Monday, July 16, 2007

பாகச புதுவரவுகள்

பாகச புதுவரவுகள் சிலரின் அனுபவங்கள்.. அனானிகளாக..

1.
பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்கும் போது ஒரு தொலைபேசி அழைப்பு...:

அனானி: பொன்ஸ், உங்க தலைய இப்பத் தான் பார்த்திட்டு வரேன். என்னைக் கூட அவர் தலன்னு கூப்பிடறாரே!

நான்: அதனால தாங்க அவரை நாங்க தலன்னு சொல்றோம்.. எல்லாரையும் தலன்னு சொல்லுறார் இல்ல.. வேற ஏதும் பெரிசா செய்து தலைவராகிட்டார்ன்னு நினைச்சீங்களா என்ன?

அனானி: ஙே!

2.

வீட்டில் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்த நண்பர் ஒருவர் தல குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்து கொள்கிறார்..

நண்பர்: யாரு? யாரு!?

நண்பரின் நண்பர்: இஞ்ச பாரு.. ரீவியில் தெரியறவர், உங்க பாலாண்ணே மாதிரியில்ல?

நண்பர்: அட! ஆமாம்.. பாலாண்ணனே தான்.. எடு எடு, போன் போடு.. பேசுவோம்..

ந.ந.(போன் செய்து கொண்டே): கூகிளில் என் பேர் போட்டு தேடிலாம்னு சொல்லுறார்.. அது என்ன எண்டு கேட்போம்.

ந.: அது இருக்கட்டும், முதல்ல, பாகச எண்டால் என்னவெண்டு கேளு..

ந.ந. வுக்கு அதற்குள் லைன் கிடைத்துவிட்டது.. முதலில் பெயர் ஊர் கேட்கும் நிலைய ஆட்கள் போன் எடுத்து, இவரின் விவரங்களைக் கேட்டார்கள். தன் பெயர், ஊர் சொல்லிவிட்டு, அடுத்து, என்ன கேள்வி என்னும்போது, ந.ந., முதல் நண்பரிடம் விவரம் கேட்டார்...

: 'பா.க.ச எண்டால் என்ன?' எண்டு கேளு!

ந.ந.: பா.க.ச எண்டால் என்ன?

நிலைய அதிகாரி: பாகசவா? அப்படீன்னா?

ந.ந (முதல் நண்பரிடம்): பாகசவா? அப்படி எண்டால் என்ன?

: பாலபாரதியைக் கலாய்ப்போர் சங்கம்.

நிலைய அதிகாரி: அப்படி எல்லாம் இங்க கேட்கக் கூடாது சார்.. அப்புறம் பண்ணுங்க..

போனை வைத்துவிட்டார்..


3.
நிகழ்ச்சி முடிந்த பின்னர், ஒரு வயதான அம்மையார் பாலாவுக்கு போன் போட்டு: நல்லா முழிக்கிறீங்க..சார்...

யெஸ்.பா: என்னது?

அம்மையார்: எந்தெந்த கேள்விக்கு உங்களுக்குப் பதில் தெரியலைன்னு நல்லாவே புரியுது..

யெஸ்.பா: !@#!@#$


4.
திருநெல்வேலியில் மற்றொரு நிகழ்ச்சி:

அண்ணன் பாலபாரதியும், மற்றொரு நீண்ட நாள் உறுப்பினரான பாகசங்கத்தினரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

உறுப்பினர்: அண்ணே, சங்கத்தை நல்லா டெவலப் பண்ணனும்ணே.... தலைமைக் கழகத்துகிட்ட பேசிகிட்டிருக்கோம்..

யெஸ்.பா: அடப்பாவி!

அப்போது உறுப்பினரின் நண்பர் ஒருவர் வருகிறார். அவர் இந்த பேச்சு வார்த்தையைக் கேட்டு, 'அதென்ன சங்கம்?' என்கிறார்.

உறுப்பினர் சங்கக் கடமையை நினைத்து விளக்கம் கொடுத்ததும், புதியவர்:
'அண்ணே, நானும் இனிமே பா.மு.நா.பா.க.ச'

யெஸ்.பா: அடேய்.. என்னடா, இப்படித் திட்டுறே!

