Wednesday, November 01, 2006

சோதனை முடிவுகள்

பீட்டாவில் இந்த வலைப்பூவைத் தொடங்கி, படம் காட்டி, சுட்டு, வெட்டி, எல்லாம் செய்து பிரித்து மேய்ந்தது இரண்டு நண்பர்களுக்காக - ஒன்று நம்ம ஆல் இன் ஆல் அழகு சுந்தரி ஆவி அம்மணி, அப்புறம் பா.க.சவின் அகில உலகத் தல வரவணையான். இவர்கள் இருவரும் சமீபத்தில் பீட்டாவுக்குப் போய் அதனால் அவர்கள் பதிவே தமிழ்மணத்தில் தெரியாமல் போனதால் தான், நான் இந்தச் சோதனையை மேற்கொள்ள வேண்டியதாகிவிட்டது.

சோதனையின் படிகள் : (அதாங்க steps)

1. முதலில் ப்ளாக்கர் பீட்டாவில் புதுக் கணக்கு ஒன்று தொடங்கினேன். திரு கிவியனின் நல்லாசியுடன் அந்தக் கணக்கு நாளொரு பதிவும் பொழுதொரு பின்னூட்டமுமாக வளர்ந்தது.

2. மூன்று பதிவுகள் போட்டதும் தமிழ்மணத்தில் அடுத்த நாளே வந்துவிட்டது!

3. இடுகைகளை நானாக வகைப்படுத்தும் முன்னரே யாரோ உதவி(?!) விட, எல்லா இடுகைகளும் நான் பார்க்காத போதே வகைப்படுத்தப்பட்டு விட்டது.

4. சரி, முதல் சில இடுகைகள் தமிழ்மணத்தில் சேருவதில் ஒன்றும் வியப்பில்லை என்றெண்ணி, புதிதாக ஒரு வெட்டியாகச் சுட்டவை இட்டேன்.

5. அதைச் சோதித்ததில், அதுவும் அழகாக தமிழ்மணத்தில் லிஸ்ட் ஆகிறது! (தல வரவணையின் ரியாக்ஷன் இங்கே ;) )

6. அப்புறம், சரி, இது வேலைக்காகாது என்று முடிவெடுத்து வரவணை போட்டிருக்கும் அதே வார்ப்புருவுடன் அடுத்த வெட்டியாய்ச் சுட்டவற்றைக் களம் இறக்கினேன்.

7. ஆகா, தமிழ்மணம், "வாம்மா மின்னல்" என்றபடி இதையும் உள்வாங்கிக் கொள்ள, என்ன பண்ணுவதென்றே தெரியவில்லை..

8. கடைசியாக, லேபிள், மற்றும் பிற அமைப்புகளிலும் வரவணை பதிவை அப்படியே சுட்டுச் சோதித்தாலும், நம்ம பதிவு மட்டும் அழகா வந்துவிட்டது தமிழ்மணத்தில்.

9. இறுதி கட்டமாக இன்று காலை ஆவி அம்மணியைச் சோதிக்கச் சொல்லி மடலிட்டதில், அம்மணியின் பதிவும் வருகிறது!!!!!!!!!!! என்ன அமானுஷ்ய வேலையோ தெரியவில்லை!


ஆக, சோதனை முடிவு:
வரவணை பதிவு மட்டும் தமிழ்மணத்தில் தெரியாமல் போவதன் காரணங்கள்:
1. தான் உண்டு தன் போனுண்டு என்று கடலை வறுத்துக் கொண்டிருந்தவரைச் சும்மா இல்லாமல் லால் சேட்ஜியின் சோட்டா பச்சாவாக்கியது

2. அனானி பின்னூட்டம் போட்டு ஆட்டையைக் குழப்பிக் கொண்டிருப்பவர்களைப் பிடித்து பட்டம் கொடுத்தே கொல்வது..

3. சென்னை, மங்களூர், மதுரை என்று வலைப்பதிவர் கூட்டம் சேர்த்துக் கொண்டிருந்தவரைப் பற்றிய திரைக்குப்பின் பதிவுகள்..

4. கௌபாய் பற்றிய உண்மைகளை உரைத்துவிட்டு சிகரெட்டுக்காகச் சொன்னேன் என்று காலை வாரி விட்டது..

இன்னும் பாதிக்கப்பட்டவர்கள் தத்தம் காரணங்களைச் சொல்லலாம்...

5. இதெல்லாம் தவிர, முக்கியமாக, தமிழ்மணத்தின் இந்த அறிவிப்புப் பதிவில் இன்னும் முறையிடாமல் இருப்பது ;)


முடிவுரை:

ஆக, சோதனை ஓவர், இன்னும் ஒரு வாரத்தில் இந்தப் பதிவைத் தூக்கினாலும் தூக்கிவிடுவேன்.. இல்லாமல், வேறு ஏதாவது சுட்டுப் போடுவதும் நடக்கலாம்.. ;)

14 comments:

  1. - யெஸ்.பாலபாரதி said...

    அடியாத்தீ... அடுத்த ரவுண்டா...

    தாங்காது ஆத்தா.. தாங்காது

  2. வரவனையான் said...

    என் வயித்தெரிச்சல் உங்களையெல்லாம் சும்மாவே விடாது. 5 நிமிசத்துக்கு ஒரு பின்னூட்டம் வந்து அத பப்ளிஷ் பண்ண முடியாம, உங்கள் சொந்த வேலையும் பார்க்க முடியாம. அவ்வப்போது மொபைல் போன ஹெல்ப்லைனா மாற்றி அதல ஒரு 1 மணி நேரம் வீணாப்போயி. ராத்திரி வீட்டுக்கு போறப்ப "பீட்டா" "பீட்டா"ன்னே புலம்பிகிட்டு போகனும்னு சாபம் விடுறேன்.

