said...

  //"ஈயத்தப் பார்த்து இளித்ததாம் பித்தாளை"...ன்னு ஒரு பழமொழி எங்கூரு பக்கம் சொல்லுவாய்ங்க....எபப்டிடா இதெல்லாம்னு இம்புட்டு வருசமா மண்டய ஒடச்சும் பலனில்லை.....

  இப்ப இந்த அரிய சந்தேகத்தை தீர்த்தவைத்த தாயே....வாழிய நீ பல்லாண்டு.///


  ரீபிட்டே... பாங்காளிக்கு ஜே! பழமொழியை மறந்து குழம்பிக்கிட்டு இருந்தேன்.

  :-))

 29. செந்தில் குமரன் said...

  ///
  "கோவிலில் பெண்கள் அர்ச்சகராகின்ற சூழலில், அதே கோவிலில் வட்ட, மாவட்ட அரசியல் தலைமையின் பரிந்துரையில், கையூட்டுத் தந்து அரசினால் நியமிக்கப்பட்ட, இப்பணியில் விருப்பமுடைய நபர் அர்ச்சகராக வரும் நிலையில் தழைப்பது ஆன்மீகமாக இருக்குமா? கோவில் இன்னொரு ஆர்டிஓ ஆபீஸ் ஆகும். இத்தகையவர் பணியிடத்தில் இருக்கும் பெண்களை ஆறுகாலம் தாண்டியும் துதித்துப் பூஜிப்பது தெய்வகுத்தம் இல்லையா என்பதே நான் கேட்பது."
  ///

  நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு நிஜமா புரியல. இந்தப் பதிவோட நோக்கம் என்ன தெரியுமா? பெண்ணடிமைத்தனத்தை உள்வாங்கி அதனை மையப்படுத்தி எழுதப் பட்டிருக்கும் உங்கப் பதிவை பத்தி சொல்ல.

  நான் என்ன சொல்லி இருக்கேன் உங்களுக்கு பெண்ணடிமைத்தனம் naturala வரணும் ஏனெனில் மதங்கள் அதைத்தான் போதிக்கிறது என்பது தான்.

  சதி, பெண்களை மறுமணம் செய்ய விடாமல் மொட்டை போட்டதுல இருந்து எத்தனையோ கொடுமைகளை மதவாதிகள் செய்திருக்கிறார்கள். அவர்கள் சொன்ன சொல்லை அப்படியே பின்பற்றுபவர் நீங்கள் வேறு எப்படி இருப்பீர்கள் என்றுதான் சொல்ல வந்தேன்.

  மத்தபடி உண்மையில் இந்த விஷயத்தில் நீங்களும் இஸ்லாம் மதத்தை சார்ந்தவர்களும் ஒரே மாதிரி தான் சிந்திக்கிறீங்க.

  இல்லைன்னு சொல்லுவீங்க நான் இதை எல்லாம் நிரூபிக்க முடியாது. இதெல்லாம் self realization மூலமாகதான் அடைய முடியும் முடிஞ்சா யாருக்கும் துன்பம் வராத வகையில் செயல் படுகிறேனா என்று self realize செய்து பாருங்கள். இதற்கு மேல் no விவாதம்.

 30. யெஸ்.பாலபாரதி said...

  /கர்ப்பகிரகத்திற்கு
  அனுமதி மறுத்தாய்..
  கர்ப்பப்பை
  நீ சுமந்து காட்டேன்..

  உன் சுமையை
  பெரிதாய் எண்ணவில்லை
  ஆனால்
  என் சுவடுகளை
  ஏன் அழிக்கின்றாய்?


  காதலுக்கு
  காமத்துக்கு
  பால் ஊட்ட
  தோள் கொடுக்க
  மட்டுமல்லாது
  உன் பூஜையிலும்
  பெண்கள்
  தெய்வமாக,
  அவள்
  உன் தரிசனத்துக்கு மட்டுமல்ல...
  //
  ஆகா.. எப்படியோ... கூட்டத்துல ஒரு நல்ல கவிஜ கிடைச்சுப்போச்சு.!

 31. Hariharan # 26491540 said...

  //நண்பர் ஹரிஹரனை நினைத்து ரொம்ப வருத்தமாயிருக்கிறது.எப்படி இருந்த இவரு இப்படி ஆயிட்டாரேன்னு....//

  வருத்தப்பட எதுவுமே இல்லை பங்காளி. நான் எப்படியிருந்தேன் இப்படிஆயிட்டேன்னு எனக்கே தெரியலை.. கவலையுமில்லை எனக்கு நீங்க டென்சன் ஆகாதீங்க சாமி...

  //எதுக்கு இம்புட்டு டென்சன்....இருப்பது ஒரு வாழ்க்கை...சந்தோஷமாய் களிப்போம் நண்பரே!//

  கருத்தைப் பரிமாறிக்கொள்வது என்பது டென்சனான விஷயமாகக் கருதவில்லை. மாற்றுத்தரப்புக் கருத்துக்களை அறிந்துகொள்ளவே வலைப்பூ /பதிவுகள் என்பது என் கருத்து. சந்தோஷமாய்த்தான் வாழ்க்கையை அனுபவிக்கிறேன் நண்பர் பங்காளி

 32. பொன்ஸ் said...

  குழந்தாய் பங்காளி,
  அவ்வப்போது இது போன்ற அருளுரைகளை எடுத்து விடுகிறோம்.. கவனமாக சேகரித்துக் கொள்ளவும்.. பின்னால் ஆசிரமம் அமைக்கும் போது உதவும் ;)

  சென்ஷி, வர வர பெரிய கவிஞர் ஆய்கிட்டே இருக்கீங்க.. இந்தக் கவிதை நல்லா இருக்கு உங்க பதிவில் போட்டுக்குங்க..
  அத்தோட, வேலைக்குப் போகும் பெண்ணுக்கு நிம்மதி அவளை கூட வேலை செய்யும் ஆளை மயக்குபவளாகவும், வேசியாகவும் சித்தரித்து பயமுறுத்தாமல் இருப்பது. நீங்கள் கேட்பது மாதிரியான பாதிக்கப்பட்ட பெண்களைக் கூட, சமுதாயம் மதிக்கக் கற்றுக் கொண்டால் இந்தப் பிரச்சனைகள் இன்னும் தெளிவாக வெளிச்சத்திற்கு வர வாய்ப்புண்டாகும்.

  //ஈயம், பித்தளை ரெண்டுக்கும் பேரீச்சம்பழம் கிடைக்கும்ங்க//
  நீங்க சொன்ன சரிதான் தல, பெண்ணீயத்தை பேரீச்சம் பழத்துக்கு வித்ததே நீங்க தான்னு ஊருக்குள்ள பேசிக்கிடறாங்க.. இந்தப் பக்கம் வரும்போது எனக்கும் கொஞ்சம் பேரீச்சம் பழம் வாங்கிட்டுவாங்க.. உங்கூர்ல நல்லா இருக்குமாமே! :)

  //பழிபாவத்துக்கு பயப்படுறவனுங்க நானு!//
  சொன்ன உங்களுக்கே சிரிப்பு வந்து, ரெண்டு சிரிப்பானா அள்ளித் தெளிச்சா நாங்கெல்லாம் எங்கிட்டுப் போக ? நான் நாலாவே போட்டுடறேன் :))))) [சிரிப்புக்குப் பஞ்சமில்லை, மிச்ச ஈய, பித்தளை பொன்னுக்குத் தான் இங்க பஞ்சம் :) ]

  பாலா,
  இதெல்லாம் அடுக்குமாங்கிறேன்! :)

 33. நாடோடி said...

  //"ஈயத்தப் பார்த்து இளித்ததாம் பித்தாளை"...ன்னு ஒரு பழமொழி எங்கூரு பக்கம் சொல்லுவாய்ங்க....எபப்டிடா இதெல்லாம்னு இம்புட்டு வருசமா மண்டய ஒடச்சும் பலனில்லை.....

  இப்ப இந்த அரிய சந்தேகத்தை தீர்த்தவைத்த தாயே....வாழிய நீ பல்லாண்டு.///


  ரீபிட்டே... பாங்காளிக்கு ஜே! பழமொழியை மறந்து குழம்பிக்கிட்டு இருந்தேன்.

  :-))

  சேம் ரிப்பிட்டே

 34. Hariharan # 26491540 said...

  //சதி, பெண்களை மறுமணம் செய்ய விடாமல் மொட்டை போட்டதுல இருந்து எத்தனையோ கொடுமைகளை மதவாதிகள் செய்திருக்கிறார்கள். அவர்கள் சொன்ன சொல்லை அப்படியே பின்பற்றுபவர் நீங்கள் வேறு எப்படி இருப்பீர்கள் என்றுதான் சொல்ல வந்தேன்.//


  செந்தில்குமரன்,

  நான் தனித்து எந்த மதவாதிகளையும் அப்படியே பின்பற்றுவதில்லை. இந்துமத வேதம் என்கிற மூலத்தை நம்புகிறேன். அது சிறந்தது எனப் படிக்கையில் என்னுள் அத நல்ல தாக்கத்தினை ஏற்படுத்துகிறது. என்னைச் சீரழிக்கவில்லை என்பதை உணர்கிறேன்.

  பெண்களுக்கு எதிரான சதி, மொட்டை என்பதான சடங்குகள் வேதத்தில் சொல்லப்படவில்லை. வலியுறுத்தப்படவில்லை.

  நபர்களின் தவறுகளுக்கு இந்துமத வேதத்தைக் குறைசொல்லமாட்டேன் நான். இருப்பதிலேயே இந்துமத வேதம் மோஸ்ட் டெமாக்ரடிக் என்பது எனது கருத்து.

 35. லக்கிலுக் said...

  பொன்ஸ் அவர்களே!

  ஹரிஹரனுக்கெல்லாம் உங்கள் பொன்ஸான நேரத்தை வீணடித்தது தேவையில்லாதது.

  அவருக்குத் தெரிஞ்சா இப்படியெல்லாம் பேசுவாரா? ட்ரீட்மெண்ட் எடுக்குறதுக்கு முன்னாடியே பாவம் குவைத்துக்கு தப்பிச்சி போயிட்டாரு போல :-)

 36. கூகிள் said...

  பொன்ஸ் நீங்கள் கொடுத்த அர்ச்சகர் லிங்க் சூப்பர்!

 37. லக்கிலுக் said...

  //நீதிக்கு உயர்ந்து ஒலிக்கும் உங்களது பெண்ணியக்குரல் பூணுல் அணிவோர் செய்கிற குற்றங்கள் என்கிற சிறு புள்ளிக்குள் மட்டுமே குறுகிவிடாது என நம்புகிறேன். //

  வெண்ணைத்தனமான வாதம்!

  பிரச்சினை பெண்கள் அர்ச்சகர் ஆவதைப் பற்றியது. பெண்கள் அர்ச்சகர் ஆனால் கோயில்களில் ஒழுக்கம் குறையும் என்பது ஹரிஹரனின் அரைகுறை கண்டுபிடிப்பு.

  ஆண்கள் அர்ச்சகர்களாக இருக்கும் கோயில்கள் ஏற்கனவே ஒழுக்கத்தில் குட்டிச்சுவராக இருக்கிறது என்று பொன்ஸ் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

  இதில் எங்கிருந்து வந்தது பூணூலும், ஜாதியும்? ஒருவேளை குற்றமுள்ள நெஞ்சு அதுவாகவே குறுகுறுத்துக் கொள்கிறதா?

 38. பொன்ஸ் said...

  லக்கி,
  பதிவைப் புரிந்து கொண்டதற்கு ஸ்பெஷல் நன்றி. நண்பர் ஹரிஹரன் போலவே கொஞ்சம் சுற்றி வளைத்துச் சொன்னால் தான் புரியும் என்று நினைத்து அப்படி ஒரு சுட்டியைக் கொடுத்துவிட்டேன்.. கடைசியில், ஈயப் பாத்திரத்தை விளக்குவது போல் விளக்க வேண்டியதாகிவிட்டது :)

  கூகிள்,
  உங்க பின்னூட்டத்தைப் பார்த்து கொஞ்சம் பயந்துட்டேங்க.. ஏதோ வேற மாதிரி பதிவுக்குச் சுட்டி கொடுத்த மாதிரி இல்ல ஒரு நிமிடம் பயமுறுத்திட்டீங்க :)

  பை த பை, பதிவில் இருக்கும் மூன்று லிங்க்களுமே அர்ச்சகர் லிங்க் தான் ;)

 39. Hariharan # 26491540 said...

  //அவருக்குத் தெரிஞ்சா இப்படியெல்லாம் பேசுவாரா? ட்ரீட்மெண்ட் எடுக்குறதுக்கு முன்னாடியே பாவம் குவைத்துக்கு தப்பிச்சி போயிட்டாரு போல//

  2007லேர்ந்து எல்லோருக்கும் நல்லவனாயிருப்பதாகச் சொன்னது யாருங்க? லக்கி லுக்கா? :-))

  சரிரீரீ...சாய்பாபாகிட்ட ஆசிர்வாதம் வாங்கினீங்களா நீங்க? ஆர் யூ லக்கி டு கெட் மேஜிக் ரிங் ப்ரம் சாய்பாபா?

  யாகமெல்லாம் எப்படி நடந்தது?

  அதிருத்ரயாகத்தை தலைமைக் கட்டளையின் பேரில் நேரில் பங்கேற்றதை ஒரு பதிவா போடலாமே :-)) :-))

 40. யாஹூ said...

  //பை த பை, பதிவில் இருக்கும் மூன்று லிங்க்களுமே அர்ச்சகர் லிங்க் தான் ;) //

  அதுலே மூணாவது லிங்க்! பேஷ்... பேஷ்... ரொம்ப நன்னா இருந்தது...

 41. பொன்ஸ் said...

  யாஹூ,
  போதும்பா.. வேற மாதிரி போகுது.. அப்புறம் நண்பர் பூச நினைத்து முடியாமல் போன சாயம் என் பதிவுக்கு வந்துடும்ங்கிறதுனால இத்தோட உங்க பின்னூட்டத்துக்கு ஜூட்டு.. இனிமே கொஞ்சம் பேரோட வாங்க :)

 42. லக்கிலுக் said...

  //2007லேர்ந்து எல்லோருக்கும் நல்லவனாயிருப்பதாகச் சொன்னது யாருங்க? லக்கி லுக்கா? :-))//

  அதுக்குன்னு முட்டாள்தனத்தை எல்லாம் பார்த்து மனம் கொதிப்படையாவிட்டால் எப்படி? அப்புறம் ஆறறிவு பிராணிகளுக்கும், எனக்கும் என்ன வித்தியாசம்?

 43. லக்கிலுக் said...

  //யாஹூ,
  போதும்பா.. வேற மாதிரி போகுது.. அப்புறம் நண்பர் பூச நினைத்து முடியாமல் போன சாயம் என் பதிவுக்கு வந்துடும்ங்கிறதுனால இத்தோட உங்க பின்னூட்டத்துக்கு ஜூட்டு.. இனிமே கொஞ்சம் பேரோட வாங்க :) //

  யாஹூ, கூகிள் எல்லாம் யாருங்க? பிரச்சினைய திசை திருப்பறாங்க.... ஒருவேளை நண்பர் "பெத்தடின்" ஹரிஹரன் தானோ?

 44. கவிஞன் said...

  பெண்ணுரிமையை மறுப்பவன் எல்லாம் பெல்லாரி வெங்காயம் :-)

 45. முத்துகுமரன் said...

  இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க ஆண்நேய பதிவில் என் பின்னூட்டம் இல்லாவிட்டால் எப்படி. அதான் வருகைப் பதிவு பின்னூட்டம்.

  ஹரிஹரன், கச்சேரினு ஒரு வலைப்பதிவு ஆரம்ப்யியுங்கள் அங்க கும்மி அடிக்கலாம் .

 46. Hariharan # 26491540 said...

  //பெண்கள் அர்ச்சகர் ஆனால் கோயில்களில் ஒழுக்கம் குறையும் என்பது ஹரிஹரனின் அரைகுறை கண்டுபிடிப்பு.//

  லக்கி,

  ஹரிஹரனின் கண்டுபிடிப்பு என்பது ஒழுக்கமில்லாத அரசியல் சிபாரிசுடன் வரும் நபர்கள் அர்ச்சகராகின்றபோது பெண்கள் அர்ச்சகரானால் கோவில் சும்மா டைம் பாஸ் மச்சின்னு அதல பாதாலத்தில் போயிடும்றது.

  சுட்டியில குன்ஸாவா இருந்த மாதிரி எல்லா கோவில்களிலும் கேரண்டியா நடக்கும்ன்றதுதான் நான் சொன்னது.

 47. சென்ஷி said...

  யப்பா கொஞ்சம் நல்லா கவனிங்கப்பா.. இது நகைச்சுவை/நையாண்டியில பதிவு செஞ்சிருக்காங்க பொன்ஸ்.
  சந்தோசமா கலாய்ங்கப்பா
  NO TENSION RELAX

  அதுசரி, பெண்ணீயம் பேசும் இந்த பதிவில் சகோதரிகளின் பின்னூட்டங்கள் எங்கே போச்சு?

  சென்ஷி

 48. Hariharan # 26491540 said...

  //யாஹூ, கூகிள் எல்லாம் யாருங்க? பிரச்சினைய திசை திருப்பறாங்க.... ஒருவேளை நண்பர் "பெத்தடின்" ஹரிஹரன் தானோ? //

  லக்கி,
  அவசியமே இல்லை இப்படி பெயர் மறைத்துவர எனக்கு. எதுவானாலும் நேரடியாகச் சொல்லித்தான் எனக்குப் பழக்கம். நேர்மை மட்டுமே என்னிடமிருக்கும் மிக எளிமையான மிக வலுவான ஆயுதம். நீங்க இனிமேல் இப்படிச் சிந்திக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

 49. லக்கிலுக் said...

  //ஹரிஹரனின் கண்டுபிடிப்பு என்பது ஒழுக்கமில்லாத அரசியல் சிபாரிசுடன் வரும் நபர்கள் அர்ச்சகராகின்றபோது பெண்கள் அர்ச்சகரானால் கோவில் சும்மா டைம் பாஸ் மச்சின்னு அதல பாதாலத்தில் போயிடும்றது. //

  என்னங்க இது? கேணைத்தனமான வாதமா இருக்கு?

