Sunday, November 19, 2006

வலைபதிவர் கூட்டம் - கொறிக்க..

சென்னபட்டினத்தில் செய்தியறிக்கை சமர்ப்பித்துவிட்டாலும், எல்லாவற்றையும் அங்கே சொல்ல முடியாமையால்:

  • வரவணையான் கருப்புக் கண்ணாடியுடன் உட்கார்ந்திருந்ததைப் பார்த்து "தூத்துக்குடியிலும் மெட்ராஸ் ஐ போலும்" என்று நினைத்துக் கேட்டால், காலையில் சரவணா ஸ்டோர்ஸில் வாங்கிய புத்தம் புது கண்ணாடியாம்! (ஸ்டைலாம்!)

  • உண்மையான மெட்ராஸ் ஐயுடன் கண் நிறத்துக்கு மேட்சிங்காக சிகப்புச் சட்டையுடன் வந்திருந்த வினையூக்கி பாவம், அந்தக் கண்ணுடன் காலை பரிட்சை வேறு எழுதிவிட்டு வந்திருந்தாராம்!

  • "நான் இதுவரைக்கும் உருப்படியான பதிவே போட்டதில்லை" என்ற முக்கியமான பிரகடனத்தை சமீபத்தில் நூறு பதிவுகள் கண்டவரும், பா.க.ச.வின் தலைவருமான பாலபாரதி அறிவித்தார். ;)

  • "தமிழ் நதி தான் தமிழ் சசியா?" என்று யாரோ ஒரு அனானி கேட்டதாகச் சொன்ன தமிழ்நதி, "தமிழ் சசி யார்?" என்று கேட்டுத் தெரிந்து கொண்டார்.

  • தன் அண்ணன் மகளுடன் வந்திருப்பதாக தமிழ் நதி கூற, எனக்கு ஒரே ஆச்சரியம். இருவரும் கிட்டத்தட்ட சமவயது தோழிகள் மாதிரி தான் இருந்தார்கள்!

  • பூந்தளிர், கோகுலம், அம்புலிமாமா, போன்ற சிறுவர் புத்தகங்களை இன்றைய குழந்தைகளும் படிக்கிறார்களா? என்று ரோசாவசந்த் கேட்டதற்கு, "சுட்டிவிகடன் நல்லா போகுது. நானும் கூடப் படிக்கிறேனே" என்று அதிர்ச்சி கொடுத்தேன் ;)

  • மரவண்டு கணேஷ் சமீபகாலமாக பாலபாரதி பதிவை மட்டும் படிக்கிறார் போலும், பாலாவின் பதிவில் பின்னூட்டம் இடுபவர்களை எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார். அகிலன் முதலான ஈழப் பதிவர்களைத் தேன்கூட்டில் பதிந்து கொள்ளச் சொல்லி சிபாரிசு செய்தார்.

  • விக்கி blogcampக்குக்காக வாங்கிய டீ சர்ட்டை அணிந்து வந்தார். தமிழ்வலைப் பதிவர்களுக்கும் அப்படி ஒரு சட்டை ஏற்பாடு செய்தால், குங்குமம், சென்னை சில்க்ஸ் விளம்பரங்களுடன் செய்து பார்க்கலாம் என்று தோன்றியது

  • பார்வதி மினி ஹாலில் இருந்த சின்ன பிள்ளையார் ஒன்றை யாருக்கும் தெரியாமல் சுட முடியுமா என்ற கேள்வி எழுந்த போது, அப்படிச் செய்தால், அவர்களிடம் பாலபாரதி செல்பேசி எண் தான் இருக்கிறது என்ற விவரம் நினைவுக்கு வந்ததால், பெரிய பிள்ளையாரையே எடுப்பது என்று முடிவாயிற்று. பாலா ரொம்பவும் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

  • மரபூரார் பேச்சு மும்முரத்தில் தன் தொப்பியை விட்டுவிட்டுப் போய் வீட்டிலிருந்து தொலைபேசி அதைப் பற்றிக் கேட்டுக் கொண்டார்.

