Tuesday, November 21, 2006

நேற்று இன்று நாளை

நேற்று:

//இவ்வாறு முகத்தை மூடிக்கொண்டு இவர்கள் ப்ளாக் ஏன் எழுதுகிறார்கள் என்பது புரியவில்லை?
தங்கள் கருத்துகளில் நேர்மை இல்லாதவர்கள் என்று சொன்னால் ரொம்பவும் காட்டமாக இருக்கிறது. ஆனால், உண்மை அதுதானோ?//

இன்று:

// போட்டோ போட வேண்டும் என்று ஜயராமன் சொன்னான் என்று சொல்லி என் கருத்தை கொச்சைப்படுத்தி அதை நிராகரிக்க எளிதாக்கவேண்டாம்.

தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு - புனைப்பெயராக இருந்தால் நிஜப்பெயரை சொல்லிக்கொண்டு - பதிவிடுவதே சிறந்தது என்பதே என் கருத்து.//

நாளை(???):

//நிஜப்பெயர் சொல்லிப் பதிவிடவேண்டும் என்று ஜயராமன் சொன்னார் என்று சொல்லி என்னைக் கொச்சைப் படுத்த வேண்டாம்.

எழுதுபவர் பெயரில்லாமலே கூட எழுதலாம். வால்மீகிக்குக் கூட அது தான் இயற்பெயர் என்று நமக்குத் தெரியுமா என்ன? // ;)


குறிப்பு: இங்கே எந்தப் பதிவரையும் தனி மனிதத் தாக்குதல் செய்யவில்லை. கருத்துகள் மட்டுமே சேமிக்கப் பட்டிருக்கிறது

23 comments:

 1. புரிந்து கொள்ள முயற்சி செய்பவன் said...

  என்ன நடக்குது இங்கே?

 2. luckylook said...

  யக்கா!

  அடிச்சி ஆடுங்க... பின்னுறீங்க....

 3. Anonymous said...

  வெட்டியாய்ச் சுட்டவை :)

 4. கார்மேகராஜா said...

  ஒன்னுமே புரியல உலகத்திலே!
  என்னமோ நடக்குது. மர்மமா இருக்குது.

 5. பெயருடைய எழுத்திலி said...

  எங்களுக்கெலாம் பெயர் இருக்கிறது. ஆனால் எழுதுவதில்லை.

  நாங்கள் என்ன செய்வது?

 6. செந்தில் குமரன் said...

  பக்கத்து சீட்டில் இருப்பவர் என்ன என்று கேட்கும் அளவுக்கு சிரித்து விட்டேன்.

  ///
  பெயருடைய எழுத்திலி said...
  எங்களுக்கெலாம் பெயர் இருக்கிறது. ஆனால் எழுதுவதில்லை.

  நாங்கள் என்ன செய்வது?
  ///

 7. இலவசக்கொத்தனார் said...

  இததாங்க்கா நானும் சொன்னேன். அதுக்கே நம்ம நண்பர் ஒருத்தர் சீறி விழுந்தாரு!!

 8. திரு said...

  :)

 9. We The People said...

  அவரு கண்டிப்பா ஒரு அரசியல்வாதியா வரலாம் என்று நினைக்கிறேன். கண்டிப்பா ஒரு கருணாநிதி, வை.கோ, ஜெயலலிதா ரெஞ்சுக்கு வர பிரகாசமான வாய்ப்பு உள்ளது...

  பொன்ஸ் எத்தனை பேரை அனானியா அனுப்ப சொல்லியிருக்கீக?? எவ்வளவு பில்? இதுக்குயெல்லாம் ஷேர் கேட்கமாட்டீங்களே ;)

 10. மஞ்சூர் ராசா said...

  ஏதோ கொஞ்சம் கொஞ்சம் புரியற மாதிரி இருக்கு.

 11. ராம் said...

  :))))

 12. ஜயராமன் said...

  பொன்ஸ் அவர்களே,

  இப்போதுதான் தங்களின் இந்த பதிவை பார்த்தேன். முன்பே மிஸ் பண்ணி விட்டோமே என்று வருத்தமாய் இருக்கிறது. ஆனால், அதனால் என்ன!!

  பொட்டில் அடித்தது போல் சொல்லியிருக்கிறீர்கள். மிக்க சந்தோஷம்.

  நீங்கள் முன்பே என் குறித்து சொன்ன "இரட்டைத்தனம்" பற்றி இதற்கு மேல் பாந்தமாய் பதிவு போட முடியாது. தெளிவாய் இருக்கிறது.