  இப்போ இருக்குற ஆண் அர்ச்சகர்களுக்கு அரசியல் சிபாரிசு இல்லையா? அப்படி இல்லையென்றால் பெண்கள் அர்ச்சகராக்கப் பட்டால் மட்டும் தான் அரசியல்வாதிகள் சிபாரிசு பண்ணுவாங்களா?

  லாஜிக் ஒதைக்குதே?

  ஒருவேளை பெத்தடின் போட்டா தான் உங்க லெவலுக்கு திங்க் பண்ண முடியுமோ?

 50. செந்தழல் ரவி said...

  அதென்னா ஆண் பித்தளைன்னு ஒரு லேபிள் ?? கொல்லுன்னு சிரிச்சிட்டேன் :))

  இது ஏதோ வெயிட்டான மேட்டரா தெரியுது, நான் தெறிச்சுக்கறேன்..!!!

 51. முத்துகுமரன் said...

  பொன்ஸ் மன்னிக்க:

  ஒழுக்கமில்லாத அரசியல் சிபாரிசுடன் வரும் நபர்கள் அர்ச்சகராகின்றபோது -

  சரி தகுதியையும் தேர்ந்தெடுப்பவர் தகுதியையும் கொஞ்சம் சொல்லுங்களேன்

 52. Hariharan # 26491540 said...

  //அதுக்குன்னு முட்டாள்தனத்தை எல்லாம் பார்த்து மனம் கொதிப்படையாவிட்டால் எப்படி? அப்புறம் ஆறறிவு பிராணிகளுக்கும், எனக்கும் என்ன வித்தியாசம்? //

  சாய்பாபா கால்ல தயாளு அம்மா (பெயர் சரிதான்னு நினைக்கிறேன்) விழுந்து ஆசிர்வாதம் வாங்கியதை இப்போ உங்களை யார் நினைச்சுக்கச் சொன்னது லக்கி?

 53. செந்தழல் ரவி said...

  ////பாலா,
  பெண்"ஈயத்தை" சிலர் பேரீச்சம் பழத்திற்கு விற்றுவிட்டதால், ஆணீயமாவது தப்பிக்கட்டுமேன்னு ஆண் பித்தளை ஆக்கியாச்சு..

  இதை ஒரு மோதிரம், பிரேஸ்லெட்டாவது செய்து மாட்டிக்கிடலாமில்லையா, யாரும் எடுத்து விற்கிறதுக்குள்ளே... ;) ////

  சூப்பர் :))))))))))

 54. Hariharan # 26491540 said...

  //இப்போ இருக்குற ஆண் அர்ச்சகர்களுக்கு அரசியல் சிபாரிசு இல்லையா?//

  நானறிந்த வரையில் இல்லைதான். பெத்தடின் அரசியலில் நேரடியாக அனுபவம் இருக்கிற நீங்க சொன்னா அது கேணத்தனமா இருக்காதுதான்:-))

 55. லக்கிலுக் said...

  //நானறிந்த வரையில் இல்லைதான். பெத்தடின் அரசியலில் நேரடியாக அனுபவம் இருக்கிற நீங்க சொன்னா அது கேணத்தனமா இருக்காதுதான்:-)) //

  சரி. இப்போ இல்லைன்னா பெண்கள் அர்ச்சகர் ஆனா மட்டும் எப்படி இருக்கும்னு கொஞ்சம் பெத்தடின் போட்டுட்டு சொல்லுங்களேண் அண்ணே! :-)))

 56. பொன்ஸ் said...

  ரவி,
  நன்றி , நன்றி - இருமுறை வருகைக்கு :))

  முத்துகுமரன்,
  உங்களைப் போன்ற தோழர்களுக்கான இந்தப் பதிவில் நீங்களும் வந்து சிறப்பித்தது மகிழ்ச்சி :). மன்னிப்பெல்லாம் எதுக்கு.. என்ன வேணாலும் கேளுங்க.. இந்த விஷயத்தைப் பற்றிய எல்லா கோணங்களையும் கேட்டுத் தெளிந்து கொள்வோம்..

  ஹரிஹரன்,
  விவாதங்களினூடாக நான் புரிந்து கொண்டது, 'இன்றைக்கு இருக்கும் நிலையில் பெண்கள் அர்ச்சகர் ஆனால், உங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. "வேற்று சாதிக்காரர்களும் அர்ச்சகர் ஆகும்" சட்டம் வந்த பின்னர்தான் பெண்கள் இந்தத் தொழிலில் தொடருவது புனிதத்தைக் கெடுத்துவிடும்.'
  இந்தப் புரிதல் சரிதானே?

 57. லக்கிலுக் said...

  //சாய்பாபா கால்ல தயாளு அம்மா (பெயர் சரிதான்னு நினைக்கிறேன்) விழுந்து ஆசிர்வாதம் வாங்கியதை இப்போ உங்களை யார் நினைச்சுக்கச் சொன்னது லக்கி? //

  சாய்பாபா ஒரு Fraud, மொள்ளமாறி என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி பெத்தடின் அவர்களே!

 58. Hariharan # 26491540 said...

  முத்துக்குமரன்,

  இந்தப்பதிவின் பின்னூட்டத்தில் 25% அடியேனாக இருந்தும் ரெண்டு போட்டு ரெண்டாவதை 50வதுபின்னூட்டமா போட்டுத்தாக்கிட்டீங்க!

  என்னை இலவு காத்தகிளியாக்கிட்டீங்க (50வது பின்னூட்டத்துக்கு)

  //சரி தகுதியையும் தேர்ந்தெடுப்பவர் தகுதியையும் கொஞ்சம் சொல்லுங்களேன் //

  இந்தக் கச்சேரியை இங்கவேவா? தனியா வச்சுக்கலாம் வேற ஒருசமயத்துல.

 59. லக்கிலுக் said...

  //விவாதங்களினூடாக நான் புரிந்து கொண்டது, 'இன்றைக்கு இருக்கும் நிலையில் பெண்கள் அர்ச்சகர் ஆனால், உங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. "வேற்று சாதிக்காரர்களும் அர்ச்சகர் ஆகும்" சட்டம் வந்த பின்னர்தான் பெண்கள் இந்தத் தொழிலில் தொடருவது புனிதத்தைக் கெடுத்துவிடும்.'
  இந்தப் புரிதல் சரிதானே? //

  அது சரி :-))))

  சிங்கப்பூர் மாரியம்மன் கோயிலில் ஒரு பிராமண அர்ச்சகர் பூஜை செய்ய மறுத்து விட்டாராம். காரணம் மாரியம்மன் தாழ்ந்த சாதிக் காரராம்.

  இவனுங்களை எல்லாம் உயிரோடு கொளுத்தினால் கூட தப்பில்லை.....

 60. செந்தழல் ரவி said...

  ///கடைசியில், ஈயப் பாத்திரத்தை விளக்குவது போல் விளக்க வேண்டியதாகிவிட்டது :) ////

  ஆக்சுவலீ, ஈயப்பாத்திரத்தை விளக்க ரொம்ப கஷ்டப்படவேண்டாம்..

  ஒரு நெல்லிக்காய் அளவுக்கு புளியை எழுத்துக்கோங்க...பொறகு, அதை போட்டு வெளக்கு வெளக்குன்னு வெளக்குங்க...புரிஞ்சுதா...

  பிறகு பாருங்க...சும்மா பளப்பளபளன்ன்னு இருக்கும்....

  ஓகே ??

 61. Hariharan # 26491540 said...

  //ஹரிஹரன்,
  விவாதங்களினூடாக நான் புரிந்து கொண்டது, 'இன்றைக்கு இருக்கும் நிலையில் பெண்கள் அர்ச்சகர் ஆனால், உங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. "வேற்று சாதிக்காரர்களும் அர்ச்சகர் ஆகும்" சட்டம் வந்த பின்னர்தான் பெண்கள் இந்தத் தொழிலில் தொடருவது புனிதத்தைக் கெடுத்துவிடும்.'
  இந்தப் புரிதல் சரிதானே?//

  இல்லை உங்களது இந்தப் புரிதல் முற்றிலும் தவறு.

  இறைவனே இல்லை என்பதைக் கொள்கையாகக் கொண்ட அரசுத்தலையீடு, அரசியல் தலையீடு நேர்மையான, மெய்யான பக்தியானவர்களை அர்ச்சகராக்கும் ஆன்மீக விஷயத்தில் செய்யாது என்பது தான் நான் சொல்லவருவது.

 62. புரிந்துகொள்ளும் சேட்டன் said...

  /////விவாதங்களினூடாக நான் புரிந்து கொண்டது, 'இன்றைக்கு இருக்கும் நிலையில் பெண்கள் அர்ச்சகர் ஆனால், உங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. "வேற்று சாதிக்காரர்களும் அர்ச்சகர் ஆகும்" சட்டம் வந்த பின்னர்தான் பெண்கள் இந்தத் தொழிலில் தொடருவது புனிதத்தைக் கெடுத்துவிடும்.'////

  எனிக்கி வல்லியதாய்ட்டு ஒரு போயிண்ட் கிட்டி. எனிக்கி மனசிலாயி. ஞான் இவட வந்தது, ஒரு பிண்ணூட்டம் கொடுக்க செரியா..

 63. Hariharan # 26491540 said...

  //சாய்பாபா ஒரு Fraud, மொள்ளமாறி என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி பெத்தடின் அவர்களே!//

  இப்படி ஒரு Fraud, மொள்ளமாறியாகிய சாய்பாபா காலில் தயாளு அம்மாள் ஏன் விழுந்து ஆசிவாங்கினார் லக்கி? கொஞ்சம் விளக்குங்களேன் :-))

 64. செந்தழல் ரவி said...

  ////சிங்கப்பூர் மாரியம்மன் கோயிலில் ஒரு பிராமண அர்ச்சகர் பூஜை செய்ய மறுத்து விட்டாராம். காரணம் மாரியம்மன் தாழ்ந்த சாதிக் காரராம்.

  இவனுங்களை எல்லாம் உயிரோடு கொளுத்தினால் கூட தப்பில்லை..... ////

  லக்கி, நீங்க டி.எம்.கே தானே ? எப்போ எங்க கட்சி (ஏ.டி.எம்.கே) உறுப்பினர் அட்டை வாங்கினீங்க ?

 65. பொன்ஸ் said...

  //இந்தப்பதிவின் பின்னூட்டத்தில் 25% அடியேனாக இருந்தும் //
  உண்மை தான் ஹரிஹரன்.. என்னுடையது கூட அத்தனை வராது போலிருக்கிறது :))) இதற்கு என் தனிப்பட்ட நன்றிகள் :)))

  போகிற போக்கில் 50% உங்களுடையதாகிவிடும் வாய்ப்பும் இருப்பதால், அதற்கும் என் முன்கூட்டிய நன்றிகள் பல :))

  இன்னும் கொஞ்சம் காத்தால், நூறாவது பின்னூட்டத்தை நீங்கள் போடலாம் ;)

  /இறைவனே இல்லை என்பதைக் கொள்கையாகக் கொண்ட அரசுத்தலையீடு, அரசியல் தலையீடு நேர்மையான, மெய்யான பக்தியானவர்களை அர்ச்சகராக்கும் ஆன்மீக விஷயத்தில் செய்யாது என்பது தான் நான் சொல்லவருவது. //
  அப்படியானால், அதைத் தெளிவாக, நேர்மையாக சொல்லாமல், பெண்களை இழிவுப் படுத்தும் விதமாக, அவர்கள் வேலையில் இருந்தால், அர்ச்சக அம்பாள்களாக எல்லா ஆண்களின் பூசையையும் அபகரித்து தெய்வ குற்றம் செய்துவிடுவார்கள் என்றும் சொல்லப் புகுந்தது நியாயமா?
  பெண்கள் என்றால் உங்களுக்குப் பேரிச்சம்பழம் தான் போலிருக்கிறது. அதனால் தான், அரசு இயந்திரத்தைக் குறை சொல்வதை விட பெண்களைக் குறை சொல்வது வசதியாக இருக்கிறது!

 66. செந்தழல் ரவி said...

  ///இப்படி ஒரு Fraud, மொள்ளமாறியாகிய சாய்பாபா காலில் தயாளு அம்மாள் ஏன் விழுந்து ஆசிவாங்கினார் லக்கி? கொஞ்சம் விளக்குங்களேன் :-)) ////

  ஆக்சுவலா அவங்க விழுந்து ஆசீர்வாதம் வாங்கல்லியாம் ஹரிகரன். பாபா மாந்திரீகத்துல வரவழைச்சு கொடுத்த மோதிரம் கொஞ்சம் வெயிட், மற்றும் வழவழன்னு இருந்தது...கைதவறி கீழே விழுந்துட்டது. அதை அந்தம்மா மொதல்ல குனிஞ்சு எடுத்தாங்க...கலைஞர் / பாபா ரெண்டுபேரும் வயசானவங்க, கலைஞர் ஒரு சப்போட்ல நிக்கிறார், பாபா ஒரு சப்போட்ல நிக்கிறார்.அதனால அந்த அம்மா குனிஞ்சு எடுத்தாங்க..அதை போட்டோ எடுத்துட்டாங்க ப்ரஸ்..இப்போ புரிஞ்சதா ?

 67. Hariharan # 26491540 said...

  //ஒரு நெல்லிக்காய் அளவுக்கு புளியை எழுத்துக்கோங்க...பொறகு, அதை போட்டு வெளக்கு வெளக்குன்னு வெளக்குங்க...புரிஞ்சுதா...//

  ரவியைக் கல்யாணம் செஞ்சுக்குற பொண்ணு குடுத்து வச்சவங்க. இப்படி வெளக்கு வெளக்குன்னு வெளக்குறாரே பாத்திரத்தை... அரபிக்கடலூடே குவைத்வரைக்கும் டாலடிக்குது பளபளப்பு கப்பலெல்லாம் கலங்கரைவெளக்குன்னு கன்பூஸாகி டைட்டானிக் ஆகிடப்போகுதுங்க ரவி
  :-))

  பொன்ஸ் ரவி பெண்ணீயத்தை உள்குத்தா ஏதும் சொல்றாரான்னு கவனிச்சுக்குங்க :-))

 68. பங்காளி... said...

  அடப்பாவிகளா....

  கொஞ்சம் அங்கிட்டு போய்ட்டு வர்றதுக்குள்ள அருமையா ரசிச்சி மகிழ வேண்டிய ஒரு பதிவ கிழிச்சி நாறடிச்சிட்டீகளே...ம்ம்ம்ம்ம்

  மக்கா....இந்த அக்கா பதிவ வுட்டுட்டு அப்பால போய் கும்மியடிப்போமா....வாங்க ராசா...வாங்க...

 69. லக்கிலுக் said...

  //இப்படி ஒரு Fraud, மொள்ளமாறியாகிய சாய்பாபா காலில் தயாளு அம்மாள் ஏன் விழுந்து ஆசிவாங்கினார் லக்கி? கொஞ்சம் விளக்குங்களேன் :-)) //

  என் பெயர் லக்கிலுக். நான் தயாளு அம்மாள் அல்ல. உங்கள் கேள்வியை எண் 8, 4வது தெரு, கோபாலபுரத்துக்கு அனுப்புங்கள்.


  //லக்கி, நீங்க டி.எம்.கே தானே ? எப்போ எங்க கட்சி (ஏ.டி.எம்.கே) உறுப்பினர் அட்டை வாங்கினீங்க ? //

  சரி... சரி... அப்பப்போ கொஞ்சம் உணர்ச்சிவசப்படுறதால அதிமுக சாயல் தெரியுது... கண்டுக்காதீங்க :-)

 70. Hariharan # 26491540 said...

  அர்ச்சக அம்பாளை மட்டுமே விருப்பத்தால் வேலையாக ஏற்றவர் ஆறுகாலம் தாண்டியும் துதித்து
  பூஜை தொடர்வது
  தெய்வக் குத்தமாகிவிடாதா?:-)))

  பொன்ஸ்,

  நீளமான வரியை உடைத்து சிறுவாக்கியங்களாகத் தந்திருக்கின்றேன்.

  //அர்ச்சக அம்பாள்களாக எல்லா ஆண்களின் பூசையையும் அபகரித்து தெய்வ குற்றம் செய்துவிடுவார்கள் என்றும் சொல்லப் புகுந்தது நியாயமா?//

  பிழை உங்கள் புரிதலில் இருக்கிறது

 71. சவுரவ் கங்குலி said...

  நான் இங்கேயாவது செஞ்சுரி அடிக்கலாமா?

 72. லக்கிலுக் said...

  //இறைவனே இல்லை என்பதைக் கொள்கையாகக் கொண்ட அரசுத்தலையீடு, அரசியல் தலையீடு நேர்மையான, மெய்யான பக்தியானவர்களை அர்ச்சகராக்கும் ஆன்மீக விஷயத்தில் செய்யாது என்பது தான் நான் சொல்லவருவது. //

  அது பெண்கள் விஷயத்தில் மட்டும் தான் செய்யாதா? இப்போது ஆண்கள் விஷயத்தில் ஏன் செய்யவில்லை என்பது தான் எங்கள் கேள்வி....

 73. பொன்ஸ் said...

  சாரி கங்குலி, இந்தப் பதிவில் நூறடிக்க நண்பர் ஹரிஹரன் ஏற்கனவே முன்பதிவு செய்துவிட்டார் :))))

  நீங்க அடுத்த மேட்சில் முயற்சி செய்யுங்க :)

 74. சென்ஷி said...

  யக்கா, முதல் 6 பின்னூட்டத்த படி, நாங்கதான் முன்னாடியே சொன்னோமுல்ல,

  பத்த வச்சிட்டியே ஆத்தா..:))


  சென்ஷி

 75. பெத்தடின் ரசிகர் மன்றம் said...

  //பெண்கள் என்றால் உங்களுக்குப் பேரிச்சம்பழம் தான் போலிருக்கிறது. //

  எங்க தலை குவைத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கக்கது.

 76. Hariharan # 26491540 said...

  ஆக்சுவலா அவங்க விழுந்து ஆசீர்வாதம் வாங்கல்லியாம் ஹரிகரன். பாபா மாந்திரீகத்துல வரவழைச்சு கொடுத்த மோதிரம் கொஞ்சம் வெயிட், மற்றும் வழவழன்னு இருந்தது...கைதவறி கீழே விழுந்துட்டது. அதை அந்தம்மா மொதல்ல குனிஞ்சு எடுத்தாங்க...கலைஞர் / பாபா ரெண்டுபேரும் வயசானவங்க, கலைஞர் ஒரு சப்போட்ல நிக்கிறார், பாபா ஒரு சப்போட்ல நிக்கிறார்.அதனால அந்த அம்மா குனிஞ்சு எடுத்தாங்க..அதை போட்டோ எடுத்துட்டாங்க ப்ரஸ்..இப்போ புரிஞ்சதா ?