  • சந்திப்பில் கலந்து கொள்ளாமலே அதிகம் பேசப்பட்ட இருவர் தருமியும் வஜ்ராவும் - தருமியில் சமீபத்தைய பதிவில் அவர்களது விவாதத்திற்காக. கிட்டத் தட்ட அதே மாதிரியான அனல் பறக்கும் விவாதம் பாலபாரதிக்கும் ஓகை நடராஜனுக்குமிடையில் நடந்தது - தருமி பதிவு போல் இல்லாமல், தமிழில்..!

  • வந்தோமா, வலைபதிவர் சங்கம் பற்றிப் பேசினோமா, போனோமா என்றிருந்தார் டிபிஆர் ஜோசப் அவர்கள். நேற்று அவருக்கு நிறைய வேலை போலும்.

  • சீக்கிரம் வெளியேறினவர்களில் மற்றொருவர் தமிழ்நதி. அவரின் அண்ணன் மகளுக்கு இந்த வலைப்பதிவு விவாதங்கள் சீக்கிரமே போரடிக்கத் தொடங்கிவிட்டது.

  • உதயசூரியன் சின்னம் போட்ட சன்ஃபீஸ்ட் பிஸ்கெட் வழங்கி பாலபாரதி தம் ஒரு கட்சி சார்பைக் காட்டிக் கொண்டார். (அநேகமாக இந்தப் பிஸ்கெட்டை அதிகம் ரசித்துச் சாப்பிட்டது முத்து தமிழினி, வலையுலக சின்னக் குத்தூசி லக்கிலுக் [நன்றி: பாலபாரதி], வரவணை முதலியோர்) ;)



திருமணத்திற்குத் தயாராகும் நட்சத்திரம் அருள்குமார்

  • தங்கவேல் முன்னமே வாக்குக் கொடுத்தபடி அதிக அளவிலான தேநீர் குடித்தார். கடைசியாகக் கிடைத்த தகவலின் படி அவர் கையில் சுமார் ஆறு காலி கப்கள் இருந்தன.

  • நெடுநாளைய வலைப்பதிவு வாசகர் பூபாலன், முத்து (தமிழினி) எது சொன்னாலும் கேட்கமாட்டேன் (என்ற உதாரணத்தைக் கூறி) தனிமனிதத் தாக்குதலில் ஈடுபட்டார். இருப்பினும் முத்து எதுவுமே சொல்லாமல் தப்பித்து வந்துவிட்டார்.

  • சந்திப்பு முழுவதும் அமைதியாக இருந்தவர்கள் மிதக்கும்வெளி சுகுணா திவாகர், சின்னக் குத்தூசி லக்கிலுக் மற்றும் வினையூக்கி. சாதீயம் குறித்த விவாதத்தின் போது மட்டும் முன்னிருக்கை தேடிப் போய் உட்கார்ந்து கொண்டார் லக்கிலுக். ஆனாலும் எதுவும் பேசவில்லை.

  • ஏதோ ஒரு பதிவில் "வயதானவர்களுடன் எந்தக் கொடுக்கல் வாங்கலும் வைத்துக் கொள்வதில்லை" என்று நான் சொல்லி இருந்ததைப் படித்துவிட்டு சிவஞானம்ஜி அதைப் பற்றியே கேட்டுக் கொண்டிருந்தார். "சிஜி, நீங்க எல்லாம் வயதானவர்கள் லிஸ்ட்லயே வரமாட்டீங்க!" என்று சொல்லிக் குளிர்விக்க முயன்றேன் :)) (ஐஸ் ஐஸ் பேபி :) )

  • அருள் சாதீயம் பற்றிய விவாதத்தில் தேநீர்க் கோப்பையை வைத்து ஏதோ விளக்க முயற்சித்தார். அதைப் பார்த்தவுடன் எனக்கும் செந்திலுக்கும் அடுத்த தேநீர் குடிக்கும் யோசனை வந்துவிட்டது.

  • இறுதியாக எல்லாரும் கிளம்பியபின்னும் பேசிக் கொண்டிருந்துவிட்டுக் கிளம்பினர் அருளும் வீ த பீப்பிளும். அதற்குள் பார்வதி ஹாலைப் பூட்டியாகிவிட்டது ;)

29 comments:

  1. Hariharan # 03985177737685368452 said...

    கூடுதல் தகவல்களுடன் வலைஞர் அருள்குமார் தேநீர் சப்ளை செய்ததை வீடியோவில் பார்த்து அறிய முடிந்தது!