  மேலும், நம் இணைய நண்பர்கள் என்னிடம் சுட்டிக்காட்டிய பல இழிகுணங்களான அரசியல்வாதித்தனம், மலிவு அரசியல், பார்ப்பனீயம், மட்டையடித்தனம் முதலிய பல விஷங்களையும் என்னிடம் நான் தவறாமல் உணர்கிறேன்.

  நீங்கள் என்னை விட வயதில் மிகவும் சிறியவராக இருந்தாலும் நேர்மையிலும், உண்மையிலும் மிகவும் உயர்ந்து குருவானீர்கள்.

  தங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

  ஒரு சாப விமோசனம் பெற்றதுபோல் உணர்கிறேன். நிறைவாய் இருக்கிறது.

  தமிழ்மணத்தில் இனி பதிவு என்று மேலும் குப்பை போடுவதையோ, எதிலும் பின்னூட்டம் இட்டு அரசியல் இரட்டைத்தனம் பண்ணுவதையோ இனி நான் செய்யமாட்டேன் என்று உங்களுக்கு நான் உறுதி கூறுகிறேன்.

  தமிழ்மணத்தில் இனி விஷம் இன்றி மேலும் மணம் வீசும் என்று அறிந்து மகிழ்கிறேன்.

  நன்றி

 13. ஆழியூரான் said...

  //பொட்டில் அடித்தது போல் சொல்லியிருக்கிறீர்கள். மிக்க சந்தோஷம்.

  நீங்கள் முன்பே என் குறித்து சொன்ன "இரட்டைத்தனம்" பற்றி இதற்கு மேல் பாந்தமாய் பதிவு போட முடியாது. தெளிவாய் இருக்கிறது.

  மேலும், நம் இணைய நண்பர்கள் என்னிடம் சுட்டிக்காட்டிய பல இழிகுணங்களான அரசியல்வாதித்தனம், மலிவு அரசியல், பார்ப்பனீயம், மட்டையடித்தனம் முதலிய பல விஷங்களையும் என்னிடம் நான் தவறாமல் உணர்கிறேன்.//

  ஒப்புதல் வாக்குமூலத்திற்கு நன்றி..


  //நீங்கள் என்னை விட வயதில் மிகவும் சிறியவராக இருந்தாலும் நேர்மையிலும், உண்மையிலும் மிகவும் உயர்ந்து குருவானீர்கள்.

  தங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

  ஒரு சாப விமோசனம் பெற்றதுபோல் உணர்கிறேன். நிறைவாய் இருக்கிறது.//

  எரிச்சலின் உச்சத்தில் வெளியான உள்குத்து வார்த்தைகள்.தான் செய்த தவறு வெளிச்சத்துக்கு வரும்போது பார்ப்பானிய மனநிலையில் உள்ளவர்களிடமிருந்து இந்த தொனியில்தான் வார்த்தைகள் வெளிப்படும்.இங்கும் அஃதே..


  //தமிழ்மணத்தில் இனி பதிவு என்று மேலும் குப்பை போடுவதையோ, எதிலும் பின்னூட்டம் இட்டு அரசியல் இரட்டைத்தனம் பண்ணுவதையோ இனி நான் செய்யமாட்டேன் என்று உங்களுக்கு நான் உறுதி கூறுகிறேன்.

  தமிழ்மணத்தில் இனி விஷம் இன்றி மேலும் மணம் வீசும் என்று அறிந்து மகிழ்கிறேன்.//

  டாட்டா..பை பை..

 14. luckylook said...

  //தமிழ்மணத்தில் இனி பதிவு என்று மேலும் குப்பை போடுவதையோ, எதிலும் பின்னூட்டம் இட்டு அரசியல் இரட்டைத்தனம் பண்ணுவதையோ இனி நான் செய்யமாட்டேன் என்று உங்களுக்கு நான் உறுதி கூறுகிறேன்.//

  நன்றி ஜெயராமன் அவர்களே!

  உங்களுக்கு கோடி கோடி நமஸ்காரம்....

 15. யெஸ்.பாலபாரதி said...

  ////தமிழ்மணத்தில் இனி பதிவு என்று மேலும் குப்பை போடுவதையோ, எதிலும் பின்னூட்டம் இட்டு அரசியல் இரட்டைத்தனம் பண்ணுவதையோ இனி நான் செய்யமாட்டேன் என்று உங்களுக்கு நான் உறுதி கூறுகிறேன்.//

  நன்றி ஜெயராமன் அவர்களே!

  உங்களுக்கு கோடி கோடி நமஸ்காரம்....//

  ரிப்பீட்டே...

 16. பொன்ஸ் said...

  ஜயராமன்,
  நீங்கள் வெவ்வேறு இடங்களில் சொல்லி இருந்ததை எடுத்து ஒரே இடத்தில் சேமித்தது தங்களுக்கு மன வருத்தத்தையும் உளைச்சலையும் ஏற்படுத்தி இருப்பதற்காக வருந்துகிறேன்.