புதியவர்: இல்லண்ணே, நானும் பார்த்த முதல் நாளே பா.க.ச உறுப்பினராகிக்குறேன்னு சொன்னேண்ணே.. ஏதும் ஃபார்ம் இருந்தா கொடுங்கண்ணே.


டிஸ்கி:
1. மேற்குறிப்பிட்ட பேச்சுவார்த்தைகள் எதுவுமே பொய்யில்லை.. தரவு வேண்டுமெனில் ஒரு அரை மணி நேரம் பாலாவைப் பேச விட்டால் தெரிந்து விடும்.. இன்னும் இது போன்ற நிறைய கதைகளைத் தலையைப் பேச விட்டு உங்களுக்காக பதிவு செய்வதே என்னுடைய தலையாய பணி..

2. பாகசவின் புதிய உறுப்பினர்களான இவர்கள் அனைவரும் தற்போது தமிழ்வலைபதிவுகளில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்கள் அனுமதியின்றி, அவர்கள் பெயரைப் பயன்படுத்தக்கூடாதென்று அனானியாக சொல்லி இருக்கிறேன். விருப்பமிருந்தால் யார் யார் என தானே குறிப்பிட்டு மகிழலாம் ;)

7 comments:

  1. Anonymous said...

    சங்கத்தில் எப்படி சேர்வது விண்ணப்பபடிவம் எங்கே கிடைக்கும்?

    -theevu-

  2. ♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

    கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

    என்னைய விட ஓட்டைவாயான் எவனோ.. எனக்கு பக்கத்துலேயே இருக்கான். அவன கண்டு புடிக்கனும் மொதல்ல! :(

  3. Anonymous said...

    //♠ யெஸ்.பாலபாரதி ♠ said...
    கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....
    என்னைய விட ஓட்டைவாயான் எவனோ.. எனக்கு பக்கத்துலேயே இருக்கான். அவன கண்டு புடிக்கனும் மொதல்ல! :(//

    கொஞ்ச நஞ்ச ஓட்ட வாய் இல்ல.. ராமேஸ்வரம் கடல் மாதிரி பெத்த பெரிசு.. அதான் உலகம் முழுக்க கும்மியடிக்கிறாங்க..

  4. அபி அப்பா said...

    //♠ யெஸ்.பாலபாரதி ♠ said...
    கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

    என்னைய விட ஓட்டைவாயான் எவனோ.. எனக்கு பக்கத்துலேயே இருக்கான். அவன கண்டு புடிக்கனும் மொதல்ல! :( //

    என்னய கண்டுபிடிக்க இன்னொறுத்தன் பொறந்து வரனும்:-))

  5. குசும்பன் said...

    "சங்கத்தில் எப்படி சேர்வது விண்ணப்பபடிவம் எங்கே கிடைக்கும்?"

    என்னது சின்ன புள்ள தனமா இருக்கு, அண்ணனுக்கு போன் போட்டா அவரே ஆளும்,விண்ணப்ப படிவமும் + மாத சந்தா 500 அனுப்பி வைப்பார்.
    அண்ணன் போன் நம்பர் வேண்டும் என்றால் நமீத்தா அண்ணிக்கிட்ட வாங்கிக்கவும்.

  6. கோபிநாத் said...

    \\நிகழ்ச்சி முடிந்த பின்னர், ஒரு வயதான அம்மையார் பாலாவுக்கு போன் போட்டு: நல்லா முழிக்கிறீங்க..சார்...\\

    யக்கா....கலக்கல் காமெடி ;)))))

  7. கோபிநாத் said...

    \குசும்பன் said...
    "சங்கத்தில் எப்படி சேர்வது விண்ணப்பபடிவம் எங்கே கிடைக்கும்?"

    என்னது சின்ன புள்ள தனமா இருக்கு, அண்ணனுக்கு போன் போட்டா அவரே ஆளும்,விண்ணப்ப படிவமும் + மாத சந்தா 500 அனுப்பி வைப்பார்.
    அண்ணன் போன் நம்பர் வேண்டும் என்றால் நமீத்தா அண்ணிக்கிட்ட வாங்கிக்கவும்.\\

    குசும்பு...அண்ணன் போன் நம்பரை அண்ணிக்கிட்ட வாங்கலாம் சரி....அண்ணி போன் நம்பரை யாருக்கிட்ட வாங்குறது...???