    பதிவிற்கு நன்றிகள்!

  2. siva gnanamji(#18100882083107547329) said...

    பொன்ஸ் தன்னொத்த வயதினருடன்
    வரவு-செலவு வைத்துக் கொள்வதில்லை என்று எழுதியது ஏன்?
    என்றுதான் கேட்டேன்

    மற்றபடி அது அவர்கள் பிரச்சினை..
    நமக்கென்ன ஆச்சு?

  3. Anonymous said...

    உங்களுக்கு ஸ்வீட் வாய்ஸ் அம்மணி.

  4. வரவனையான் said...

    thoodaa....

  5. டிபிஆர்.ஜோசப் said...

    பொன்ஸ்,

    நேற்று முற்றிலும் நான் எதிர்பார்த்திராத அலுவல் வந்துவிட்டது. இருப்பினும் கூட்டத்திற்கு கலந்துக்கொள்ள வேண்டுமே என்று சற்று தாமதமாக வந்தேன்..

    என்னுடைய அலுவலில் ஞாயிறும் இல்லை விடுமுறை நாட்களும் இல்லை. எல்லாம் ஒன்றுதான்..

    ஆனால் கூட்டத்தின் விவாத போக்கிலும் எனக்கு லேசான வருத்தம் இருந்தது..

    வலைப்பூக்கள் என்பது அவரவர் நாட்குறிப்பு எழுதுவது போன்றது. அதில் என்ன எழுதலாம் என்ன எழுதலாகாது என்பதை அவரவர்களே முடிவு செய்ய வேண்டும். நல்ல கருத்துள்ள பதிவுகளைத் தருபவர்கள் மட்டுமே நிலைத்திருப்பர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

    வெறும் பின்னூட்டங்களுக்காக சர்ச்சைக்குரிய விஷயங்களை எழுதுபவர்கள் நாளடைவில் காணாமல் போய்விடுவார்கள்..

    சாதீயமும் அப்படிப்பட்ட ஒரு தலைப்புதான்.. அதையே வலைப்பதிவர் கூட்டத்தில் மையமாக வைத்து ஒரு பட்டிமன்றத்தை நடத்துவதில் எனக்கு உடன்பாடில்லை..

    ஆகவே தான் இன்னும் சற்று நேரம் இருக்க நினைத்தும் என்னால் இருக்க முடியவில்லை.. கிளம்பிச் சென்று விட்டேன்..

  6. We The People said...

    //"நான் இதுவரைக்கும் உருப்படியான பதிவே போட்டதில்லை" என்ற முக்கியமான பிரகடனத்தை சமீபத்தில் நூறு பதிவுகள் கண்டவரும், பா.க.ச.வின் தலைவருமான பாலபாரதி அறிவித்தார். ;) //

    உண்மைய தானே சொன்னார். பாவம் இதுக்கு அவரை கலாய்க்காதீங்க. :))))))

    கடைசி ஆப்பு எனக்கு அருளுக்குமா?? ரொம்ப ஓவர்.

  7. Anonymous said...

    டயரியில் எழுதவேண்டியதை எல்லாம் வலைப்பூவில் எழுதினால் டயரி எதற்கு?

    எனக்குத் தெரிந்து ஒவ்வொருவரின் டயரிக்கு அவர் மட்டுமே வாசகராக இருப்பார். அடுத்தவன் படிச்சா அதுக்கு பேரு டயரி அல்ல... பத்திரிகை.

  8. பொன்ஸ்~~Poorna said...

    நன்றி ஹரிஹரன்.

    சிஜி, //தன்னொத்த வயதினருடன்//
    இதெல்லாம் ஓஓஓஒவர்!! :)))

    நன்றி அனானி

    //thoodaa//
    செந்தில், இது மொத்த பதிவுக்குமேவா? இல்லை கண்ணாடிக்கு மட்டுமா ;)

  9. பொன்ஸ்~~Poorna said...