  சுத்தமாப் புரிஞ்சுக்கிட்டேங்க ரவி!

  ஆஆவ்வ்வ்வ்வ் அழுகை.. இளைஞர் கலைஞரை வயசானவர்ன்னு நாக்குமேலே பல்லுப்போட்டுச் சொல்லிட்டீங்களே ஆஆஆவ்வ்வ்வ்

 77. கங்குலி said...

  //நீங்க அடுத்த மேட்சில் முயற்சி செய்யுங்க :) //

  போன மேட்சில 98 அடிச்சேன். ஏன் நூறு அடிக்கலைன்னு சேப்பல் என்னை தூக்கிடுவான் போல :-(

 78. செந்தில் குமரன் said...

  ஹரிஹரன் மறுபடியும் கொஞ்சம் ஆஜராகி 2 கேள்வி கேட்டுக்கிறேன்.

  1. எந்த அடிப்படையில் ஒருவர் அர்ச்சகராகலாம்?

  2. அரசியல் இல்லாமல், பிராமிண ஆண்களைத் தவிர வேறு யாரேனும் அர்ச்சகராக உங்களால் ஒத்துக் கொள்ள முடியுமா?

 79. லக்கிலுக் said...

  //ஆஆவ்வ்வ்வ்வ் அழுகை.. இளைஞர் கலைஞரை வயசானவர்ன்னு நாக்குமேலே பல்லுப்போட்டுச் சொல்லிட்டீங்களே ஆஆஆவ்வ்வ்வ் //

  அது சரி. சில பேர் 38 வயசுலேயே 83 வயசான மாதிரி பேசுறாங்க....

  அவர் 83 வயசுலேயும் 38 வயசு ஆளு மாதிரி தான் பேசுறாரு....

  ஹரிஹரன் உங்க வயது 38 என்பதை நான் குத்திக் காட்டவில்லை

 80. பெத்தடின் ரசிகர் மன்றம் said...

  //1. எந்த அடிப்படையில் ஒருவர் அர்ச்சகராகலாம்?

  2. அரசியல் இல்லாமல், பிராமிண ஆண்களைத் தவிர வேறு யாரேனும் அர்ச்சகராக உங்களால் ஒத்துக் கொள்ள முடியுமா? //

  பெத்தடின் சார்பில் நான் பதில் அளிக்கிறேன்.

  1. அவர் பிறந்த சாதி அடிப்படையில்

  2. அது எப்படி ஒத்துக்க முடியும்? நாங்க தான் பேடண்ட் ரைட்ஸ் வெச்சிருக்கோமே?

 81. பொன்ஸ் said...

  யாருப்பா அது ரசிகர் மன்றம்?!.. உங்க தலைவரைப் பதில் சொல்ல விடுங்கப்பா.. ஏன் இந்தக் கொலை வெறி?!! எதற்கு இந்தக் கலவரம்?!!

 82. தி.மு.க தொண்டன் said...

  //இப்படி ஒரு Fraud, மொள்ளமாறியாகிய சாய்பாபா காலில் தயாளு அம்மாள் ஏன் விழுந்து ஆசிவாங்கினார் லக்கி? கொஞ்சம் விளக்குங்களேன் :-))//

  நாத்திகப் பிரச்சாரம் செய்தது கலைஞர் தானே? தயாளு அம்மாள் அல்லவே? அவர் காலில் விழுந்ததற்கு கலைஞர் எப்படிப் பொருப்பேற்க முடியும்?
  இப்படி வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள் - கலைஞர் தனது அரசியல் கருத்துக்களை தன்னுடைய வீட்டுப் பெண்களிடம் கூட அடக்குமுறையாக வலியுறுத்தவில்லை என்று.

  கலைஞரும் துரைமுருகனும் சாயிபாபாவைப் பாராட்டியது அந்தாள் செய்த சமூகப் பணிகளுக்காக. ஏன் அவன் காசு கொடுத்து சென்னை மக்களுக்கு தண்ணீர் கிடைத்தால் நல்லது தானே - இங்கும் நாத்திகம் என்கிற தன்னுடைய கொள்கைக்காக மக்களின் தண்ணீர்த் தேவையை அடகு வைக்காத கலைஞரைப் பாராட்டியே ஆக வேண்டும்.

  ஹரிஹரன் - நேரடியாக சொல்லுங்கள் பெண்கள் அர்ச்சகராக வேண்டுமா வேண்டாமா?

 83. சச்சின் டெண்டுல்கர் said...

  இந்த கங்குலி பையன் வந்ததால எனக்கு ஓபனிங் சான்ஸ் போச்சி....

  - சச்சின் டெண்டுல்கர் (டோண்டுல்கர் அல்ல)
  ஓபனிங் பேட்ஸ்மேன், இந்தியா.

 84. லக்கிலுக் said...

  //ஏன் இந்தக் கொலை வெறி?!! எதற்கு இந்தக் கலவரம்?!! //

  பொன்ஸ் அவர்களே!

  இந்த வரிகளை நீங்கள் உபயோகப்படுத்தியதால் எல்லோரும் நான் தான் பெத்தடின் ரசிகர்மன்றமோ என சந்தேகப்படும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன் :-(

  ஒரு அப்பாவி உங்களால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது

 85. Hariharan # 26491540 said...

  //அது பெண்கள் விஷயத்தில் மட்டும் தான் செய்யாதா? இப்போது ஆண்கள் விஷயத்தில் ஏன் செய்யவில்லை என்பது தான் எங்கள் கேள்வி.... //

  திராவிடத் தலைவர் கலீஞரு காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ செல்வநாயகிக்கு சட்டசபையிலே அவர் கேட்ட கேள்விக்குப் பதிலாக "நாடாவை அவிழ்த்து, பாவாடையை தூக்கிப்பார் உண்மை தெரியும்" என்று சிலேடையில் தமிழுக்குச் சிறப்புச்செய்து பேசியதும், பெண்தெய்வங்கள் உடையில்லாமல் அசிங்கமாக இருப்பதாகச் சொன்னது போன்ற செயல்களில் இருந்தும் அரசியல் தலையீடு, அரசியல்வாதியின் மீது நம்பிக்கை தருவதாயில்லை லக்கி

  பொன்ஸ் இதை எடிட் செய்யாமல் வெளியிடவும்

 86. பெத்தடின் ரசிகர் மன்றம் said...

  //ஹரிஹரன் - நேரடியாக சொல்லுங்கள் பெண்கள் அர்ச்சகராக வேண்டுமா வேண்டாமா? //

  அர்ச்சகராகலாம். ஆனால் எல்லா பெண்களும் அல்ல

 87. செஞ்சுரி அடிக்க விரும்புபவன் said...

  இன்னும் 17 தான் இருக்கு

 88. பொன்ஸ் said...

  //ஒரு அப்பாவி உங்களால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது
  //
  அச்சிச்சோ லக்கி, அப்படி எல்லாம் இல்லிங்க.. ரசிகர் மன்றம்ங்கிற சொல்லைக் கேட்டாலே இப்போ எல்லாம் இது தான் நினைவுக்கு வருது :) அப்படித் தான் சொன்னேன் :)

  தப்பான பொருள் வராது என்று நம்புகிறேன்..

 89. Hariharan # 26491540 said...

  //நாத்திகப் பிரச்சாரம் செய்தது கலைஞர் தானே? தயாளு அம்மாள் அல்லவே? அவர் காலில் விழுந்ததற்கு கலைஞர் எப்படிப் பொருப்பேற்க முடியும்?
  இப்படி வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள் - கலைஞர் தனது அரசியல் கருத்துக்களை தன்னுடைய வீட்டுப் பெண்களிடம் கூட அடக்குமுறையாக வலியுறுத்தவில்லை என்று.//

  சிரிப்பான சிரிப்பு வருகிறது.

  குங்குமம் நெற்றியில் வைத்தவனையும், பூமிதித்தவனையும், இந்துவைத் திருடன் என்று சொன்னவர் வீட்டிலேயே வலியுறுத்தாததை நாட்டிலே ஏன் பாரபட்சமாய் வலியுறுத்துகிறாய்?

 90. லக்கிலுக் said...

  //திராவிடத் தலைவர் கலீஞரு காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ செல்வநாயகிக்கு சட்டசபையிலே அவர் கேட்ட கேள்விக்குப் பதிலாக "நாடாவை அவிழ்த்து, பாவாடையை தூக்கிப்பார் உண்மை தெரியும்" என்று சிலேடையில் தமிழுக்குச் சிறப்புச்செய்து பேசியதும், பெண்தெய்வங்கள் உடையில்லாமல் அசிங்கமாக இருப்பதாகச் சொன்னது போன்ற செயல்களில் இருந்தும் அரசியல் தலையீடு, அரசியல்வாதியின் மீது நம்பிக்கை தருவதாயில்லை லக்கி//

  அப்போ நடிகைகளுடன் கள்ளத் தொடர்பு வைத்துக் கொண்ட மடாதிபதிகள் மீது மட்டும் நம்பிக்கை வைத்தால் போதுமானதா?

 91. Hariharan # 26491540 said...

  //ஹரிஹரன் - நேரடியாக சொல்லுங்கள் பெண்கள் அர்ச்சகராக வேண்டுமா வேண்டாமா?//

  பெண்களுக்கு இதுதான் தற்போதைய உடனடித்தேவையா என்பதே எனது நிலைப்பாடு

 92. வெறும் ஜல்லியடிப்பவன் said...

  ///ஹரிஹரன் மறுபடியும் கொஞ்சம் ஆஜராகி 2 கேள்வி கேட்டுக்கிறேன். //

  நான் கொஞ்சம் பேஜாராகி இதற்கு பதில் அளிக்கிறேன்.

  1. எந்த அடிப்படையில் ஒருவர் அர்ச்சகராகலாம்?

  இந்துவாக இருக்கவேண்டும். கிறிஸ்டியன் மற்றும் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது.

  2. அரசியல் இல்லாமல், பிராமிண ஆண்களைத் தவிர வேறு யாரேனும் அர்ச்சகராக உங்களால் ஒத்துக் கொள்ள முடியுமா?

  - நோ கமெண்டுகள் -

 93. லக்கிலுக் said...

  ஹரிஹரன் அவர்களே!

  பெண்கள் அர்ச்சகர் ஆகலாமா என்ற கேள்விக்கு இதுவரை நேரடியான, உருப்படியான பதில் எதையும் உங்களால் சொல்ல முடியவில்லை.

  உங்களுக்கு பெண்கள் திமுக அரசால் அர்ச்சகர் ஆகினால் தான் பிரச்சினை என்பது போன்ற பதிலைத் தொடர்ந்து தந்து வருகிறீர்கள்.

  ஜெயலலிதா வந்து பெண்களை அர்ச்சகர் ஆக்கினால் ஒத்துக் கொள்வீர்களா?

  அப்படி நீங்கள் ஒத்துக் கொள்வதாக இருந்தால் அடுத்த தேர்தலில் ஜெ.வுக்காக உழைக்க நான் ரெடி!!!!!

 94. லக்கிலுக் said...

  //குங்குமம் நெற்றியில் வைத்தவனையும், பூமிதித்தவனையும், இந்துவைத் திருடன் என்று சொன்னவர் வீட்டிலேயே வலியுறுத்தாததை நாட்டிலே ஏன் பாரபட்சமாய் வலியுறுத்துகிறாய்? //

  இன்னமும் கலைஞர் இந்த ஸ்டேட்மெண்டுகளை வாபஸ் வாங்கவில்லை என்பதாலேயே அவர் மீதான எங்கள் மதிப்பு நாளுக்கு நாள்ள் அதிகமாகிறது.

  பெத்தடின் போன்றவர்கள் இதைத் தொடர்ந்து நினைவுபடுத்துவதாலேயே பல இளைஞர்களுக்கு திராவிடம் மீது ஈடுபாடு வருகிறது.

  வாழ்க பெத்தடின்கள்!!!!

 95. லக்கிலுக் said...

  //பெண்களுக்கு இதுதான் தற்போதைய உடனடித்தேவையா என்பதே எனது நிலைப்பாடு //

  இதுவும் தேவை என்பதே எங்கள் நிலைப்பாடு

 96. லக்கிலுக் said...

  //பெண்களுக்கு இதுதான் தற்போதைய உடனடித்தேவையா என்பதே எனது நிலைப்பாடு //

  இதுவும் தேவை என்பதே எங்கள் நிலைப்பாடு

 97. Hariharan # 26491540 said...

  //அப்போ நடிகைகளுடன் கள்ளத் தொடர்பு வைத்துக் கொண்ட மடாதிபதிகள் மீது மட்டும் நம்பிக்கை வைத்தால் போதுமானதா?//

  அது போலீஸ் விசாரித்து, கைதுசெய்து, ஜெயிலில்போட்டு, ஜாமீனில் வந்து, நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. நடந்தது என்ன என்ற உண்மை முழுதுமாக நான் அறியாதது.

  குற்றமில்லை என நிரூபிக்கப்படும் வரை தற்போது சில ஆண்டுகளாக சங்கரமடம் செல்வதில்லை நான்.

 98. பங்காளி... said...

  ஆஹா....

  பிரச்சினை எங்கியோ போகுதே...ம்ம்ம்ம்...விதி வலியது.

  அந்த பழமொழி இந்த சிச்சுவேசனுக்கு கூட சரியா வரும்போல தோனுதே....என்ன நெனைக்கறீங்க பொன்ஸ்.....

 99. லக்கிலுக் said...

  //இந்துவாக இருக்கவேண்டும். கிறிஸ்டியன் மற்றும் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது.//

  மொதல்ல பிற்படுத்தப்பட்ட / தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்கு முழுமனதோடு இடஒதுக்கீடு கொடுங்கள். அதுக்கப்புறமா முஸ்லீம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடஒதுக்கீடு வேணுமா வேணாமான்னு முடிவு பண்ணிக்கலாம்.

 100. தி.மு.க தொண்டன் said...

  //குங்குமம் நெற்றியில் வைத்தவனையும், பூமிதித்தவனையும், இந்துவைத் திருடன் என்று சொன்னவர் வீட்டிலேயே வலியுறுத்தாததை நாட்டிலே ஏன் பாரபட்சமாய் வலியுறுத்துகிறாய்?//

  நாங்கள் பிரச்சாரம் தானே செய்தோம்? எங்களிடம் அதிகாரம் வந்தவுடன் நாங்கள் நினைத்திருந்தால் இதையெல்லாம் தடையே செய்திருக்க முடியுமே? ஏன் செய்யவில்லை? நாத்திகம் கூட பிரச்சாரத்தின் மூலம் மென்மையாக சென்றடைய வேண்டும் என்று தான் பிரச்சாரத்தோடு நிறுத்திக் கொண்டோம்.. ( பெரியாரின் வழிமுறையும் அண்ணா/கலைஞரின் வழிமுறையும் வேறு வேறானது. பெரியார் முரட்டுத்தனத்தில் ஆர்வம் கொண்டவர். அண்ணாவும் கலைஞரும் மென்மையான அணுகுமுறையில் ஆர்வம் கொண்டவர்கள்) கலைஞர் வீட்டிலும் அதே அணுகுமுறையைத் தான் கையாண்டிருப்பார்... அதை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் விருப்பம் என்று அவர்கள் வீட்டுப் பெண்மணிகளின் சுதந்திரத்துக்கு மதிப்புக் கொடுத்திருப்பது இந்த சம்பவத்தின் மூலம் தெரிகிறது..

 101. தேவையை கேட்பவன் said...

  ////பெண்களுக்கு இதுதான் தற்போதைய உடனடித்தேவையா என்பதே எனது நிலைப்பாடு ////

  அன்பின் ஹரி, அப்போது பெண்களின் தற்போதைய தேவை என்பதை விளக்குவீர்களா ?

 102. பொன்ஸ் said...

  ஹரிஹரன், லக்கிலுக்,
  ஆணியம் என்றாலே, பெண்களைக் குறை சொல்லி அவர்களைப் போட்டுத் தாக்குவது தான் என்பது மாதிரி போய்க் கொண்டிருக்கிறது இந்த விவாதம்.

  பெண்களைக் கேவலப்படுத்துவது என்பது இரண்டு பக்கமும் ஏன், உலகின் எல்லா பக்கமும் இருந்து கொண்டே இருப்பது தானே! திரு சொல்லி இருக்கும் எல்லா காரணங்களையும் இந்தப் பதிவின் பின்னூட்டங்களிலேயே என்னால் பார்க்க முடிகிறது.

  இன்னும் இன்னும் பெண்களைக் கேவலப்படுத்திக் கொண்டே போகாமல், கொஞ்சமாவது பார்த்து எழுத வேண்டுகிறேன்..

  பங்காளி.. ம்ஹும்.. என்னத்தச் சொல்ல..

 103. Hariharan # 26491540 said...

  லக்கி லெஸ் டென்சன் மோர் வொர்க்...மோர் டென்சென் லெஸ் ஒர்க் எனவே நோ டென்சன் ப்ளீஸ்

 104. தி.மு.க தொண்டன் said...

  //பெண்களுக்கு இதுதான் தற்போதைய உடனடித்தேவையா என்பதே எனது நிலைப்பாடு//

  அவர்களுக்கு எது தேவை தேவையில்லை என்று தீர்மானிக்க நீர் யாரய்யா? அதை அவர்களல்லவா தீர்மானிக்க வேண்டும்?

 105. Hariharan # 26491540 said...

  பொன்ஸ்,

  நான் அப்படி எதிலும் பேதமெல்லாம் பார்ப்பதில்லை என்ற போதும் நெவர் டிரைவ் பிஹைண்ட் அ உமன் என்பதினை ஏற்றுக்கொள்கிறேன்

 106. லக்கிலுக் said...

  //குற்றமில்லை என நிரூபிக்கப்படும் வரை தற்போது சில ஆண்டுகளாக சங்கரமடம் செல்வதில்லை நான். //

  சரி. அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு விட்டது என்று வைத்துக் கொள்வோம்.

  அவர் தமிழ்நாட்டில் கும்பாபிஷேகம் செய்து வைத்த ஆயிரக் கணக்கான ஆலயங்களின் கதி.

  ஒரு கொலைகாரன், ஒரு காமுகனால் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட ஆலயங்களில் கடவுள் வாழ்வாரா?