  நீங்கள் வெவ்வேறு இடங்களில் இட்ட பின்னூட்டங்களும் இதே மாதிரி எண்ணங்களைப் பிறரிடம் ஏற்படுத்தியதென்பதையும் நீங்கள் உணராததை வருத்தத்துடன் எண்ணியபடியே இந்த விவகாரத்தை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

  இந்தப் பதிவையே திரும்பப் பெற்றுவிடுவேன், என்ன செய்ய, இது எதுவுமே என்னுடைய சொற்கள் அல்லவே. என் சொற்களை மட்டும் அழித்துவிட்டு வேண்டுமானால் இட்டுவிடுகிறேன். மற்றபடி உங்களின் மன வருத்தம் உண்டாக்கியதற்கு என்னுடைய வருத்தங்களையும் இங்கே பதிவு செய்கிறேன்.

  நீங்கள் தொடர்ந்து பதிவுகள் இடுவதும், இடாததும் உங்கள் விருப்பம். அதைப் பற்றி உங்களின் பதிவைப் படிக்கும் வாசகர்கள் இன்னும் தெளிவாகவும் உணர்வுப்பூர்வமாகவும் கூறுவார்கள். நான் உங்களின் பின்னூட்டங்களை மட்டுமே படிப்பதால், நீங்கள் தொடர்ந்து இயங்க வேண்டும் என்றே வேண்டிக் கொள்கிறேன்.

  ஏதேதோ இடக்கு செய்தவர்களின் செயல்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு எழுதிக் கொண்டிருந்த நீங்கள் எங்களைப் போன்ற விளையாட்டுப் பிள்ளைகளையும் கடந்து போக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

  மற்றபடி, இந்தப் பதிவுக்கு வரும் பின்னூட்டங்களை அப்படியே பிரசுரித்துக் கொண்டிருக்கிறேன். அவை அந்தந்தப் பதிவர்களின் சொந்தக் கருத்துக்களே. இங்கே பிரசுரிக்காமல் விட்டால், தனிப்பதிவிட்டுப் பிரச்சனையை பெரிதாக்கிவிட நான் காரணமாகக் கூடாதே என்ற ஒரே காரணத்தால்..

 17. மகேந்திரன்.பெ said...

  யக்கோஓஓஓஒவ்வ்வ்வ்வ் இதெல்லாம் என்ன சின்னப்புள்ளத்தனமா இல்லை? என்னமோ பன்னுங்க

 18. ☆ சிந்தாநதி said...

  ...!

 19. உண்மைத் தமிழன் said...

  பொன்ஸ் அக்கா பிரமாதம் போங்க.. ஜேம்ஸ்பாண்ட் படமெல்லாம் தோத்துப் போச்சு உங்க ராஜதந்திர நடவடிக்கையில.. இதுக்குத்தானா மூணு நாளா வலைத்தளம் அல்லலோகப்பட்டுச்சு..

  ஆக மொத்தம் எல்லாரும் கூடிப் பேசி 'நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன்.. நீ அழுகுற மாதிரி அழு..' என்று சொல்லாமல் சொல்லி ஒரு நாடகத்தை அரங்கேற்றிவிட்டீர்கள்.. வாழ்த்துக்கள்.

  இந்த நாடகத்திலிருந்து தெரிந்தது என்னன்னா.. அது, பொன்ஸ் அக்காவின் பரந்த, மன்னிக்கும், சகோதரத்துவமான மனப்பான்மை..

  'தல' பாலபாரதியின் ஜேம்ஸ்பாண்ட் சாகச துப்பறியும் வித்தைகள்,

  ஒரு பாதி வலைத் தளத்தினரின் அற்புதமான ஒற்றுமை..

  தகவல் தொடர்பில் அ.மு.க.வினரின் மின்னல் வேக பரிமாற்றத் தொடர்புகள்..

  என்னமோ போங்க.. பிச்சு உதறிட்டீங்க..

  மிஸ்டர் ஜெயராமன்.. நீங்க நிஜமாவே ரொம்ப லக் பண்ணிருக்கீங்க. அதான் எங்களை மாதிரி வீணாப் போனவங்களையெல்லாம் சுலபமா உங்களால சமாளிச்சு ஏமாத்த முடியாது.

  இதை மறந்திட்டு கொஞ்ச நாளைக்கு ஒழுங்கா 'ராமா', 'லஷ்மணனா'ன்னு வசனம் எழுதுங்க.. அப்புறம் போரடிச்சா வேற யாராவது ஒரு அக்கா பேர்ல 'எதையாவது' எழுதுங்க..