    ஜோசப் சார்,
    உங்கள் திடீர் அலுவல்களுக்கிடையிலும் வந்து கலந்து கொண்டமைக்கு நாங்கள் தான் நன்றி சொல்ல வேண்டும். அடுத்த முறை விவாத தலைப்புகளை ஓட்டெடுப்பு நடத்தி தீர்மானித்துவிடுவோம்..
    எப்படியும் இந்த முறை விவாதமும் நன்றாகவே போனது..

    //கடைசி ஆப்பு எனக்கு அருளுக்குமா?? ரொம்ப ஓவர்.
    //
    we the people - வேற்றுமை பாராட்டாத ஜனநாயக நாடல்லவா? ! :)

    டயரி எழுதுபவன், உங்க உண்மையான பெயர் என்ன? சூர்யாவா? எனக்குத் தெரிஞ்சு அவர் தான் சமீபகாலமா எல்லாப் படத்துலயும் டைரி எழுதுறார் :)

  10. Anonymous said...
    This comment has been removed by a blog administrator.
  11. Anonymous said...

    ம்.எல்லாரும் இறங்குங்கப்பா!

    எல்லாரும் வேண்டாம். ஒரு அம்பது பேரு போதும்.

    உஸ்ஸப்பாடா! இன்னிக்கு அங்கியும் இங்கியும் ஆளுங்களை அனுப்பறதுக்குள்ளே தாவுத்தண்ணி தீர்ந்துடும் போல இருக்கே!

  12. Anonymous said...

    //எனக்குத் தெரிந்து ஒவ்வொருவரின் டயரிக்கு அவர் மட்டுமே வாசகராக இருப்பார். அடுத்தவன் படிச்சா அதுக்கு பேரு டயரி அல்ல... பத்திரிகை. //

    நாங்கள்ளாம் அதை டைரின்னே நினைக்க மாட்டோம். கதை பொஸ்தவம்னுதான் நினைப்போம்!

  13. Anonymous said...

    சென்னை அ.மு.க.வினருக்கு இந்த பதிவில் எவ்வளவு இடஒதுக்கீடு என்று சொல்ல முடியுமா?

    எங்களுக்கு கிடைக்கும் பர்சண்டேஜை வைத்து கும்மி அடிக்க தயார்.

    - அனானி அண்ணாமலை
    அமைப்பாளர்
    அனானி முன்னேற்றக் கழகம்
    அமைந்தகரை

  14. Anonymous said...

    //பொன்ஸ் தன்னொத்த வயதினருடன்
    வரவு-செலவு வைத்துக் கொள்வதில்லை என்று எழுதியது ஏன்?
    என்றுதான் கேட்டேன்
    //

    வயசான காலத்துல கணக்கு வழக்கு மறந்து போச்சுனா? அப்புறம் என்னா பண்ணுறதாம்?

  15. senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

    டயரி எழுதுபவரே பிளாக் என்பது பத்திரிக்கையும் அல்ல, டயரியும் அல்ல. கையெழுத்துப் பத்திரிக்கை என்று கூட சொல்ல இயலாது. தன்னுடைய எண்ணங்களை வெளியிட உதவும் ஒரு சாதனம்.

    இதற்கு வரைமுறைகள் என்று கிடையாது வைக்கவும் முடியாது ஏனெனில் இதற்கு சென்சார்ஷிப் என்பதை வைக்கவே இயலாது.

    ///
    வலைப்பூக்கள் என்பது அவரவர் நாட்குறிப்பு எழுதுவது போன்றது. அதில் என்ன எழுதலாம் என்ன எழுதலாகாது என்பதை அவரவர்களே முடிவு செய்ய வேண்டும். நல்ல கருத்துள்ள பதிவுகளைத் தருபவர்கள் மட்டுமே நிலைத்திருப்பர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

    வெறும் பின்னூட்டங்களுக்காக சர்ச்சைக்குரிய விஷயங்களை எழுதுபவர்கள் நாளடைவில் காணாமல் போய்விடுவார்கள்..