  அந்த கோயில்களுக்கு சென்று அங்கப் பிரதட்சணம் செய்யும் அப்பாவிகளின் கதி?

 107. செந்தில் குமரன் said...

  ///
  பெண்களுக்கு இதுதான் தற்போதைய உடனடித்தேவையா என்பதே எனது நிலைப்பாடு
  ///

  தேவைதான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அத்தியாவசியமான தேவை என்றும் வைத்துக் கொள்ளுங்களேன். இப்போது பதில் சொல்லுங்கள்.

  1. எந்த அடிப்படையில் ஒருவர் அர்ச்சகராகலாம்?

  2. அரசியல் இல்லாமல், பிராமிண ஆண்களைத் தவிர வேறு யாரேனும் அர்ச்சகராக உங்களால் ஒத்துக் கொள்ள முடியுமா?

 108. Hariharan # 26491540 said...

  ஆட்டை முடிந்தது. 100 சுயமாக அடித்துக்கொண்ட பொன்ஸுக்கு வாழ்த்துக்கள் கூறி விடை பெறுகிறேன்

 109. சென்ஷி said...

  சூட்ட குறைங்கப்பா...யானையெல்லாம் ரெஸ்ட் எடுக்குற நேரம் வந்துடுச்சு

  சென்ஷி

 110. Anonymous said...

  இந்த பின்னூட்டம் அரைமணி நேரம் கழித்து வெளியிடவும்.

  /// பெண்களுக்கு இதுதான் தற்போதைய உடனடித்தேவையா என்பதே எனது நிலைப்பாடு ///

  இந்த கேள்விக்கு அன்பின் ஹரியிடம் கேள்வியை வைத்து அருமையான ஜல்லிக்கு வழிவகுத்தாச்சு..ஹி ஹி.

  கோயில்பட்டி கோயிந்தசாமி.

 111. லக்கிலுக் said...

  நேரம் ஆறு ஆகி விட்டதால். Bye Bye. Take Care.

  பல்லவன் ஹவுஸ் பாடிகாட் முனீஸ்வரன் கோயில்லே ஒரு பெண் அர்ச்சகர் இருக்கிறார். அவரிடம் போய் பெத்தடின் தோஷம் நீங்க மந்திரித்துக் கொண்டு வருகிறேன்.

 112. லக்கிலுக் said...

  நேரம் ஆறு ஆகி விட்டதால். Bye Bye. Take Care.

  பல்லவன் ஹவுஸ் பாடிகாட் முனீஸ்வரன் கோயில்லே ஒரு பெண் அர்ச்சகர் இருக்கிறார். அவரிடம் போய் பெத்தடின் தோஷம் நீங்க மந்திரித்துக் கொண்டு வருகிறேன்.

 113. Hariharan # 26491540 said...

  //சரி. அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு விட்டது என்று வைத்துக் கொள்வோம்.//

  லெட்ஸ் க்ராஸ் தி பிரிட்ஜ் வென் இட்ஸ் ஆன் தி வே லக்கி. அதுவரை காத்திருப்போம். அனுமானங்கள் ஏன்?

 114. உடமாட்டாரு போலகீது said...

  செந்தில்குமரன் ஹரிகரனை இந்த பதிவில் விடமாட்டார் போலிருக்கு. புல் பூஸ்ட்ல கீறார். என்னத்தை சொல்ல. பொன்ஸ், உங்க கை வலிக்கப்போவுது பின்னூட்டத்தை பப்ளிஸ் செய்து.

 115. செந்தழல் ரவி said...

  ///ஆட்டை முடிந்தது. 100 சுயமாக அடித்துக்கொண்ட பொன்ஸுக்கு வாழ்த்துக்கள் கூறி விடை பெறுகிறேன் ///

  ஹரிஹரன், மூன்று உருப்புடியான கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்காமல் போறிங்க...இந்த கேள்விகளை பாருங்க..

  1. எந்த அடிப்படையில் ஒருவர் அர்ச்சகராகலாம்?

  2. அரசியல் இல்லாமல், பிராமிண ஆண்களைத் தவிர வேறு யாரேனும் அர்ச்சகராக உங்களால் ஒத்துக் கொள்ள முடியுமா?

  3. அன்பின் ஹரி, அப்போது பெண்களின் தற்போதைய தேவை என்பதை விளக்குவீர்களா ?

  ஓடிறாதீங்க...உருப்புடியான இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க...!!!!

 116. செந்தில் குமரன் said...
  This comment has been removed by the author.
 117. ஆசிப் மீரான் said...

  ஆமா. உடனடியா வேலையிலே இருந்து பொம்பளைங்களை தூக்கிடுங்க. நல்ல வேளை வேலை செய்யுற பொம்பளைங்கனு எழுதலை. அப்படின்னா யாரையும் தூக்க முடியாமல்லா போயிருக்கும்? அப்படியே வீட்டுக்குள்ள இருந்தும் தூக்கிடுங்க. நிம்மதியா ஆண்குலம் வாழ்ந்துட்டு போகட்டும்.

  என்ன் இருந்தாலும் தெய்வம் இல்லையா? அதான் இப்படி யோசிச்சிருக்கு போல.
  நல்லா இருங்கடே!!

  சாத்தான்குளத்தான்

 118. திரு said...

  பொன்ஸ் பதிவை முழுவதும் படித்தேன் :) பின்னூட்டங்களையும் படித்த பின்னர் மீண்டும் வருவேன் :)

 119. நாமக்கல் சிபி said...

  சரியான மேட்டராகத் தெரிவு செய்து 2 மணி நேரத்தில் 100 ஐக் கடந்த பொன்ஸ் அவர்களுக்குப் பாராட்டுக்கள்!

  இந்த விஷயத்தைப் பற்றிய பின்னூட்டம் பிறகு போடுகிறேன்!

 120. Hariharan # 26491540 said...

  //ஹரிஹரன் பதில் அளிக்காத வரையில் இந்தப் பின்னூட்டம் அவரைப் பற்றி பலர் எண்ணி வந்தது சரியானதே என்பதை இங்கு தங்கி நிரூபிக்கும்.//

  இதற்கு ஒரு சிரிப்பான்.

 121. Hariharan # 26491540 said...

  //3. அன்பின் ஹரி, அப்போது பெண்களின் தற்போதைய தேவை என்பதை விளக்குவீர்களா ? //

  அன்பின் ரவி,

  ஆண் ஈயம் பித்தளை பெண் ஈயம் பற்றி மூச்!

 122. Hariharan # 26491540 said...

  //1. எந்த அடிப்படையில் ஒருவர் அர்ச்சகராகலாம்?

  2. அரசியல் இல்லாமல், பிராமிண ஆண்களைத் தவிர வேறு யாரேனும் அர்ச்சகராக உங்களால் ஒத்துக் கொள்ள முடியுமா? //

  இரண்டாவது எளிது. முடியும். முடியும் முழுமனதுடன் முடியும்.

  முதலாவது பல காரணிகளை உள்ளடக்கியது. பின்னொரு சமயத்தில் பார்க்கலாம்.

 123. Hariharan # 26491540 said...

  இன் பிரின்ஸிபிள் பெண்கள் அர்ச்சகராவதில் தனிப்பட்டு எனக்கு உடன்பாடே.

  வழிமுறைகளில், நடைமுறைப்படுத்தலில் எனக்கு ஆலயங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் அசிங்கங்கள் மாஸாக நடக்கும் என்பதாலேயே ரிசர்வேசன்!

 124. சிந்தாநதி said...

  எல்லோரும் எனக்கு ரொம்ப கைராசின்னு சொல்வாங்க...(மூட நம்பிக்கை) நான் ஆரம்பிச்ச பின்னூட்டம் செஞ்சுரி அடிச்சிடுச்சா?

  ஹரிஹர புத்ராய நமஹ...

  ஆமா இவ்வளவு விவாதம் நடந்திருக்கே...ஏதாவது தெளிவு கெடைச்சிருக்கா?

 125. சிந்தாநதி said...

  இப்போதான் நிலாவுக்கு மகான் ஆகிறது பற்றி பதில் தந்துட்டு வந்தேன். இங்க வந்தா நம்மள நிஜமாகவே மகான் ஆக்கிற விஷயங்கள் நடந்திட்டு இருக்கு...))))))

 126. பொன்ஸ் said...

  சிந்தாநதி,
  அதான் தெளிவு ஆரம்பத்துலயே கிடைச்சாச்சே..

  கோயில்களில் அசிங்கங்கள் நடக்காமல் இருக்க பெண்கள் அர்ச்சகர் ஆகக் கூடாது.

  மற்ற பணியிடங்களிலும் அது நடக்காமல் இருக்க அங்கெல்லாம் இருக்கும் பெண்களையும் நீக்கிவிடுவது சாலச் சிறந்தது. (பார்க்க நண்பர் ஹரிஹரன் கடைசி பின்னூட்டம்)

 127. லட்சுமி said...

  ஆணுக்கும் பெண்ணுக்கும்
  தனிதனி அளவுகோல்கள்.பெண்ணியல்
  தன்மைகளை கொண்டு சமூக கட்டுப்பாடுகள்.
  இவை எல்லாவற்றிலும் போராடி
  சிறிதே சமத்துவத்தை தானே (யாரும் தரவில்லை)அடைந்து கொண்டிருக்கும் பெண்களுக்கு எதிரான கருத்துக்கள் இங்கே பின்னூட்டத்தில் வந்து விழுந்திருக்கிறது. பெண்கள் என்ன செய்யலாம்
  என்ன செய்யக்கூடாது இதை தீர்மானிக்க
  பெண்களை தவிர யாருக்கு உரிமை இருக்கிறது.
  பெண்ணை வீட்டு சிறையில் வைத்திருந்த காலத்திலிருந்து சொல்லி வருகிற வரட்டு வாதம் பெண்ணால் ஆணின் மனம் கெட்டு போகும் என்பது.எத்தகைய பலவீனமானவர்கள்.

 128. கலை said...

  நீங்க அரசு கவனிக்குமா ன்னு கேட்டிருக்கிறதை அரசு நிஜமாவே கவனிக்க ஆரம்பிச்சா என்னாகும் ன்னு நினைச்சு சிரிச்சேன். :)

 129. பங்காளி... said...

  //....பெண்ணால் ஆணின் மனம் கெட்டு போகும் என்பது.எத்தகைய பலவீனமானவர்கள்.//....

  இப்டில்லாம் பிரச்சினை வரும்னுதான்....வாங்கிகிறாகளோ இல்லியோ..பார்த்தவுடன டபக்குனு மனச தூக்கி அவிங்க கைலயே கொடுத்துர்றது....ஹி..ஹி..அது எத்தன பேர்னாலும் சரி...அசர்றதேயில்ல....ஹி..ஹி...

  அதுனால மனசும் கெட்டுபோவாது...நம்மளயும் யாரும் பலவீனமானவன்னு சொல்ல முடியாதுல்ல...என்ன நாஞ்சொல்றது....ஹி..ஹி...

  (கோவிக்காதீங்க லட்சுமி...ச்ச்சும்மா டமாஸ்...அவ்ளோதான்)

 130. செந்தழல் ரவி said...

  ///நீங்க அரசு கவனிக்குமா ன்னு கேட்டிருக்கிறதை அரசு நிஜமாவே கவனிக்க ஆரம்பிச்சா என்னாகும் ன்னு நினைச்சு சிரிச்சேன். :) ////

  கலை, நீங்க சரத்குமாரை சொல்லலியே ?

 131. டைம் கீப்பர் said...

  ////இரண்டாவது எளிது. முடியும். முடியும் முழுமனதுடன் முடியும்.

  முதலாவது பல காரணிகளை உள்ளடக்கியது. பின்னொரு சமயத்தில் பார்க்கலாம். ////

  எந்த சமயம் என்று சொல்லிவிட்டு போகவும் ஹரி அவர்களே...

 132. Hariharan # 26491540 said...

  சரிங்க பொன்ஸ்,

  பொலிடிக்கலி கரெக்ட் ஆன்ஸராகச் சொல்லணும் நான்னு எதிர்பார்க்கின்றீர்கள் நீங்கள்.
  "தாராளமாகப் பெண்கள் வரட்டும்"

  ஏபிசி கோவில் ஆண் பெண் அர்ச்சகர்கள் ஓடிப்போய் அ ஆ இ கோவில்ல கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கன்றதுலேர்ந்து,

  இந்தக் கோவில்ல இந்த சன்னிதியில தீபாராதனை காட்டும் அர்ச்சக ஃபிகர் சூப்பரா இருக்கும்ன்ற கமெண்டுகளுடன் கோவில் வளாகம் மாற்றம் பெறுவது என்பது எவ்வளவுக்கு சமூகத்தில் கீழிறக்கம் தரும் என்பதை இறைநம்பிக்கை இல்லாத பெண்மணிகளுக்குப் புரியாது.

  ஒவ்வொரு சன்னதியிலும் மஃப்டியில் ஈவ் டீஸிங் போலீஸ் கண்காணிப்பு செய்ய வேண்டுமா?

  கோவிலில் பெண்கள் பணிபுரிவது என்பதை விட இது அக்கறைப்பட வேண்டியதாகத் தெரியவில்லையா?

  பெண்கள் எப்படி வரணும்னு நான் சொல்லலை. அது என் வேலையும் இல்லை. நானே பித்தளை:-))

  கோவில் சூழல் எப்படி இருந்தால் தற்போதிலிருப்பதிலிருந்து இன்னும் மோசமாகாது என்பதான கோணத்தில் பார்க்கவே கூடாதா?

  முன்முடிவாக என்னைப் பெண்களுக்கெதிரானவனாக கருதவேண்டியதில்லை. அப்போது நான் சொல்ல வருவதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல் தென்படும்.

 133. திரு said...

  பெண் அர்ச்சகர் ஆகலாமா என தீர்மானிக்க எந்த 'ஆண்மகன்களுக்கும்' உரிமையில்லை. ஆண்தான் அர்ச்சகர் ஆகலாம் என தீர்மானித்தது யார்? எப்போது? பெண் அர்ச்சகர் ஆகக்கூடாது என எந்த கடவுள் வந்து சொன்னது?

  ~~000~~

  பெண் குறிப்பிட்ட வேலைகளை தான் செய்யவேண்டும் என உடலை, மனதை, இயற்கையான உடலியல் மாற்றத்தை காட்டி 'தீட்டாக' மதங்கள் வைத்தது. மதங்களின் சட்டங்களை வகுத்து பதவிகளை நிரப்பியவர்கள் ஆண்கள் ஆதலால் இது ஆண்களுக்கு சாதகமாகவே நடந்தது. இந்த விடயத்தில் இந்துமதம், கத்தோலிக்க கிறிஸ்தவ மதம், இஸ்லாம் முதலியவை ஒன்றே.

  ~~000~~

  பர்தா பற்றிய வாதங்களுக்கு பெண்ணை போகப்பொருளாக பார்க்கும் ஆண்களின் விளக்கம் சிரிப்பை மூட்டுகிறது. பாதிரியாராக ஆகும் உரிமை விடயத்தில் போப்-ன் ஆணாதிக்க பழமைவாத நிலையை உலகமே சிரிக்கிறது. அர்ச்சகர் விசயத்தில் ஆகமம், சாத்திரம் என பரம்பரை புரட்டுகளை சொல்லி தப்பிக்கிறது இந்து ஆணாதிக்கம்.

  ~~000~~


  ஆணாதிக்க மதக்கருத்துக்களில் ஊறி திளைக்கும் பாதிக்கப்பட்ட பலர் உண்டு; ஹரிஹரன் மட்டுமல்ல. பாதிக்கப்பட்டவனுக்கும் மருத்துவம் அவசியம். பாதிப்பை உருவாக்குகிற மதச்சட்டங்களை மாற்ற போராடுதல் மிக அவசியம். இல்லையேல் ஹரிஹரனுக்கு பதில் இன்னொருவர் உருவாக காரணம் அப்படியே இருக்கும். மதங்களின் பெண்ணுக்கு எதிரான கட்டுப்பாடுகள் விடயத்தில் அரசு சட்டநடவடிக்கை அவசியம்! இல்லையேல் சகமனிதர்களான பெண்களின் உரிமை மத அங்கிகளுக்குள் அடைபடும்...

  ~~000~~

  பெண்கள் வேலை செய்யும் இடங்களில் (கோயில்கள் உட்பட) பெண்களால் பிரச்சனை என்பதை மறுக்கிறேன். பெண்கள் அர்ச்சகர் ஆவதால் கோயில்களில் பிரச்சனை உருவெடுக்கும் என்ற விவாதம் பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனிக்கோயில்கள் (வழிபாட்டுத்தலங்கள்), வீடுகள் என்ற முறை தான் உருவாக்க முனைகிறதோ? பிரச்சனையை ஏற்படுத்துகிற ஆண்களை தண்டிப்பதா இல்லை அதற்கு காரணம் பெண்கள் என பழிபோட்டு உரிமையை அடக்குவதா?

  பெண் அர்ச்சகர் விடயத்தில் பிரச்சனை பெண்களிடமல்ல.

  ~~000~~

  இந்துசமய அறநிலையத்துறை பதவி நியமனங்கள் பற்றி இங்கு குழப்ப அவசியமில்லை.

  ~~000~~

  இது முதல் பின்னூட்டம். இன்னும் வருவதை படித்தபின் வருகிறேன்.

  டிஸ்கி: இது யாரையும் புண்படுத்த அல்ல :)

 134. திரு said...

  //Hariharan # 26491540 said...
  இந்தக் கோவில்ல இந்த சன்னிதியில தீபாராதனை காட்டும் அர்ச்சக ஃபிகர் சூப்பரா இருக்கும்ன்ற கமெண்டுகளுடன் கோவில் வளாகம் மாற்றம் பெறுவது என்பது எவ்வளவுக்கு சமூகத்தில் கீழிறக்கம் தரும் என்பதை இறைநம்பிக்கை இல்லாத பெண்மணிகளுக்குப் புரியாது.//

  ஹரிஹரன்,

  'அர்ச்சக ஃபிகர் சூப்பரா இருக்கும்' னு சொல்லுறது யாரு? அவங்களுக்கு தண்டனையா? இல்லை பெண் அர்ச்சகரே அதனால் கூடாது என்பதா?