  3. - யெஸ்.பாலபாரதி said...

    ஏலேய்ய்ய்..
    மாப்ள.. நீயா இப்படி பொலம்புறது???

  4. வரவனையான் said...

    மாம்ஸூ ! என்னை இப்படி பொலம்பவிட்டுட்டானுகளே.......

    எல்லாம் நீ பார்த்த பார்வை தான்......

    :))))))

  5. லக்கிலுக் said...

    இதான் மேட்டரா?

    வரவனையான் என்னை வேறு பீட்டாவுக்கு மாறச்சொல்லி வற்புறுத்திக் கொண்டிருக்கிறார்....

    வரவனை... கவுக்கப் பாத்தியே.....

  6. அருள் குமார் said...

    கலக்கிட்டீங்க பொன்ஸ். பீட்டா ரொம்ப பிடிச்சிருந்தும் பயந்துகிட்டு மாறாமா இருந்தேன்.

    இந்த முடிவெல்லாம் புது வலைப்பூவுக்கு மட்டுமா இல்லை பழைய வலைப்பூவை மாற்றினாலும் சரிவருமா?

  7. பொன்ஸ்~~Poorna said...

    //இந்த முடிவெல்லாம் புது வலைப்பூவுக்கு மட்டுமா இல்லை பழைய வலைப்பூவை மாற்றினாலும் சரிவருமா?
    //
    அருள், இந்த முடிவெல்லாம் ப்ளாக்கரிலிருந்து பீட்டாவுக்கு மாறியதால் வந்த வினை தான்..

    சரி.. அடுத்து அருள் கேட்ட காரணத்தால் பொன்ஸ் பக்கங்களை பீட்டாவுக்கு மாற்றிமுயல வேண்டியது தான்.. :)

  8. அருள் குமார் said...

    //சரி.. அடுத்து அருள் கேட்ட காரணத்தால் பொன்ஸ் பக்கங்களை பீட்டாவுக்கு மாற்றிமுயல வேண்டியது தான்.. :)//

    நல்ல வேலை... மாத்தறதுக்கு முன்னடியே கேட்டேன். அதையும் சோதிச்சி சொல்லிட்டீங்கன்னா ரொம்ப புண்ணியமாப் போகும்.

    மிக்க நன்றி பொன்ஸ்.

  9. - யெஸ்.பாலபாரதி said...

    //அடுத்து அருள் கேட்ட காரணத்தால் பொன்ஸ் பக்கங்களை பீட்டாவுக்கு மாற்றிமுயல வேண்டியது தான்.. :)//

    அப்பாடா... நிம்மதி!
    சீக்கரம் ஒங்களுக்கு விடுதலை கொடுக்க ஏற்பாடு பண்றேன்னு அருள் சொன்னதுக்கு இப்ப தான் பொருள் வெளங்குது.
    ரொம்ம்ம்ம்ம்ம்ப டாங்ஸ் தல!

  10. தருமி said...

    அம்மையாருக்கு மிக்க நன்றி

    இப்படிக்கு,
    கெளபாய்,
    மதுரை.

    பி.கு.
    ஒழுங்கா வாசிங்க'ப்பா; கிழபாய்னு வாசிச்சிராதீங்க'ப்பு

  11. - யெஸ்.பாலபாரதி said...

    //இப்படிக்கு,
    கெளபாய்,
    மதுரை.

    பி.கு.
    ஒழுங்கா வாசிங்க'ப்பா; கிழபாய்னு வாசிச்சிராதீங்க'ப்பு//
    எங்கள் பட்டத்தை ஏற்றுக்கொண்ட தருமி அய்யா அவர்களுக்கு நன்றி!

  12. வரவனையான் said...

    இடுங்கிய கண்களுடன்,வாயின் ஓரத்தில் புகையும் சுருட்டுடன் எங்கோ வெறித்து பார்க்கும் கிளின்ட் ஈஸ்வுட் கோலத்தில் தருமியை நினைத்துப்பார்த்தேன்.....

    ஊகும் எனக்கு பிடிக்கவில்லை , கிளீன்ட் 30 வயதிலே 65 வயது தோற்றம் பெற்றவர்.

    நம்மாளுக்கு பொருந்தி போவது "அமெரிக்கன் அவுட் லாஸ் " காலின் பெர்ரல் தான். ஆம் போன்பூத் படத்தில் நடித்த அதே நபர். கௌபாய் காலத்து மிகக்பயங்கர கொள்ளையன் ஜெஸ்ஸி ஜேம்ஸாக பட்டையை கிளப்பி இருப்பார்.

    தோற்றபொருத்தமும் ஒகோ...


    ( அடுத்த வாரம் பதுர பக்கம் வரனும், கௌபாயுடன் சாலுன் போய் "ஜேக் டேனியல்ஸ்" ஓசியில் நாலு லார்ஜ் போடவேண்டு, என்கிற எண்ணத்தில் - மேலுள்ள பின்னூட்டம் இடப்படவில்லை)

    :)))))))))

  13. - யெஸ்.பாலபாரதி said...

    //
    ( அடுத்த வாரம் பதுர பக்கம் வரனும், கௌபாயுடன் சாலுன் போய் "ஜேக் டேனியல்ஸ்" ஓசியில் நாலு லார்ஜ் போடவேண்டு, என்கிற எண்ணத்தில் - மேலுள்ள பின்னூட்டம் இடப்படவில்லை)//

    :-))))



    நம்புறோம்...
    நம்புறோம்...
    நம்புறோம்...
    நம்புறோம்...

  14. நாமக்கல் சிபி said...

    தலைப்புல நமக்கு விளம்பரம் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றிங்கக்கோவ் :-)