    சாதீயமும் அப்படிப்பட்ட ஒரு தலைப்புதான்.. அதையே வலைப்பதிவர் கூட்டத்தில் மையமாக வைத்து ஒரு பட்டிமன்றத்தை நடத்துவதில் எனக்கு உடன்பாடில்லை..
    ///

    ஜோசப் சார் சொல்வதை ஆழ்ந்து கவனித்தால் அவர் சொல்ல வந்தது புரியலாம் பலர் பின்னூட்டங்களுக்காக sensationalise செய்கிறார்கள் என்பது என்னுடைய அளவில் கூட உண்மைதான்.

  16. Anonymous said...
    This comment has been removed by a blog administrator.
  17. senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...
    This comment has been removed by a blog administrator.
  18. Anonymous said...

    //சென்னை அ.மு.க.வினருக்கு இந்த பதிவில் எவ்வளவு இடஒதுக்கீடு என்று சொல்ல முடியுமா?
    //

    அதான் 50 பேரை இறக்கியிருக்கமேப்பா! இன்னும் வேணுமா என்ன?

  19. Anonymous said...

    உங்கள் மீட்டிங்கில் படம் எடுத்த இட்லிவடை, தான் செய்தது குறித்து ஓட்டெடுப்பு நடத்துகிறார்.

    நீங்க ஓட்டு போட்டீங்களா?

  20. Anonymous said...

    சாதீயமும் அப்படிப்பட்ட ஒரு தலைப்புதான்.. அதையே வலைப்பதிவர் கூட்டத்தில் மையமாக வைத்து ஒரு பட்டிமன்றத்தை நடத்துவதில் எனக்கு உடன்பாடில்லை..

    ஆகவே தான் இன்னும் சற்று நேரம் இருக்க நினைத்தும் என்னால் இருக்க முடியவில்லை.. கிளம்பிச் சென்று விட்டேன்..//

    நல்லா சொன்னிங்க சார்.

    பொன்ஸ், ரெண்டு ஆர்டிகிளும் படித்தேன், நன்றி.

  21. வினையூக்கி said...

    விவாத அனலில் என் மெட்ராஸ் ஐ போயே போச்சு. போயிந்தி..இட்ஸ் கான்.

  22. அருள் குமார் said...

    //திருமணத்திற்குத் தயாராகும் நட்சத்திரம் அருள்குமார்// நாங்கல்லாம் திருமணத்துக்கு தயாராகி நாலஞ்சு வருஷம் ஆச்சு :(( பாலா கணக்கு இன்னும் அதிகம் :))))

  23. G.Ragavan said...

    சென்னை கூட்டம் சிறப்பாக நடந்தது குறித்து மகிழ்ச்சி. நல்ல தகவல்களைத் தந்தமைக்கு நன்றி.

    ஜோசப் சார் குறிப்பிட்ட கருத்து..அதாவது மும்பையைப் போல் நாமும் தமிழ் வலைப்பதிவுகளைப் பதிந்து கொள்வது. இது நிச்சயம் செயல்படுத்த வேண்டும். இதை யெஸ்பா முன்னெடுத்துச் செய்ய வேண்டும். கண்டிப்பாக நாங்கள் தோள் கொடுத்து உடன் வருவோம். இப்படிப் பதிந்து கொள்வது நிச்சயமாக பலவிதங்களில் உதவியாகவே இருக்கும் என்றே நினைக்கிறேன்.

    அதே போல ஒரு வலைப்பூவில் என்ன எழுதலாம் என்பதை எழுதுகிறவர்தான் முடிவு செய்ய வேண்டும். பின்னூட்டத்திற்காகவோ பகிர்தலுக்காகவோ..அல்லது வேறெதெர்காகவோ...அவரவர் எழுத்துக்கு அவரவரே பொறுப்பு.

    அடுத்த சந்திப்பிற்கு நிச்சயமாக வரவேண்டும் என்ற ஆவலை இந்தச் சந்திப்பு உருவாக்கி விட்டது என்பது உண்மைதான்.

    சாதீயம் என்று வந்தாலே...சண்டையும் சச்சரவும் வரத்தான் செய்யும். அடுத்த முறை மதயீயத்தையும் காய்ச்சி ஊற்ற ஏற்பாடு செய்ய வேண்டும்.

  24. சீனு said...