  ஒரு காலத்தில் பெண்கள் பள்ளிக்கு சென்றால் 'கெட்டுப்போவாள்' என்று பேசினார்கள். 'பள்ளியின் புனிதம் காக்க புறப்பட்டு பெண்ணை பாதுக்கத்த' பழமைவாதிகள். பெண் பள்ளிக்கு சென்ற பின்னர் சமூகம் முன்னேற்றப்பாதைக்கு சென்றிருக்கிறதா இல்லையா? பழைய புரட்டுகள் என்னாச்சு?

  இதில் பெண்கள் அர்ச்சகர் ஆக குரல் கொடுப்பவர்கள் கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் என முத்திரை குத்துவது, உண்மை பிரச்சனையை திசைதிருப்ப மட்டுமே உதவும். உரிமையை கேட்க நம்பிக்கையல்ல இங்கு அடிப்படை. சற்று சிந்தியுங்கள் நண்பரே!

 135. செந்தழல் ரவி said...

  திரு, அருமையான பதில்...கொஞ்சம் உருப்புடியாக இருந்தது உங்கள் விளக்கம்...!!!!!!

 136. பொன்ஸ் said...

  // ஏபிசி கோவில் ஆண் பெண் அர்ச்சகர்கள் ஓடிப்போய் அ ஆ இ கோவில்ல கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கன்றதுலேர்ந்து,

  இந்தக் கோவில்ல இந்த சன்னிதியில தீபாராதனை காட்டும் அர்ச்சக ஃபிகர் சூப்பரா இருக்கும்ன்ற கமெண்டுகளுடன் கோவில் வளாகம் மாற்றம் பெறுவது என்பது எவ்வளவுக்கு சமூகத்தில் கீழிறக்கம் தரும் என்பதை இறைநம்பிக்கை இல்லாத பெண்மணிகளுக்குப் புரியாது. //
  இப்போது மட்டும் இது போன்ற கமெண்டுகள் இல்லை என்று சொல்கிறீர்களா ஹரிஹரன்? கோயிலுக்கு வரும் பெண்களை மட்டும் சைட் அடிக்க வரும் ஆண்களைப் பற்றி நீங்களே தான் முன்பொரு பின்னூட்டத்தில் சொன்னது. அப்படி மட்டும் கோயிலின் புனிதம் கெடுவது சரியா? ஏன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும்? அவர்கள் அங்கு வருவதால் தானே, இது போன்ற கமெண்டுகளால் தெய்வ சன்னிதானம் புனிதம் கெட்டுப் போகிறது?

  ஆக, இனிமேல் பெண்கள் கோயிலுக்கு வரக் கூடாது என்றும் சட்டம் கொண்டுவரலாம்.

  இவ்விடத்தில் முக்கியமான குறிப்பு: நான் இறை நம்பிக்கை உள்ளவள் தான். கடவுளை நம்புகிறவள். ஆனால், கற்பிக்கப்பட்ட கடவுளை அல்ல. என்னிலும், உங்களிலும் எல்லா உயிர்களுக்குள்ளும் இருப்பது தான் கடவுள் என்று நம்புபவள். அந்தக் கடவுள் கோயிலுக்குள்ளும் இருக்கிறது என்பதையும்.

  // ஒவ்வொரு சன்னதியிலும் மஃப்டியில் ஈவ் டீஸிங் போலீஸ் கண்காணிப்பு செய்ய வேண்டுமா? //
  ஏன் செய்ய வேண்டும்? சர்வ வல்லமை பொருந்திய கடவுள், தன்னிடம் வேலை செய்யும் பெண்களைக் காக்காதா? எத்தனையோ பணியிடங்களில், ஏன் எங்கள் அலுவலகங்களில் வேலை செய்யும் பெண்கள் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கேட்கிறார்களா என்ன?
  பெண்கள் அர்ச்சகர் ஆனால், அர்ச்சகராக வரும் பெண்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள என்ன தேவையோ, அந்தத் தற்காப்புக் கலைகளைச் சொல்லிக் கொடுத்து அனுப்புவோம். இதென்ன கஷ்டமா?

  // நானே பித்தளை:-)) //
  பித்தளை என்பது உங்களின் பேரீச்சம்பழம் போல் கிண்டலாக சொல்லப்பட்டதில்லை. ஏற்கனவே விளக்கிவிட்டது மாதிரி, இன்றைக்குத் தங்கத்தை விட விலை உயர்ந்ததும் அரிதுமான பிளாட்டினம் என்ற எண்ணத்தில் சொல்லப்பட்டது தான் அது. நீங்கள் அப்படி ஒரு விலையுயர்ந்த பித்தளை தானே!

  // கோவில் சூழல் எப்படி இருந்தால் தற்போதிலிருப்பதிலிருந்து இன்னும் மோசமாகாது என்பதான கோணத்தில் பார்க்கவே கூடாதா? //
  மீண்டும் அதே கேள்வி, இப்போதிருக்கும் சூழலிலிருந்து மோசமாவது பெண்களாலா? அதற்குக் காரணம் ஆண்களா? அப்படிப்பட்ட ஆண்களைத் திருத்த நாம் என்ன செய்கிறோம்?

  // முன்முடிவாக என்னைப் பெண்களுக்கெதிரானவனாக கருதவேண்டியதில்லை. அப்போது நான் சொல்ல வருவதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல் தென்படும். //
  அப்படிக் கருதாவிட்டாலும், நீங்கள் சொல்வது பூரா பூரா பெண்களுக்கு எதிராகத் தான் தோன்றுகிறது.

  முதலிலேயே நான் சொன்னது போல், உலகின் எந்த வெளி வேலைக்கும் பெண்களை அனுப்பாமல் ஊறுகாய் ஜாடிகளைத் திறந்து மூட மட்டும் அனுமதித்தால் தான், உலகம் உருப்படும்.

 137. வழிப்போக்கன் said...

  இந்தப் பதிவில் என்னுடைய பின்னூட்டம் கண்டிப்பாக இருக்கவேண்டுமென்பதால்...

  :-)

 138. நாடோடி said...

  ஹலோ பொன்ஸ்,

  இங்கு திராவிட குஞ்சுகள் வந்ததால் நானும் பதிலலிக்க வேண்டியதுதாயிற்று.

  எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. கோயிலை எட்டி பார்த்து பல வருடங்கள்(ஒரு நிறுவனப்பட்ட அமைப்புடைய) ஆயிற்று.

  இந்த திராவிட குஞ்சுகளுக்கு கோயிலோ அல்லது அதன் நிர்வாகத்தையோ விமர்சிக்க எள்ளவும் உரிமை கிடையாது.
  இங்கு வலைதிரட்டியில் பொங்கலை மதத்துடன் சம்பந்தப்படுத்தும் போது முன்புறம்,... பொத்தி எதுவுமே நடக்காத்து போல் தன்மானம் கெட்டு ஓட்டுக்காக எஜமானர் வீட்டு டாய்லெட் துடைத்து கொண்டிருந்தனர். இவர்கள் இந்து மதத்தை விமர்சிக்க துளியும் அருகதையற்றவர்கள்.

 139. பொன்ஸ் said...

  //இங்கு திராவிட குஞ்சுகள் வந்ததால் நானும் பதிலலிக்க வேண்டியதுதாயிற்று.//
  திராவிடக் குஞ்சுகள்/ திரா'விட'ப் பெத்தடின் எதுவும் எனக்குத் தெரியாது, நாடோடி.

  இறைநம்பிக்கை உடைய நான் எழுதி இருப்பதைப் பற்றி உங்களுடைய கருத்து எதையும் சொல்லாமலே போய்விட்டீர்களே!

 140. நாடோடி said...

  //இறைநம்பிக்கை உடைய நான் எழுதி இருப்பதைப் பற்றி உங்களுடைய கருத்து எதையும் சொல்லாமலே போய்விட்டீர்களே!//

  நான்தான் நாத்திகன் ஆயிற்றே .. என்னை கோட்டால் மதங்களை தாண்டி மனிதன் நகர்ந்திருக்க வேண்டும். மதத்தில் இருந்தால்தான் அந்த பிரச்சனைகள்.மதத்தில் இருப்பவர்கள்தான் யார் வேண்டும் என்று , வேண்டாம் என்று சண்டையிட்டு கொண்டிருக்கவேண்டும்.

  மேலும் ஒரு கேள்வி அந்த படத்தில் இருப்பவர்கள் கணவன், மனைவியாக இருந்தால் ஒரு கணவன் தன் மனைவி தோள் மீது கையை போடக்கூடாது என்பீர்களா. அந்த இடத்தில் இரு ஆண்கள அல்லது பெண்கள் தோள் மீது கைபோட்டு இருப்பதை எவ்வாறு எடுப்பீர்கள். அவற்றை விமர்சிப்பது தனிமனித சுத்தந்திரத்தில் தலையிடுவது இல்லையா?.

  கேரளா,கர்நாடக,சில தமிழ்நாட்டு கோவிலகளில் ஆண்கள் சட்டையுடன் நுழைவதை அனுமதிக்க மாட்டார்கள்.அதனால் சட்டையில்லாமல் பூனூலுடன் கோவில்களில் காண்பவர்களை எல்லாம் அர்ச்சகர் என்று கொள்ளலாமா?..

  போன வருடம் திருச்சந்தூர் முருகன் கோவிலுக்கு என்னை எங்கள் அம்மா வலுக்கட்டாயமா கூட்டி சொன்றார்கள். அங்கு சட்டை அணியவிடவில்லை.பார்பனீயத்திற்க்கு முருகன் அடிமையாகிவிட்டார். அதனால் இந்த மாற்றங்கள்.அங்கு சட்டையை கழற்ற சொன்னதால் என் அம்மாவிடம் சண்டை போட்டேன்.

  இன்னும் சிறிது காலத்தில் கோவில்களில் பூனூல் போட்டவர்களை மட்டுமே அனுமதிப்பார்கள். அதாவது தற்காலிக பூனூல் என்று ஒன்றை ஏற்படுத்திவிடுவார்கள் வாடகைக்கு வேஷ்டி,சேலை கோவில்களில் கிடைப்பது போல்.ஏதோ இது இந்து மதத்தில் மட்டுமே நடக்கிறது என்று இல்லை. எல்லா மதங்களிலும்( அதாவது இந்தியாவிலிருக்கும்)உள்ள மக்கள் தன் சுய சமுதாய அடையாளங்களை இழக்க,அல்லது தான் சார்ந்த மதத்திற்காக அழிக்க தொடங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது.

  இங்கு இன்னும் எல்லோரும் அர்ச்சகராகவில்லை,பெண்கள் அர்சகராக வேண்டும் என்பது முட்டாள்தனமான வாதங்கள். அதாவது அவர்களுக்கு இன்னும் மதம் தேவைப்படுகிறது அரசியலுக்கோ,தன் சாதி கட்டமைப்பிற்கோ அல்லது வேறு எதாவதிற்கு.இது இருக்கும் வரை பெண்கள் அர்சகராக்கூடாது, பெண்கள் பர்தா போடவேண்டும் என்று அவர்கள் மீது திணிப்பது நடந்து கொண்டிருக்கதான் செய்யும்.

 141. பங்காளி... said...

  இப்ப கொஞ்சம் சீரியஸா ஒரு பின்னூட்டம்....

  முதலில் மதம் என்பதே பேத்தல்...ஒரு வகையில் காலங்காலமாய் சேர்த்துவைத்த அழுக்குகளின் குப்பைத் தொட்டி.இதில் யாருடைய குப்பைத்தொட்டியில் நாற்றமதிகமென பேசுவது மடமையின் உச்சம்.

  மதம்,சமூகம் என்கிற வக்கிரத்தை முன்வைத்து பெண்ணை உணர்ச்சியற்ற கோவில் சிலைகள் போல எதிலியாக வைக்க நினைக்கும் இந்த மூடர்களை தகர்த்தெறிந்து முன்னேறிச்செல்வதே விவேகம்.

  பென்மை தியாகத்தின் அம்சம், அப்பென்மைதான் தாய்மையாய் உயர்ந்து நம்மிடையே பரிவென, பண்பென, கருணையென கடவுள்தன்மையாக கூறப்படும் அத்தனையையும் கற்றுத்தருகிறது...இதை எப்படி வசதியாக மறந்து போனீர்கள்....

  தாய்மையை பெண்களுக்கு மட்டுமேயான உறுத்தோ உரிமையோ இல்லை நண்பர்களே....நமக்குள்ளும் தாய்மை உண்டு, அதை உணரத் தலைப்பட்டாலே இத்தகைய விவாதங்கள் காணாமல் போய்விடும்.

  தாய்மை பரிசாய் வந்த கடவுள் என்பது சத்தியவாக்கு....இதை உணர்வோம்...உயர்வோம்.

 142. Hariharan said...

  //இதில் பெண்கள் அர்ச்சகர் ஆக குரல் கொடுப்பவர்கள் கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் என முத்திரை குத்துவது, உண்மை பிரச்சனையை திசைதிருப்ப மட்டுமே உதவும். உரிமையை கேட்க நம்பிக்கையல்ல இங்கு அடிப்படை. சற்று சிந்தியுங்கள் நண்பரே! //

  இந்து எனச் எம்மைச் சாக்கடையில் தள்ளாதே என்கிற எண்ணமிருக்கும் நீங்கள் கோவில் அர்ச்சகர் உரிமை பற்றிப்பேசுவது சரியான காமெடியாக இருக்கிறது திரு.

 143. Hariharan said...

  //மேலும் ஒரு கேள்வி அந்த படத்தில் இருப்பவர்கள் கணவன், மனைவியாக இருந்தால் ஒரு கணவன் தன் மனைவி தோள் மீது கையை போடக்கூடாது என்பீர்களா. அந்த இடத்தில் இரு ஆண்கள அல்லது பெண்கள் தோள் மீது கைபோட்டு இருப்பதை எவ்வாறு எடுப்பீர்கள். அவற்றை விமர்சிப்பது தனிமனித சுத்தந்திரத்தில் தலையிடுவது இல்லையா?.//

  இந்தப் பார்வையிலான கேள்விக்கு நன்றி நாடோடி. நேற்று நான் கேட்க நினைத்த கேள்வி. நான் இப்படிக் கேட்டிருந்தால் முன்முடிவுகளுடன் குய்யோ முறையோ என குதித்திருப்பார்கள்.

 144. Hariharan said...

  // கோவில் சூழல் எப்படி இருந்தால் தற்போதிலிருப்பதிலிருந்து இன்னும் மோசமாகாது என்பதான கோணத்தில் பார்க்கவே கூடாதா? //
  மீண்டும் அதே கேள்வி, இப்போதிருக்கும் சூழலிலிருந்து மோசமாவது பெண்களாலா? அதற்குக் காரணம் ஆண்களா? அப்படிப்பட்ட ஆண்களைத் திருத்த நாம் என்ன செய்கிறோம்? //

  பொன்ஸ்,

  ஆண்கள் 75% பெண்கள் 25% பெண்களை குற்றஞ்சாட்ட வரவில்லை. ஆண்களை முதலில் தமிழகத்தில் பெண்களுடன் பேதமின்றி சரிசமமாக பேருந்தில், பள்ளி, கல்லூரியில் பழகும் படியான சமூகமாக முதலில் மாற்ற வேண்டும்.

  இதனாலேயே கோவிலில் பெண்கள் அர்ச்சகராகவேண்டும் என்பது உடனடித்தேவையாக இருக்கிறதா என்பது எனது நிலைப்பாடு

 145. பொன்ஸ் said...

  //மேலும் ஒரு கேள்வி அந்த படத்தில் இருப்பவர்கள் கணவன், மனைவியாக இருந்தால் ஒரு கணவன் தன் மனைவி தோள் மீது கையை போடக்கூடாது என்பீர்களா. அந்த இடத்தில் இரு ஆண்கள அல்லது பெண்கள் தோள் மீது கைபோட்டு இருப்பதை எவ்வாறு எடுப்பீர்கள். அவற்றை விமர்சிப்பது தனிமனித சுத்தந்திரத்தில் தலையிடுவது இல்லையா?.
  //
  நாடோடி,

  1. அந்தப் பதிவைப் படித்துப் பாருங்கள். அவர்கள் சும்மா கோயிலுக்கு வந்தவர்கள் என்று பதிவு சொல்லவில்லை. பூசை செய்யும் வேலை செய்பவர்கள் தான் - அதாவது இன்று ஹரிஹரன் எந்த வேலையைப் பெண்கள் செய்தால் கூட வேலை செய்யும் ஆண் மனதைக் கெடுத்துவிடுவார்கள் என்று சொல்கிறாரோ, அதே வேலை.

  2. அப்படி அவர் அந்தப் பெண்ணின்(மனைவியோ இல்லையோ) தோள் மீது கை போட்டது தப்பு என்று நான் எங்காவது குறிப்பிட்டிருக்கிறேனா? தப்பு அந்தச் செயலில் இல்லை. வேலை நேரத்தில், பணியிடத்தில் அந்தச் செயலைச் செய்வது தான் தேவையா என்று புரியவில்லை.

  இது போல் ஒருவர் வேலை நேரத்தில் தன் மனைவியை அழைத்துவந்து மகிழ்ந்திருப்பது தவறில்லை என்று கருதுபவர்கள், இது போன்ற பணியிடங்களில் பெண்களை வேலைக்கமர்த்திய பிறகு, அவர்களால் இருப்பதினாலேயே, இதே போன்ற/இதைவிட அதிகமான நிகழ்வுகள் நடந்து புனிதம் கெட்டுவிடும் என்று காரணம் சொல்லும் போது தான் சிரிப்பு வருகிறது :)

 146. செந்தில் குமரன் said...
  This comment has been removed by the author.
 147. பொன்ஸ் said...

  // ஆண்களை முதலில் தமிழகத்தில் பெண்களுடன் பேதமின்றி சரிசமமாக பேருந்தில், பள்ளி, கல்லூரியில் பழகும் படியான சமூகமாக முதலில் மாற்ற வேண்டும்.//
  முதன் முறையாகக் கொஞ்சம் ஒப்புக் கொள்ளக் கூடிய ஒரு விஷயத்தைச் சொல்லி இருக்கிறீர்கள்.. ஆனால், ஒவ்வொன்றாக மாறவேண்டும் என்று காத்திருப்பது நியாயமானதாக எனக்குத் தோன்றவில்லை.

  அப்படிக் காத்திருப்பதாக இருந்தால், ஏற்கனவே சொன்னது போல் பதிவில் உள்ள ஒவ்வொருவேலையிலுமே பெண்களை அனுமதிக்காமல், காத்திருப்பதே சாலச் சிறந்ததாக இருக்கும்..