  மறுபடியும் எங்க 'தல' தேடோ தேடுன்னு தேடி 'கண்டு பிடிச்சிட்டோம்ல.. பிடிச்சிட்டோம்ல'ன்னு ஒரு பதிவைப் போட்டு எங்களை உசுப்பி விடுவாரு..

  'பிச்சை புகினும் கற்கை நன்றே' என்பதை 'எங்காளுக'தான் 'உங்காளுகளை'விட நல்லாத் தெரிஞ்சு வைச்சிருக்காங்க..

  அதுனால அப்பவும் "ஏதோ கஷ்டப்பட்டு கை வலிக்க எவ்ளோ 'யோசிச்சு' டைப் அடிச்சிருக்காரு பாருங்க.. பாவம்"ன்னு சொல்லி, அந்தக்காவும் பெருந்தன்மையா விட்டுத் தொலைச்சிருவாங்க..

  கிளைமாக்ஸல இதே மாதிரி அந்தக்காவும் முடிவுரையா ஒரு பதிவு போடுவாங்க..

  அதுலேயும் என்னை மாதிரி கேணப்பயலுக, கிறுக்குப் பயலுக, வேலையத்ததுகள்... இது மாதிரி எதையாவது கிறுக்கி வைப்போம். நீங்களும் படிச்சிட்டு.. மறுபடியும்..

  வாழ்க.. வளமுடன்..

 20. sivagnanamji(#16342789) said...

  நவம்பரில அப்படி; மார்ச் ஏப்ரலில் இப்படி ஏன்?
  ஓ அப்ப குளிர்காலம்..
  இப்ப கோடை ஆரம்பமோ....?

 21. பொன்ஸ்~~Poorna said...

  'உண்மைத்(?!)'தமிழன்,

  1. இந்தப் பதிவு மீள்பதியப்பட வில்லை. புதிய பின்னூட்டங்கள் மட்டுமே இப்போது பிரசுரிக்கப்படுகின்றன.
  2. இங்கு நடந்த "நாடகத்தின்" ஒரு பக்கத்தை நீங்கள் சொல்லாமல் விட்ட பகுதி: தேன்கூட்டில் அந்த போலிப் பதிவைப் பார்த்ததாக ஆரம்பத்தில் சொல்லிய நீங்கள், ஆதாரம் திரட்ட நாங்கள் அணுகிய பொழுது உதவி செய்யாமல் எப்படி வசதியாகக் கழன்று கொண்டீர்கள் என்பதையும் எழுதியிருந்தால், இங்கு பொருத்தமாக இருந்திருக்கும்.

  கடைசியாக, தயவு செய்து இனிமேல் என் பதிவுகளில் எந்தப் பின்னூட்டமும் இட வேண்டாம். இந்தப் பின்னூட்டத்துக்குப் பதில் சொல்வதானாலும் உங்கள் சொந்தப் பதிவில் எழுதுங்கள்...

 22. லக்கிலுக் said...

  உண்மைத்தமிழன்!

  நீங்க எப்பவுமே இப்படித்தானா?

  லிவிங் ஸ்மைலின் பதிவொன்றில் சம்பந்தா சம்பந்தமில்லாமல் என் பெயரை இழுத்து விட்டீர்கள். இப்போது இங்கும் ஏதோ குளறுபடி செய்துவருகிறீர்கள்.

  நான் உங்களுக்கு மின்னஞ்சலில் சொல்லிய ஆலோசனை இன்னமும் அப்படியே இருக்கிறது. என் ஆலோசனைக்கு எந்த மரியாதையும் நீங்கள் கொடுக்கவில்லை என்றே எடுத்துக் கொள்கிறேன் :-(

  விஷயம் என்னவென்று புரிந்துகொள்ள எப்போதுமே முயற்சி செய்யுங்கள். புரியாவிட்டால் ஒதுங்கி நில்லுங்கள். தயவுசெய்து குட்டையை குழப்பாதீர்கள்!

 23. மெய்ஞான விளக்கு said...

  கையில பேட்டு மட்டும் கிடச்சா நல்லா பூந்து விளாடுறீங்க...நடுவுல ஒய்ட் பந்தாக இருந்தாலும் ஒரு கவர் ட்ரைவ் இழுத்த மாதிரி உண்மையை விளாசிட்டீங்க.

  அடிக்கலாம்.அடிக்கலாம்.வில்லனை..ஆனா ஒரு காமெடியனையும் ஏதோ வில்லனைப்போல ட்ரை பண்ணார் அப்டீங்கறதுக்காக இந்த அடி அடிக்கவேனாம், உட்ருங்க ப்ளீஸ்..ரொம்ப பாவமா இருக்கு..