    /////
    //திருமணத்திற்குத் தயாராகும் நட்சத்திரம் அருள்குமார்//
    நாங்கல்லாம் திருமணத்துக்கு தயாராகி நாலஞ்சு வருஷம் ஆச்சு :(( பாலா கணக்கு இன்னும் அதிகம் :)))
    /////
    என்ன சீனியர், சூப்பர் ஸீனியரை கலாய்க்கரீங்க போல இருக்கு???

  25. துளசி கோபால் said...

    மினி ஹாலில் இருந்த நாற்காலிகள் நல்லா இருக்குங்க.

    படம் காமிச்சதுக்கு நன்றி:-))))

  26. Gurusamy Thangavel said...

    //தங்கவேல் முன்னமே வாக்குக் கொடுத்தபடி அதிக அளவிலான தேநீர் குடித்தார். கடைசியாகக் கிடைத்த தகவலின் படி அவர் கையில் சுமார் ஆறு காலி கப்கள் இருந்தன. //
    அடப்பாவி பொன்ஸ், இதெல்லாம் ரொம்ப அதிகங்க. யார் யாரோ குடித்த டீ தம்ளர்களையெல்லாம் சேகரிச்சு குப்பைதொட்டியில் போட எடுத்தேன் பாருங்க, அது ரொம்ப தப்புனு இப்பல்ல தெரியுது. சமூக சேவைக்கு!? (ஹி ஹி சும்மா தாமாசுக்குத்தான்) நம்ம ஊர்ல மதிப்பே இல்லைங்க. பி.கு நான் ஆறு என்ன 10 டீ கூட ஒருநாளைக்கு குடிப்பேங்றது வேறுவிசயம்.

  27. பொன்ஸ்~~Poorna said...

    செந்தில்,
    //வலைப் பதிவருக்கு ஒரு விண்ணப்பம் ஒரு சில பின்னூட்டங்கள் நாகரீமாக படவில்லை அந்தப் பின்னூட்டங்களைப் பற்றி மறுபரிசீலனை செய்யவும்//
    நிறைய விஷயங்களை எடுத்திட்டேன்..

    //விவாத அனலில் என் மெட்ராஸ் ஐ போயே போச்சு. போயிந்தி..இட்ஸ் கான்//
    பரவாயில்லையே,, சந்திப்புக்கு இப்படி வேற நன்மைகள் இருக்கா. திரு, இதை உங்க அறிக்கையில் சேர்க்கலியே !! :))

    //தயாராகி நாலஞ்சு வருஷம் ஆச்சு //
    வீட்டுக்கு வந்து சொல்றோம் அருள், குறை வேண்டாம் :))

    //அடுத்த சந்திப்பிற்கு நிச்சயமாக வரவேண்டும் என்ற ஆவலை இந்தச் சந்திப்பு உருவாக்கி விட்டது //
    வாங்க இராகவன்.. நிச்சயமா..

    //என்ன சீனியர், சூப்பர் ஸீனியரை கலாய்க்கரீங்க போல இருக்கு???
    //
    நீங்க எப்படி சீனு, சூப்பர் சூப்பர் சீனுயர்? :)))

    //மினி ஹாலில் இருந்த நாற்காலிகள் நல்லா இருக்குங்க.//
    அது சரி :)))

    //அடப்பாவி பொன்ஸ், இதெல்லாம் ரொம்ப அதிகங்க.//
    தங்கவேல், நீங்க இன்னும் பார்க்கலியேன்னு தாங்க நினைச்சிகிட்டிருந்தேன்.. :)))

    //சமூக சேவைக்கு!? (ஹி ஹி சும்மா தாமாசுக்குத்தான்) நம்ம ஊர்ல மதிப்பே இல்லைங்க//
    தமாசா சொன்னாலும் உண்மை தான் :))

  28. senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

    அப்படியே என்னுடைய பின்னூட்டத்தையும் எடுத்து விடவும் அதில் அனானி அவர்களின் கமெண்டை காபி பேஸ்ட் செய்துள்ளேன் நன்றி.

  29. Gurusamy Thangavel said...

    பொன்ஸ், நான் இரண்டு நாட்களாக ஊரிலில்லை, அதனால் தமிழ்மணமும் அதிகம் பார்க்கவில்லை.