  உங்கள் பதிவொன்றில் நண்பர் வஜ்ரா சொன்னது போல், இன்றைக்கு எந்தப் பெண்ணாவது தயாராக இருந்தால், அவரை அர்ச்சகர் ஆக ஒப்புக் கொள்ள நம்மிடையே மனத்தடை தேவையில்லை என்பதே என் நிலைப்பாடு. அதே போல், முன்வரும் பெண்களை, நீங்கள் குறிப்பிட்டது போன்ற பிரச்சனைகளைச் சொல்லிப் பயமுறுத்துவதும் தேவையில்லை.

  //பெண்களை குற்றஞ்சாட்ட வரவில்லை.//
  நீங்கள் அடுத்த பதிவெழுதும் பொழுதும் இதே நிலைப்பாடு இருந்தால் கொஞ்சம் படிக்கிற எங்களுக்கு நிம்மதியாக இருக்கும்!

  என்னத்தச் சொல்ல :))

 148. Gopalan Ramasubbu said...

  "Religion is an insult to human dignity. With or without it, you'd have good people doing good things and evil people doing bad things, but for good people to do bad things, it takes religion".

  -Steven Weinberg

  I guess the above quote fits within the scope of this post and the arguments going on here :)

 149. சென்ஷி said...

  //எல்லா மதங்களிலும்( அதாவது இந்தியாவிலிருக்கும்)உள்ள மக்கள் தன் சுய சமுதாய அடையாளங்களை இழக்க,அல்லது தான் சார்ந்த மதத்திற்காக அழிக்க தொடங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது.//

  சத்தியமான வார்த்தைகள். நாம் இன்றுவரை குறிப்பிட்ட மதத்தின் மனிதர்களாக மட்டுமே வாழ்ந்து வருகிறோம். ஆணோ, பெண்ணோ நாம் அச்சப்படுவது நம் மனசாட்சிக்கு அல்ல. அக்கம் பக்கத்து வீட்டினருக்கு மட்டும்தான்,. இது தென்னிந்தியாவில் சற்று அதிகம்.

  //மேலும் ஒரு கேள்வி அந்த படத்தில் இருப்பவர்கள் கணவன், மனைவியாக இருந்தால் ஒரு கணவன் தன் மனைவி தோள் மீது கையை போடக்கூடாது என்பீர்களா. அந்த இடத்தில் இரு ஆண்கள அல்லது பெண்கள் தோள் மீது கைபோட்டு இருப்பதை எவ்வாறு எடுப்பீர்கள். அவற்றை விமர்சிப்பது தனிமனித சுத்தந்திரத்தில் தலையிடுவது இல்லையா?//

  இருக்கலாம். ஆனால் பதிவில் சற்று அநாகரிகமாக நடந்து கொண்டதாகத்தான் வருகிறது. கோயிலில் கணவன் மனைவி வந்தால் கூட தெய்வ சந்நிதியில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கூட்டி, கழித்து, வகுத்து வைத்துள்ளனர்.

  //இந்து எனச் எம்மைச் சாக்கடையில் தள்ளாதே என்கிற எண்ணமிருக்கும் நீங்கள் கோவில் அர்ச்சகர் உரிமை பற்றிப்பேசுவது சரியான காமெடியாக இருக்கிறது திரு. //

  அவருக்கு மதத்தின் மீதுதான் நம்பிக்கையில்லாமல் இருக்கின்றது. மனிதத்தின் மீது அல்ல. இங்கு சம உரிமை பற்றி பேசுவோர் ஏன் கோயிலை சேர்ப்பதில்லை என்பது தான் கேள்வி


  //ஆண்களை முதலில் தமிழகத்தில் பெண்களுடன் பேதமின்றி சரிசமமாக பேருந்தில், பள்ளி, கல்லூரியில் பழகும் படியான சமூகமாக முதலில் மாற்ற வேண்டும்.

  இதனாலேயே கோவிலில் பெண்கள் அர்ச்சகராகவேண்டும் என்பது உடனடித்தேவையாக இருக்கிறதா என்பது எனது நிலைப்பாடு//

  சரியான கருத்து. நான் உங்கள் கருத்துடன் ஒத்து போகிறேன். ஆனால் அதன் ஆரம்ப சூழல் கோயிலாக இருக்கட்டும் என்பதுதான் எங்கள் (பொன்ஸ் கருத்தை ஆதரிப்போர்) வாதம்.

  சென்ஷி

 150. Hariharan said...

  //ஆணாதிக்க மதக்கருத்துக்களில் ஊறி திளைக்கும் பாதிக்கப்பட்ட பலர் உண்டு; ஹரிஹரன் மட்டுமல்ல. பாதிக்கப்பட்டவனுக்கும் மருத்துவம் அவசியம். பாதிப்பை உருவாக்குகிற மதச்சட்டங்களை மாற்ற போராடுதல் மிக அவசியம். இல்லையேல் ஹரிஹரனுக்கு பதில் இன்னொருவர் உருவாக காரணம் அப்படியே இருக்கும். //

  ஆணாதிக்கம் அல்ல நான் சொல்வது. பெண்கள் மீதான அக்கறையிலேயே. இப்பதிவிட்ட பொன்ஸோ, என்வீட்டுப்பெண்களோ, இந்துவென சாக்காடையில் இறங்காத உங்கள் வீட்டுப் பெண்களோ அர்ச்சகர்வேலைக்குப் போகப்போவதில்லை என்பது நிச்சயம்.

  நான் பொலிடிகலி கரெக்ட் எனும் கருத்தினைப் பேசவருவதில்லை.

  ஒரு அலுவலக வேலையிடத்தில் ரோட்சைட் ரோமியோக்கள் வந்து தொல்லை தரமுடியாது.

  கல்லூரியின் உள்ளே ஓரளவுக்கு ரோட்சைட் ரோமியோக்களிடம் இருந்து பெண்களுக்கு விடுதலை கிடைக்கிறது.

  கோவில் அப்படியானதல்ல. வீபூதியைப் பூசியபடி எந்த ரோட் சைட் ரோமியோவும் உள்ளே வரலாம். இந்தச் சூழல் பொலிடிகலி கரெக்ட் பேசும் சூழல் அல்ல.

  அர்ச்சனை யார் பேருக்கு எனக் கேட்டால் ரோட் சைட் ரோமியோக்கள் உங்க பேருக்கே அர்ச்சனை என்று ஜொள்ளு வழிவதிலிருந்து, அர்ச்சனைத்தட்டில் ஐ லவ் யூ சீட்டு வைப்பதிலிருந்து, தேவையே இல்லாமல் தொடுவதிலிருந்து இந்த வேலையில் பெண்கள் வந்தால் படும் இன்னல்கள் அதிகம்.

  பெண்களைக் குறைசொல்லி நான் வரவில்லை இங்கே. தமிழகத்தின் முதல்வனே பொறம்போக்குத்தனமாகப் பெண்கள் குறித்தும், பெண்கடவுளர்கள் குறித்தும் மட்டமாகப் பேசி பெண்ணுரிமையை நிலைநாட்டி வரும் சூழலில் கோவில் வளாகங்கள் ஈவ் டீஸிங் செண்டர்களாகும் வாய்ப்பே அதிகம்.

  சமூகத்தில் புனிதம், மன அமைதி, தெய்வீகச் சூழல் என்றெண்ணி பலர் வரும் கோவில்களில் இந்த எக்ஸ்ப்ரிமெண்ட் முன்னுரிமையில் வரும் தேவையா? இல்லை என்பது எனது நிலைப்பாடு.

  ஆணாதிக்கம் எனது நிலைப்பாட்டில் இல்லை. சமூகத்தினை சரிசமமாக, பேதமின்றி ஆண் பெண் பேருந்து, பேருந்து நிறுத்தம், கல்லூரி, பள்ளி எனப் பாலியல் பார்வை தவிர்த்துப் பழகும் புதிய தலைமுறையை உருவாக்குங்கள். இது முதல் உடனடித் தேவை.

  அழுகல் சமூகத்தில் கொஞ்சம் அமைதி இன்னும் கிடைக்கும் இடமாக இருக்கும் கோவில்கள் இன்னும் மோசமாக ஆகிவிடக்கூடாது என்பதே எனது பாயிண்ட்.

 151. Hariharan said...

  //யாரையும் இது பற்றி பேசக் கூடாது என்று சொல்ல உமக்கு உரிமை கிடையாது. ஜனநாயக நாடு தான் இது. யாரும் எதைப் பற்றியும் பேச உரிமை இருக்கிறது. உங்களுடைய இந்து பாசிச முகத்தை இங்கே காண்பிக்காதீர்கள்.//

  செந்தில் குமரன்,

  நான் திரு பேசுவது நகைப்பாக இருக்கிறது என்றேனே தவிர பேசவே கூடாதுன்னு எங்கே சொன்னேன்?

  உங்கள் வெறுப்பு முகத்தைக் காண்பிக்காதீர்கள் செந்தில் குமரன்.

 152. Hariharan said...

  //உங்கள் பதிவொன்றில் நண்பர் வஜ்ரா சொன்னது போல், இன்றைக்கு எந்தப் பெண்ணாவது தயாராக இருந்தால், அவரை அர்ச்சகர் ஆக ஒப்புக் கொள்ள நம்மிடையே மனத்தடை தேவையில்லை என்பதே என் நிலைப்பாடு. அதே போல், முன்வரும் பெண்களை, நீங்கள் குறிப்பிட்டது போன்ற பிரச்சனைகளைச் சொல்லிப் பயமுறுத்துவதும் தேவையில்லை.//

  நான் பயப்படுவது பெண்கள் இந்த வேலைக்கு வருகிறார்களே என்பதால் அல்ல.

  இந்த வேலைக்கு வரும் பெண்களை என் வீட்டுப் பெண்களாக எண்ணி அவர்களுக்கு எதிர்நோக்கியிருக்கும் நடைமுறை அல்லல்களை உணர்வதாலேயே இது உடனடித் தேவையா என்கிறேன்.

  பல பெரிய கோவில்களில் சிறிய ஆள் அரவமற்ற சன்னிதிகளில் ஆண்களே இருக்க முடியாத அளவுக்கு இருட்டும், வௌவாலும் என இருக்கும் சூழலில் பெண் அர்ச்சகர்களுக்கு பாதுகாப்பு என்பது மிக ஈஸியாக ஒதுக்கிவிடமுடியாது.

  நான் என் குடும்பத்துக்கு ஒவ்வாததாகக் கருதுவதை எவர்க்கும் பரிந்துரைப்பதில்லை. என் வீட்டுப் பெண்களை அர்ச்சகராக்கும் எண்ணமில்லை.

  பெண் அர்ச்சகராகும் வேலையில் கிடைக்கும் மிகச் சொற்பமான சம்பளத்திற்கும் கிடைக்கும் ஏராளமான இன்னல்களையும் விட சாதாரணமான ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனிவேலையில் பல மடங்கு சம்பளம் அதிகம் ஒரு பெண் பெற்றுவிடலாம். நிம்மதியாகவும் இருக்கலாம்.

 153. பங்காளி... said...

  எப்படா பொழுது விடியும்னு காத்திருந்தீகளா.....கெளப்புங்க கெளப்புங்க....

 154. யெஸ்.பாலபாரதி said...

  //பெண் அர்ச்சகராகும் வேலையில் கிடைக்கும் மிகச் சொற்பமான சம்பளத்திற்கும் கிடைக்கும் ஏராளமான இன்னல்களையும் விட சாதாரணமான ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனிவேலையில் பல மடங்கு சம்பளம் அதிகம் ஒரு பெண் பெற்றுவிடலாம். நிம்மதியாகவும் இருக்கலாம்//

  ஹரி.. அப்ப வழிப்பாட்டு தளங்கள் பொறுக்கிகளின் கூடாரமாகி விட்டது என்று எடுத்துக்கொள்ளலாமா?

 155. Hariharan said...

  //ஹரி.. அப்ப வழிப்பாட்டு தளங்கள் பொறுக்கிகளின் கூடாரமாகி விட்டது என்று எடுத்துக்கொள்ளலாமா?//

  பாலபாரதி,

  வழிபாட்டுத் தலங்கள் பொறுக்கிகளை ஈர்க்கும் கூடாரமாகி விடக்கூடாது என்பதுதான் நான் சொல்வது

 156. செந்தில் குமரன் said...

  என்னுடைய இரண்டு பின்னூட்டங்களை இந்தப் பதிவில் இருந்து விலக்கி உள்ளேன்.

 157. கல்வெட்டு said...

  ஹரி,
  //பல பெரிய கோவில்களில் சிறிய ஆள் அரவமற்ற சன்னிதிகளில் ஆண்களே இருக்க முடியாத அளவுக்கு இருட்டும், வௌவாலும் என இருக்கும் சூழலில் பெண் அர்ச்சகர்களுக்கு பாதுகாப்பு என்பது மிக ஈஸியாக ஒதுக்கிவிடமுடியாது.//

  இறைவன் உள்ளான் என்று நம்பித்தான் சிலையும் அதற்கு பூஜையும்..அவனை நம்பியே அர்ச்சகர்..ஆணோ பெண்னோ தனக்கு பணிவிடை செய்யும் அர்ச்சகரை எல்லாம் வல்ல இறைவனால் காக்க முடியாதா?

  //பெண் அர்ச்சகராகும் வேலையில் கிடைக்கும் மிகச் சொற்பமான சம்பளத்திற்கும் கிடைக்கும் ஏராளமான இன்னல்களையும் விட சாதாரணமான ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனிவேலையில் பல மடங்கு சம்பளம் அதிகம் ஒரு பெண் பெற்றுவிடலாம். நிம்மதியாகவும் இருக்கலாம்.//

  கடவுள் பணியிலேயே நிம்மதி இல்லை என்றால் கும்பிடுவர்களுக்கு எப்படி நிம்மதி தருவான் அந்த இறை?

 158. யெஸ்.பாலபாரதி said...

  //வழிபாட்டுத் தலங்கள் பொறுக்கிகளை ஈர்க்கும் கூடாரமாகி விடக்கூடாது என்பதுதான் நான் சொல்வது

  என்னதான் சொல்லவாரீங்கன்னே புரியலேங்களே அண்ணா, பெண்கள் அர்ச்சகர் ஆனார் வழிபாட்டு தளங்கள் பொறுக்கிகளின் கூடாரமாக எப்படி ஆகும்?

  வெளக்கம் ப்ளீஸ்!

 159. Hariharan said...

  //பல பெரிய கோவில்களில் சிறிய ஆள் அரவமற்ற சன்னிதிகளில் ஆண்களே இருக்க முடியாத அளவுக்கு இருட்டும், வௌவாலும் என இருக்கும் சூழலில் பெண் அர்ச்சகர்களுக்கு பாதுகாப்பு என்பது மிக ஈஸியாக ஒதுக்கிவிடமுடியாது.//

  இறைவன் உள்ளான் என்று நம்பித்தான் சிலையும் அதற்கு பூஜையும்..அவனை நம்பியே அர்ச்சகர்..ஆணோ பெண்னோ தனக்கு பணிவிடை செய்யும் அர்ச்சகரை எல்லாம் வல்ல இறைவனால் காக்க முடியாதா//

  கல்வெட்டு,

  இறைவன் இருப்பதால் தானே கோவிலையே கொள்ளையடிக்கும் அரசுகள் அரை நூற்றாண்டு ஆண்டும் கோவிலில் அர்ச்சனை செய்வது பற்றிப் பேச முடிகிறது.

  இறைவன் காப்பான் என்பதெல்லாம் சரி.

  போக்கிரித்தனமான பொறுக்கி பக்தர்களால் அர்ச்சகப்பணியில் இருக்கும் பெண்மணிக்க்குத் தன்
  உடலுக்கு ஊறு நேர்ந்தால் அது தனது கர்மபலன் என்று எடுத்துக்கொள்ளும் பக்குவம் எல்லோருக்கும் நடைமுறை வாழ்வில் இருந்துவிடுமா?

  ஆசை எனும் மெட்டீரியல் வேர்ல்டுக்கான சமூகதளத்தில், அங்கு தேவைப்ப்டும் பாதுகாப்புத் தேவைகளை வெற்று ஸ்ப்ரிச்சுவல் உணர்வுகளால் மட்டுமே "செல்ஃப்-ரியலைசேஷன்" இல்லாத நபர் எதிர்கொள்ள வேண்டும் என்கின்றீர்கள்.

  ஆசை-> செல்ஃப் ரியலைசேஷன் என்பதற்கு இடைப்பட்டதான முழுமையான கடமையாற்றுதல் என்பதில் நான் சொல்லும் பாதுகாப்பு வருகிறது.

 160. திமுக தொண்டன் said...

  //பெண்களைக் குறைசொல்லி நான் வரவில்லை இங்கே. தமிழகத்தின் முதல்வனே பொறம்போக்குத்தனமாகப் பெண்கள் குறித்தும், பெண்கடவுளர்கள் குறித்தும் மட்டமாகப் பேசி பெண்ணுரிமையை நிலைநாட்டி வரும் சூழலில் கோவில் வளாகங்கள் ஈவ் டீஸிங் செண்டர்களாகும் வாய்ப்பே அதிகம்.//

  ஹரிஹரன் அவர்களின் இந்த பொறம்போக்குத் தனமான பின்னூட்டம் முதல்வர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் செய்யப்பட்டிருக்கிறது.

  ஹரிஹரன் அவர்கள் மீது அவதூறு வழக்கு தொடுக்க இந்த பதிவு அவசியம்.

 161. Hariharan said...

  //வழிபாட்டுத் தலங்கள் பொறுக்கிகளை ஈர்க்கும் கூடாரமாகி விடக்கூடாது என்பதுதான் நான் சொல்வது

  என்னதான் சொல்லவாரீங்கன்னே புரியலேங்களே அண்ணா, பெண்கள் அர்ச்சகர் ஆனார் வழிபாட்டு தளங்கள் பொறுக்கிகளின் கூடாரமாக எப்படி ஆகும்?//

  பெண்கள் கல்லூரி வாசலில் எந்த சம்பந்தமும் இல்லாமல் ஆஜாராகும் பொறுக்கிகள், (எத்திராஜ் மாணவி சரிகா ஷ சாவதற்கு காரணமான பொறுக்கிகள்),

  ரோட்சைட் ரோமிய்க்கள் இப்படியாக ஈர்க்கப்படும் இடமாகக் கோவில் ஆகும் சூழலை முதலில் தவிர்க்க ஆவன செய்யுங்கள்.

  கோவில் பஸ் ஸ்டாப் மாதிரி ஆகவேண்டாம் என்கிறேன். பெண்களைக் குற்றம் சொல்லவில்லை

 162. அரசி said...

  //என்னதான் சொல்லவாரீங்கன்னே புரியலேங்களே அண்ணா, பெண்கள் அர்ச்சகர் ஆனார் வழிபாட்டு தளங்கள் பொறுக்கிகளின் கூடாரமாக எப்படி ஆகும்?//

  ஏற்கனவே அங்கே இருக்கும் பொறுக்கிகள் உள்ளேயே கூடாரம் அடித்து விடுவார்களாம். அதை தான் ஹரிஹரன் சொல்ல வருகிறார்.

 163. Hariharan said...

  //ஹரிஹரன் அவர்களின் இந்த பொறம்போக்குத் தனமான பின்னூட்டம் முதல்வர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் செய்யப்பட்டிருக்கிறது.

  ஹரிஹரன் அவர்கள் மீது அவதூறு வழக்கு தொடுக்க இந்த பதிவு அவசியம்.//

  அய்யயோ ஒரே பயமா இருக்குங்க... ஏற்கனவே குளிர் 10 டிகிரி... இந்த மிரட்டலில் நடுக்கம் இன்னும் கூடிப்போச்சுங்கோ தொண்டரே...

  தேவுடா நன்னு காப்பாடு!

 164. யெஸ்.பாலபாரதி said...

  //ரோட்சைட் ரோமிய்க்கள் இப்படியாக ஈர்க்கப்படும் இடமாகக் கோவில் ஆகும் சூழலை முதலில் தவிர்க்க ஆவன செய்யுங்கள்.

  கோவில் பஸ் ஸ்டாப் மாதிரி ஆகவேண்டாம் என்கிறேன். பெண்களைக் குற்றம் சொல்லவில்லை//

  நல்லதுங்க அண்ணா.. தங்களின் தெளிவான பதிலான் இன்னொரு விஷயமும் தெளிவானது.

  மொத்தத்தில் பெண்களால் தான் பிரச்சனையே... வீதியோ, கோவிலோ.. எங்கே அவர்கள் இருந்தாலும் பிரச்சனையே!

  பேசாம இருக்கும் பெண்கள் அனைவரையும் கொண்ணு போட்டுடலாம்.

  தொல்லை ஒழிஞ்சது. மன்னிக்கனும் பொன்ஸ்.. வீட்டுக்கு அனுப்புற ஒங்க ரோசனை சரியில்லை. இதனை பரிசிலிக்க முனையுங்கள்!

 165. Hariharan said...

  பொன்ஸ்,

  கமண்டு கவுண்ட் பண்ணி அடியேன் தனித்து நூறு அடிச்சேனான்னு ஒரு புள்ளிவிபரம் சொல்லுங்க.

  உதவியாய் இருக்கும் ஆட்டையை நான் முடிச்சுக்க.

 166. பொன்ஸ் said...

  பாலா,
  அமைதி அமைதி.. நீங்க வேற..அந்நியன் மாதிரி கிளம்பிடப் போறீங்க..

  தூக்கிதூக்கி மற்றும் செல்வி,
  உங்களின் பின்னூட்டங்கள் சொல்லப்பட்ட நடை எனக்கு ஒப்புமை இல்லாததால், பிரசுரிக்க இயலவில்லை. மன்னிக்கவும்.

 167. Hariharan said...

  தங்களின் தெளிவான பதிலான் இன்னொரு விஷயமும் தெளிவானது.

  மொத்தத்தில் பெண்களால் தான் பிரச்சனையே... வீதியோ, கோவிலோ.. எங்கே அவர்கள் இருந்தாலும் பிரச்சனையே!

  பேசாம இருக்கும் பெண்கள் அனைவரையும் கொண்ணு போட்டுடலாம்.//

  நல்ல தெளிவுங்க பாலா

 168. ராடன் டிவி said...
  This comment has been removed by a blog administrator.
 169. பொன்ஸ் said...

  ஹரிஹரன்,
  எண்ணிச் சொல்கிறேன்..

  கேள்விகள் கேட்பவன்,
  உங்களின் கேள்வி கண்ணியமாக இருந்தாலும் பதிவுக்குத் தொடர்பில்லாமல் போகிறது. நம்முடன் பேசிக் கொண்டிருப்பவர் ஹரிஹரன் மட்டுமே.

  என்னதான் வாதம் என்று வந்துவிட்டால் பேசுபவரின் தந்தையைக் காட்டுக்கனுப்பு என்று வெறுப்பை உமிழும் பின்னூட்டங்களை அனுமதிப்பது அவருடைய ஸ்டைலாக இருந்தாலும், அவரது வீட்டுப் பெண்களைப் பற்றிய கேள்விகளைக் கூட என்னால் அனுமதிக்க முடியாது. மன்னிக்கவும்.

  ராடன் டீவி,
  தமிழக முதல்வரைப் பற்றியும் முதல்வர் வீட்டுப் பெண்களைப் பற்றியதுமான அவரது கருத்துக்களை நிறுத்திக் கொள்ளுமாறு ஏற்கனவே கேட்டாயிற்று. மனதில் இருப்பதைக் கொட்டுகிறார்.
  அவரைப் போலவே உங்களின் செல்வியும், தூக்குதூக்கியும் தத்தம் பெயரோடு, அதாவது பதிவில் எழுதும் நம்பிக்கையான பெயரோடு, வந்திருந்தால், எனக்கென்ன வந்துவிட்டது அதைப் பிரசுரிக்க?

 170. ராடான் டிவி said...

  என் கமெண்டை ரிலீஸ் செய்ததற்கு நன்றி

 171. பொன்ஸ் said...

  ராடன்,
  உங்கள் கமெண்டை இப்போது தான் முழுதாக படித்தேன். அதை அழிக்கத் தான் முயன்று கொண்டிருக்கிறேன்.

  ஹரி அவர்கள் பூச முயன்ற சாதிச் சாயத்தை நீங்கள் வெற்றிகரமாகச் செய்துவிட்டதாகத் தெரிகிறது. உங்கள் நன்றிக்கு உரியவளாக இருக்க முடியாமைக்கு நான் என் வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் :(

 172. பங்காளி... said...

  இன்னும் அசரலையா?....எப்படியோ போங்க...

  தாயே!...இப்பவே சொல்லீட்டேன் 200 வது பின்னூட்டம் நம்மதுதான்....

  மக்களே நான் துண்டு போட்டு ரிசர்வ் பண்ணீட்டேன்...250...300 க்கு ட்ரை பண்ணுங்க....

 173. பொன்ஸ் said...

  ஹரிஹரன்,
  உங்களுக்காக :

  50 - திமுக தொண்டன்
  100 - நட்சத்திரம் சிந்தாநதி :)
  கடைசியாக 150ஆவது பின்னூட்டத்தை நீங்கள் போட்டுவிட்டீர்கள் :)))

  ஏற்கனவே நண்பர் ஒருவர் எண்ணி 50% பின்னூட்டங்கள் உங்களுடையது தான் என்றார் :)

  இவற்றிற்கும், என் பார்வைக்கு மட்டுமான உங்களின் பின்னூட்டத்திற்கும், நான் முந்தய பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்த உங்கள் பதிவின் பின்னூட்டத்தை நீக்கியதற்கும், எல்லாவற்றிற்குமாக என் பெரிய பெரிய நன்றி :)))


  பங்காளி, 200க்குப் போகாதுன்னு தான் நெனக்கிறேன் :))

 174. வரவனையான் said...

  பெண்ணைக்கடவுளாக ஏற்றுக்கொள்பவர்கள் அர்ச்சகராக்க மறுப்பது வேடிக்கை. அரசு உடனே இதை ஒரு சட்டமாகவே கொண்டுவரவேண்டும்.

 175. நாடோடி said...

  ஹலோ நான் போட்ட பின்னூட்டம் வந்ததா இல்லையா?.

  இல்ல பிளாக்கர் தின்னுட்டா..
  யக்கா கஷ்ட பட்டு நூறு வார்த்தைக்கு (என் எல்லா பதிவு கூட அவ்வளவு தேறாது) சேர்த்து பின்னூட்டினேன்.
  நல்லா பாருக்கா...

 176. Hariharan # 26491540 said...

  173/2 = 87 தானா. 13 இன்னும் அடிச்சா நூறாகிடும்.

  இன்னும் கடினமா உழைக்கணும் போலிருக்கே :-(

 177. பழமொழி பாண்டியன் said...

  //இன்னும் கடினமா உழைக்கணும் போலிருக்கே :-(//

  எட்டி காய்த்தால் என்ன?
  ஈயாதவன் வாழ்ந்தால் என்ன?

 178. Hariharan # 26491540 said...

  //இன்னும் கடினமா உழைக்கணும் போலிருக்கே :-(//

  எட்டி காய்த்தால் என்ன?
  ஈயாதவன் வாழ்ந்தால் என்ன? //

  பழமொழி பாண்டி,

  கி.கி (கிழிஞ்சுது கிருஷ்ணகிரி) :-))

 179. திரு said...

  ஹரிஹரன்,

  பெண்ணின் உரிமையை சில, பல சொத்தை வாதங்களால் தடுப்பது தெரிகிறது. உங்கள் நோக்கம் பெண்களின் உரிமையை தடுப்பதாக இல்லாமல் இருக்கலாம். வேத, ஆகமங்களை தாங்கி பிடிக்கவும், 'பகுத்தறிவு' கருத்துக்களை எதிர்க்கவும் ஆயுதமாக இந்த வாதங்கள் இருக்கக்கூடும். இந்த களத்தில் பலியாக்கப்படுவது சமூகத்தின் சரிபாதியான பெண்களின் உரிமைகள்!

  -000~

  பெண்கள் அர்ச்சகராக இருந்தால் கேலி செய்ய/தொடர்புகளை ஏற்படுத்த கோவிலுக்கு வருவார்கள் அதனால் பெண்கள் அர்ச்சகர் ஆவதால் பிரச்சனை என்பது சிரிப்பை தான் தருகிறது. பெண்கள் வழிபாடு நடத்தும் இந்து மதமல்லாத நாட்டார் வழக்கியல் தெய்வ வழிபாட்டில் யாரும் பெண்ணிடம் கேலிபேசி நான் கேட்டதில்லை. கேலியும், கிண்டலும் சமூகம் எங்கும் இருக்கிறது. இதற்கு கோவிலுக்கு போக அவசியமில்லை. இன்று கோவில்ஆண் அர்ச்சகர்களால் 'புனிதமாக' ஒன்றுமில்லை. கேரளாவில் கோவில் ஒன்றில் அர்ச்சகனாக இருந்த நண்பன் சொன்ன 'அனுபவங்களில்' அதை புரிந்துகொண்டேன்.

  -000~

  பெண்களுக்கு இந்த உரிமை தான் இப்போதைய அவசர தேவையா? இதுவும் இப்போது தேவையான உரிமைகளில் ஒன்று. இது மட்டும் தான் என யாரும் வாதிடவில்லை. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பெண்களுக்கு தடை சட்டரீதியாக இல்லை; குடும்ப, சமூக அளவில் தான் இருக்கிறது. வழிபாட்டு உரிமைகளில் (வழிபாட்டை நடத்த அர்ச்சகர் ஆகும் உரிமை முதல் கடவுளின் கருவறையி நுழைவது வரையில்) பெண்ணின் உரிமை மதச்சட்டங்களில் முடங்கி கிடக்கிறது. நாட்டின் சட்டம் மதச்சட்டங்களின் முன் கைகட்டி நிற்கிறது. இங்கு பெண்ணின் வழிபாட்டு உரிமையை தடுக்கும் எல்லா மதத்தையும் குறிப்பிடுகிறேன்.அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைக்கு எதிரான இந்த அக்கிரமம் 1947க்கு பின்னரும் தொடர்வது வேதனை.

  -000~

  மனிதனாக பிறந்த யாரும் யாருடைய உரிமை மீறப்பட்டாலும் அதற்காக குரல் கொடுக்கலாம். இதற்கு எந்த அடையாளமும் அவசியமில்லை; சகமனிதன் என்பதை தவிர. உரிமைகளை பேச நிறம், மொழி, மதம், நம்பிக்கை, கொள்கைகள் என அடையாளங்கள் அவசியமில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக நிற்கும் அடையாளம் ஒன்றைத் தவிர; வேறு எந்த அடையாளங்களும் பிடித்ததும் இல்லை. உங்கள் மதநம்பிக்கையை நான் தடுக்கவும் இல்லை; என் மீது உங்கள் நம்பிக்கையை திணிக்கவும் இடம் தரமாட்டேன்.

  -000~

  பெண்ணுக்கு அர்ச்சகர், வழிபடும் உரிமைபற்றி விரிவாக தனிப்பதிவு எழுதுவேன்.

  -000~

  பொன்ஸ், மன்னிக்கவும் தலைப்பிற்கு தொடர்பில்லாத பதில்! தேவைப்பட்டதால்.

  'இந்து என சாக்கடையில் நிறுத்தாதே' என்ற எனது கவிதைக்கும் இந்த விவாதத்திற்கும் சம்பந்தமில்லை.அது SK அனைவரையும் இந்து என பொதுமை படுத்தியதற்கான கேள்விகள் அடங்கிய கவிதை. பதில் இருப்பின் அந்த பதிவில் வாருங்கள்! ஆரோக்கியமாக விவாதிப்போம். உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன் ஆனால் உரிமைகளை தடுக்கும் கருத்துக்களையல்ல.

 180. Kuppusamy Chellamuthu said...

  I am 180!!

 181. Hariharan # 26491540 said...

  //பெண்கள் வழிபாடு நடத்தும் இந்து மதமல்லாத நாட்டார் வழக்கியல் தெய்வ வழிபாட்டில் யாரும் பெண்ணிடம் கேலிபேசி நான் கேட்டதில்லை. //

  எப்படிக் கேட்பீர்கள் கேலிபேசுவதை/தொடர்புகளை இங்கே.

  அய்யனாருக்கு கோழி/ஆடு அறுக்கும் அரிவாள்கொண்டு "அறுத்து"விடுவார்கள் என்கிற பயம்தான்.

  ஆகம விதிப்படியான இந்துக் கோவில் வளாகங்களில் "அறுக்கும்" அருவாளும், குணாதிசயமும் இல்லையே

 182. திரு said...

  //Hariharan # 26491540 said...
  //பெண்கள் வழிபாடு நடத்தும் இந்து மதமல்லாத நாட்டார் வழக்கியல் தெய்வ வழிபாட்டில் யாரும் பெண்ணிடம் கேலிபேசி நான் கேட்டதில்லை. //

  எப்படிக் கேட்பீர்கள் கேலிபேசுவதை/தொடர்புகளை இங்கே.

  அய்யனாருக்கு கோழி/ஆடு அறுக்கும் அரிவாள்கொண்டு "அறுத்து"விடுவார்கள் என்கிற பயம்தான்.

  ஆகம விதிப்படியான இந்துக் கோவில் வளாகங்களில் "அறுக்கும்" அருவாளும், குணாதிசயமும் இல்லையே//

  ஆகா! மீண்டும் சொத்தையான வாதம்! தெருவில் பெண்களை கேலி பேசுபவர்களை 'அறுக்க'மாட்டார்களா? அப்போது ஏன் தெருவில், பேருந்து நிலையத்தில் என கேலி கிண்டல் எல்லாம் நடக்கிறது...? பெண்களை காப்பாற்ற ஆண்கள் வேண்டும், அரிவாள் வேண்டும் என்கிறீர்களோ? மாறுபடுகிறேன். சரியாக விளக்குங்கள் :)

 183. Hariharan # 26491540 said...

  //பெண்ணின் உரிமையை சில, பல சொத்தை வாதங்களால் தடுப்பது தெரிகிறது. உங்கள் நோக்கம் பெண்களின் உரிமையை தடுப்பதாக இல்லாமல் இருக்கலாம். வேத, ஆகமங்களை தாங்கி பிடிக்கவும், 'பகுத்தறிவு' கருத்துக்களை எதிர்க்கவும் ஆயுதமாக இந்த வாதங்கள் இருக்கக்கூடும். இந்த களத்தில் பலியாக்கப்படுவது சமூகத்தின் சரிபாதியான பெண்களின் உரிமைகள்!//

  பகுத்தறிவே சொத்தைதான். அது சமூகத்தில் ஏற்பதுத்தியுள்ள சொத்தையை எதிர் நோக்கும் வாதம் முழுமையாக இருக்காதுதான்.


  //அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைக்கு எதிரான இந்த அக்கிரமம் 1947க்கு பின்னரும் தொடர்வது வேதனை.//

  பகுத்தறிவுச் சொத்தைகளிடம் மாட்டிய பெண்களின் அடிப்படை உரிமைகள் அக்கிரமமான அக்கிரமம்.

  இப்படியான சொத்தைப் பகுத்தறிவுகளிடம் ஆட்சி அதிகாரம் என்பது பெரும் வேதனையானது. பின்னேறிய நிலைக்கு முழுமுதல் காரணம் சொத்தைப்பகுத்தறிவுகள்.

  உலகப்போர் அழிவுகளினின்று ஜப்பான் ஜெர்மனி மீண்டு 40 ஆண்டுகளில் முன்னேறி கூட்டாக மேலேறியமாதிரி இல்லாமல் ஜாதியால், பிரிவுகளால் அதிகாரத்தில் இருக்கும் பகுத்தறிவுகளின் செயல்பாடுகள், சிந்தனை முக்கியமான காரணம். முதல்வராக இருப்போர் பெண்மீது வைத்திருக்கும் மதிப்பு ஊர் அறிந்ததுதானே!

 184. செந்தழல் ரவி said...

  ஏய் இந்தாளு எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாம்யா...

  இவரு ரொம்பபப நல்லவர்யா !!!!!!

 185. neo said...

  பொன்ஸ் உங்களுக்கு என் மனம் நிறந்த பாராட்டுக்கள். நீங்கள் எழுதியதால்தான் இந்த அருவெறுப்பான ஆபாசக் காலட்சேபக் கூத்துக்களுக்கு சரியான குட்டு விழுந்திருக்கிறது! :)

  இதுகள் எழுதுவது போல பெண்களை இதைவிடவும் படுகேவலமாக இழிவுபடுத்திவிட முடியாது யாரும்.

  "பொம்மனாட்டி வேலைக்குப் போனா கெட்டுடுவா" என்று திருவாய் மலர்ந்து அருளி - ஒரு 'காஞ்சி' போன பாப்பாரப் பொறம்போக்கு மடவெட்டி சாமியார் சொன்னபோதும் அந்த மடத்துக்குப் போய்க்கொண்டுதான் இருந்திருப்பார்கள் இந்த 'நல்லவர்கள்!'

  இதே 'நல்லவர்கள்' குஷ்பு/கற்பு விவகாரத்தைப் பயன்படுத்தி - பெண்ணியத்துக்காகவல்ல - தமிழ் அடையாளத்தின் மீது 'விசம் தோய்ந்த அம்பு' விட கிடைத்த வாய்ப்பாகக் கருதி - 'கருத்துச் சுதந்திர' முக(ம்)மூடி-மரத்துக்குப் பின்னாலிருந்து அம்பு விட்டார்கள்!!

  இதே 'நல்லவர்கள்' இப்போது பெண்களைப் படுகேவலமாகச் சித்தரித்து - போகப்பொருளாக மட்டுமே பார்த்து இழிவு செய்யவும் துணிந்து விட்டார்கள்.

  இவர்களே 'அன்னை சாரதா', 'அன்னை நிவேதா', 'அரவிந்த அன்னை' பற்றியெல்லாம் விளக்கி புத்தகம் போடவும் செய்வார்கள்!!

  முதலிலே 'தீட்டு'ப் பாட்டு பாடினார்கள் - இவர்களே ஒரு தீட்டினால்தான் இந்த உலகிற்கு வந்தவர்கள் என்று ெரிந்தும் கூட; இப்போது "Moral puritanist pundits" போல நீட்டி முழக்குகிறார்கள். (அப்புறம் வக்கணையாக
  "Moral Policing"-ஐ எதிர்த்து நீட்டி முழக்க வந்துதித்தவர்கள் போல வேசம் காட்டுவார்கள்!)

  எனக்கு இவர்க்ள் உண்மையிலேயே 'வர்ண சோமபான மயக்கத்தில்' இருந்து வெளிவர விரும்புபவர் அல்லர் என்பது தெரிந்துதான் இருக்கிறது.

  என் ஆதங்கம் எல்லாம் வலையுலகில் பெண்கள் - இவ்விஷயத்தில் தேவையான அளவு வெளிப்படையாக
  கண்டிக்கவில்லை என்று தோன்றுகிறது.

  அப்புறம் "^&%^&%^%&* சப்பாத்தி" விளையாட்டு விளையாட ஆரம்பித்தால் குறை சொல்ல முடியாது போய்விடும்!.

 186. பங்காளி... said...

  இதெல்லாம் கொஞ்சங்கூட நல்லா இல்ல சொல்லீட்டேன்...நேத்து 2 மணி நேரத்துல 100 பின்னூட்டம்....

  இன்னிக்கு என்ன ஆச்சு உங்களுக்கெல்லாம்....?

  ஹேய் நான் வேற 200 க்கு துண்டு போட்டு வச்சிருக்கேன்....

  வாங்க ராசா...எல்லாருமா கும்மியடிச்சி 200 ல கொண்டு விட்ருவோம்....

 187. பொன்ஸ் said...

  நியோ,
  உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி,

  குஷ்பு/கற்பு, காஞ்சி மடாதிபதி சொன்னது தொடர்பான விவாதங்களைப் பற்றி எனக்கு நேரடியாக தெரிந்தது ஒன்றுமில்லை. அந்த விவாதங்களின் போது நான் இங்கே இல்லவும் இல்லை.

  // என் ஆதங்கம் எல்லாம் வலையுலகில் பெண்கள் - இவ்விஷயத்தில் தேவையான அளவு வெளிப்படையாக
  கண்டிக்கவில்லை என்று தோன்றுகிறது. //
  அப்படிக் கண்டித்துப் பயனில்லை என்று விட்டுவிட்டார்கள் என்பது என் கருத்து. தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப வேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணியிருக்கக் கூடும்.. அத்துடன், படித்தவுடன் அவதூறு பூசப்படுகிறதா இல்லையா என்று புரிந்துவிட முடியாதபடி குழப்பமான நடையில் எழுதப்பட்டிருப்பதும் ஒரு காரணம். கொஞ்சம் தொடர்ந்து படித்ததனாலேயே என்னால் ஓரளவிற்கு புரிந்து கொள்ள முடிந்தது.

  அப்படியும், பெண்கள் இருந்தால் புனிதம் கெட்டுவிடும் என்று பதிவிட்டுவிட்டு, பின்னூட்டத்தில், "பெண்களைக் குறை சொல்ல விரும்பவில்லை" என்று ஹரிஹரன் சொல்லும் போது, மீண்டும் அவரது எழுத்துக்களின் புரிதல் பற்றி எனக்கே குழப்பம் வந்தாச்சு :)

 188. Hariharan # 26491540 said...

  //"பொம்மனாட்டி வேலைக்குப் போனா கெட்டுடுவா" என்று திருவாய் மலர்ந்து அருளி - ஒரு 'காஞ்சி' போன பாப்பாரப் பொறம்போக்கு மடவெட்டி சாமியார் சொன்னபோதும் அந்த மடத்துக்குப் போய்க்கொண்டுதான் இருந்திருப்பார்கள் இந்த 'நல்லவர்கள்!'//

  50-75ஆண்டுகளுக்கு முன்பான கருத்து அன்றைக்கான சூழலுடன் மட்டுமே பொருத்திப் பார்க்கவேண்டும் என்கிற பொது அறிவு இருந்தால் காஞ்சிப்பெரியவர் சொன்னது என்னன்னு தெரியும்.

  அவர் சொன்னதை முதலில் கட்டுடைத்தவர்கள் காஞ்சிமடத்துக்குச் சென்ற வகுப்பினர்தான்.

  கால, தேச வர்தமானங்களால் சொல்லப்பட்ட கருத்து காலதேச வர்த்தமானங்களில் காட்சிகள் மாறும்போது கருத்து காலாவதியாகிறது என்கிற பொது அறிவு இருப்பதால் நல்லவர்கள் அதே மடத்துக்குச் செல்கிறார்கள், வணங்குகிறார்கள்.

  //ஒரு 'காஞ்சி' போன பாப்பாரப் பொறம்போக்கு மடவெட்டி சாமியார் //

  நியோ எவ்வளவுக்கு "ந்ந்நல்ல்லவர்ன்னு" தெரிகிறது :-))

 189. Hariharan # 26491540 said...

  //"பெண்களைக் குறை சொல்ல விரும்பவில்லை" என்று ஹரிஹரன் சொல்லும் போது, மீண்டும் அவரது எழுத்துக்களின் புரிதல் பற்றி எனக்கே குழப்பம் வந்தாச்சு //

  பொன்ஸ்,

  ஒரு க்ராஷ் தமிழ் கோர்ஸ் உங்களுக்கு என் எழுத்தின் போக்கு எளிதில் விளங்க வேண்டி நடத்துகிறேன்.


  வரப்புயர நீர் உயரும்
  நீருயர நெல் உயரும்
  நெல் உயரக் கோல் உயரும்
  கோல் உயரக் கோன் உயர்வான்
  கோன் உயரக் குடி உயரும்

  கோன் உயரக் குடி உயரும்-நான் 100% நம்புவது இது.

  கோன்= ஆட்சி செய்யும் அரசன்
  குடி = குடிமக்கள்

  தற்போது தெளிவு கிடைக்கிறதா? எதானும் ன் எழுத்துநடை பற்றிப் புரிகிறதா இப்போது? :-))

 190. neo said...

  >> அத்துடன், படித்தவுடன் அவதூறு பூசப்படுகிறதா இல்லையா என்று புரிந்துவிட முடியாதபடி குழப்பமான நடையில் எழுதப்பட்டிருப்பதும் ஒரு காரணம். கொஞ்சம் தொடர்ந்து படித்ததனாலேயே என்னால் ஓரளவிற்கு புரிந்து கொள்ள முடிந்தது.

  அப்படியும், பெண்கள் இருந்தால் புனிதம் கெட்டுவிடும் என்று பதிவிட்டுவிட்டு, பின்னூட்டத்தில், "பெண்களைக் குறை சொல்ல விரும்பவில்லை" என்று ஹரிஹரன் சொல்லும் போது, மீண்டும் அவரது எழுத்துக்களின் புரிதல் பற்றி எனக்கே குழப்பம் வந்தாச்சு :) >.

  Standard Operating Procedure! :)

 191. திரு said...

  ஹரிஹரன்,

  உங்களுடைய பதில் திசைதிருப்பி அந்த இடவெளியில் ஓடிஒளிவதாக தான் இருக்கிறது. பெண்கள் ஏன் அர்ச்சகர் ஆக உரிமையில்லை என்பதற்கு இன்னும் சரியான காரணங்கள் சொல்லவில்லை! உங்களிடம் அதற்கான நேர்மையான பதில் இல்லை என்பது தெரியும்.

  -000-

  முதல்வர் பற்றியும், சாதீயம் பற்றியும் பேசி வசைபாடுதல்களுடன் திசைதிருப்பவேண்டாம். அதற்கு வேறு பதிவுகளை வைத்துக்கொள்ளுங்களேன்! இந்த பதிவின் கேள்வியை சிதறாமல் பதில் கொடுங்கள்!

  -000-

  பதிவின் நோக்கத்தை திசைதிருப்புமானால் ஹரிஹரனுக்கு இந்த பதிவில் இதுவே கடைசி பின்னூட்டம்!

 192. சின்னக்குட்டி said...

  கோயில் கூடாதன்பதில்ல அது பெண்களின் கூடாரமாகி விட கூடாதென்பதற்க்காக என்று வந்து யாரும் வசனம் பேச மாட்டாங்களா..

  இதுக்காக யாரும் என்னுடன் சண்டைக்கு வந்துடதாயுங்க.. பொன்ஸ் டபிள் சென்சரி அடிக்கோணும் என்ற நப்பாசையில் ஒரு சின்னதா அணில் மாதிரி ஒரு பின்னோட்டம் போட்டன்

 193. கோவி.கண்ணன் [GK] said...

  அடப்பாவமே என்ன நடக்குகுது இங்கே !!!

  பொன்னியம்மன் கோவிலில் பொன்ஸ்தான் அடுத்த அர்சகர் !!!

  சாரி ... அர்சகரினி :)))

 194. குமரன் (Kumaran) said...

  பொன்ஸ்.

  இந்தப் பதிவில் மூன்றாவதாக இணைக்கப் பட்டிருக்கும் சுட்டியில் உள்ள பதிவின் சாதிச் சார்பில் எனக்கு ஒப்புதல் இல்லை. உங்களின் இந்தப் பதிவு உள்குத்துகள் நிறைந்ததாக எனக்குத் தோன்றுவதற்கு அந்தச் சுட்டியின் இருக்கும் பதிவின் சாதிச் சார்பு வாய்ப்பளிக்கிறது.

  ஆனாலும் உங்கள் பதிவின் முக்கிய நோக்கம் சாதிச் சார்புடன் உள்குத்துகளை இடுவதில்லை என்ற நம்பிக்கையுடன் இன்னொரு கருத்தைச் சொல்ல விழைகிறேன்.

  இரண்டாவது சுட்டி சொல்லும் ஹரிஹரனின் பதிவைப் படிக்க விருப்பம் இல்லை. இந்தப் பதிவில் நீங்கள் அவர் சொன்னதாகச் சொல்லியிருப்பது அவர் பதிவில் இருக்கிறதென்றால் அதனைப் போல் வடிகட்டிய மடத்தனத்தை நான் பார்த்ததில்லை. இது தனி நபர் தாக்குதல் இல்லை. கருத்தின் மீதான என் கருத்தே.

 195. வெற்றி said...

  பொன்ஸ்,
  இன்னும் உங்களின் பதிவைப் படிக்கவில்லை. இவ்வளவு பின்னூட்டங்களையும் பார்க்கும் போது ஏதோ sensitive ஆன issue போல இருக்கு. உங்களின் பதிவையும் இவ்வளவு பின்னூட்டங்களையும் ஆற அமர இருந்து படித்துவிட்டு மீண்டும் வருகிறேன்.

  /* பங்காளி, 200க்குப் போகாதுன்னு தான் நெனக்கிறேன் :)) */

  ஏன் போகாது?! நண்பர் இலவசக்கொத்தனாரின் பாணியைப்[style] பின்பற்றினால் 200 என்ன 2000 பின்னூட்டம் கூட வரும்:)) இதெல்லாம் இலவசக்கொத்தரிடமிருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அவரின் பாணி இதுதான்:

  வரும் ஒவ்வொரு பின்னூட்டத்தையும் அவதானமாக வாசித்துவிட்டு, ஒவ்வொருவருக்கும் தனிதனியாகப் பதிலளிக்க வேண்டும். பதிலளிக்கும் போது அப்பதிலோடு, சும்மா ஒரு கேள்வியையும் அப் பின்னூட்டமிட்டவரிடம் கேட்டு வைக்க வேண்டும். அப்பதான் அப் பின்னூட்டமிட்டவர் மீண்டும் திரும்பி வந்து பின்னூட்டமிடுவார். :))

  இலவசத்தாரே உங்களின் இரகசியங்களை வெளியில் சொன்னமைக்கு மன்னித்தருள்க:)))

  இன்னும் புரியாவிட்டால், இலவசக்கொத்தனார் எழுதிய அதிக பின்னூட்டம் பெறுவது எப்படி எனும் பதிவைப் படியுங்கள்.

 196. neo said...

  >> 50-75ஆண்டுகளுக்கு முன்பான கருத்து அன்றைக்கான சூழலுடன் மட்டுமே பொருத்திப் பார்க்கவேண்டும் என்கிற பொது அறிவு இருந்தால் காஞ்சிப்பெரியவர் சொன்னது என்னன்னு தெரியும். >>

  uh oh!

  Too smart by half! attempted Digression gone futile!!

  That was one of the 'wise spits' of the current one - not the dead one!.

  You know that we know that you know that isnt it?!!! :)

  Try better games! or rather you should be calling your Ring leader (in LA?!) for obtaining 'better' tips regarding the tactics to be used in the digression and blunting game!!

  ! ;))

 197. பொன்ஸ் said...

  // இந்தப் பதிவில் மூன்றாவதாக இணைக்கப் பட்டிருக்கும் சுட்டியில் உள்ள பதிவின் சாதிச் சார்பில் எனக்கு ஒப்புதல் இல்லை. //
  குமரன், ஏற்கனவே பின்னூட்டங்களில் சொல்லிவிட்டபடி, மூன்றாவது சுட்டியின் சாதிச் சார்பிலும் சரி, இரண்டாவது சுட்டியின் இனவெறுப்பு, கட்சி வெறுப்பு, எதிலும் எனக்கும் ஒப்புதல் இல்லை.


  // உங்களின் இந்தப் பதிவு உள்குத்துகள் நிறைந்ததாக எனக்குத் தோன்றுவதற்கு அந்தச் சுட்டியின் இருக்கும் பதிவின் சாதிச் சார்பு வாய்ப்பளிக்கிறது. //
  உங்களால் முடியுமானால், சாதிச் சார்பில்லாத, இதே போல் பணியிடத்தில், ஒரு ஆண் தொழிலாளியை வேலை செய்ய விடாமல் தொல்லை செய்யும் பெண்களைப் பற்றிய செய்திச் சுட்டிகள் இருந்தால், தந்துதவ வேண்டுகிறேன். அதையும் இணைத்தால், இது போன்ற சந்தேகங்களுக்கு இடமில்லாமல் போய்விடும்.

  // ஆனாலும் உங்கள் பதிவின் முக்கிய நோக்கம் சாதிச் சார்புடன் உள்குத்துகளை இடுவதில்லை என்ற நம்பிக்கையுடன் இன்னொரு கருத்தைச் சொல்ல விழைகிறேன். //
  உங்கள் நம்பிக்கைக்கு என் நன்றிகள் பல :)

  // இரண்டாவது சுட்டி சொல்லும் ஹரிஹரனின் பதிவைப் படிக்க விருப்பம் இல்லை. இந்தப் பதிவில் நீங்கள் அவர் சொன்னதாகச் சொல்லியிருப்பது அவர் பதிவில் இருக்கிறதென்றால் அதனைப் போல் வடிகட்டிய மடத்தனத்தை நான் பார்த்ததில்லை. இது தனி நபர் தாக்குதல் இல்லை. கருத்தின் மீதான என் கருத்தே. //
  அதே தான் நானும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். உங்கள் கருத்துக்கும் நன்றி :)


  வெற்றி,
  ரகசியங்கள் இல்லாமலேயே இந்தப் பதிவு இருநூறு கண்டதற்கு ஹரிஹரனுக்கே நன்றிகள். தன்னந்தனியாளாக நின்று அவர் இதில் பாதிக்குப் பாதி பின்னூட்டங்கள் இட்டுத் தேத்தியிறா விட்டால், நானெல்லாம் இருநூறு காண்பது நடக்கக் கூடிய விஷயமா என்ன? :)))

 198. கும்மியடிப்போர் கழகம் said...

  //தன்னந்தனியாளாக நின்று அவர் இதில் பாதிக்குப் பாதி பின்னூட்டங்கள் இட்டுத் தேத்தியிறா விட்டால், நானெல்லாம் இருநூறு காண்பது நடக்கக் கூடிய விஷயமா என்ன?
  //

  ஏன்? எங்ககிட்ட சொன்னா ஆகாதா?

 199. விடாதுகருப்பு said...

  இப்பதிவை அதன் பின்னூட்டங்களுடன் படித்து முடிக்க நெடுநேரம் ஆகியது எனக்கு. இங்கு தாங்கள் கேட்ட கேள்வியின் தாக்கம் உட்டுது சேப்புவரை பாய்ந்து திராவிட அம்மணி என்றும் திம்மி என்றும் சொல்ல வைத்து விட்டது!

  திரு அவர்களும் கல்வெட்டு அவர்களும் நியோ அவர்களும் அருமையாக விளக்கி இருந்தனர்.

  பெண் உரிமையைப் பேண நினைத்த பெரியாரையே அவமதிக்கும் வெங்காயங்களுக்கு நல்ல சவுக்கடி இந்த பதிவு!

 200. யெஸ்.பாலபாரதி said...

  இன்னும் கடைய மூடலையா... அவருதான் நேத்தே எனக்கு சொல்லீட்டாரே! சரியான பதிலை!!