Monday, December 11, 2006

தடாலடியாகச் சுட்டவை

சிலபல யானைகளை ஆங்காங்கு சுதந்திரமாக உலவ விட்டிருக்கும் பொன்ஸ் பக்கங்களைப் புறக்கணித்து ஒரே ஒரு யானையைக் கட்டி வைத்திருக்கும் ஜிபோஸ்டில் யானையைப் பற்றிய எல்லா விவரங்களையும் அள்ளித் தெளித்த சிவஞானம்ஜிக்குக் கண்டனங்களுடன் இந்தப் பதிவை இட முடிவு செய்திருந்தேன். ஆனால், அவரே கடைசியாக யானையைக் கட்டி வைத்திருப்பதற்கான காரணத்தைச் சொன்னவுடன், அந்த யோசனை கைவிடப் படுகிறது. சிஜிக்கு நன்றிகளுடன், கௌதமின் கடைசி தடாலடியிலிருந்து சுட்டவை, எனக்குப் பிரியமான யானைகளுடன் :

யானை ஒரு பாலூட்டி;தாவர உண்ணி;நிலம்வாழ் விலங்குகளில் மிகப் பெரியது;வலிமை மிக்கது;நீண்டநாள் வாழக்கூடியது(சுமார் 70 ஆண்டுகள்)
யானைகளில்,சாவன்னா யானைகள்,ஆப்ரிக்க யானைகள்,ஆசியயானைகள் என மூன்று சிற்றினங்கள் உள்ளன.

யானையின் சினைக்காலம் 22 மாதங்கள். பாலூட்டிகளில் மிக நீண்ட சினைக்காலம் இதுதான். பொதுவாக யானைகள் ஒரு குட்டியையே ஈனுகின்றன;இரட்டைகள் பிறப்பது மிக அரிது.

யானைகளுக்கு மட்டுமே தும்பிக்கை உண்டு; தந்தங்கள், யானையின் கடைவாய்ப்பற்களின் நீட்சி ஆகும்; தந்தங்கள் 10 அடி வரை வளரக்கூடியவை;அவற்றின் எடை 90 கி.கி வரை இருக்கலாம்.தந்தங்கள் இல்லா யானை மக்னா எனப்படும்.

நீரளவு அதிகமுள்ள ஆற்றுப் படுகைப் பகுதிகளும்,அடர்ந்து வளர்ந்துள்ள புல்வெளிப்பகுதிகளும், யானை விரும்பிவாழும் பகுதிகள்; வறட்சிக்காலத்தில் நீர்நிலை மற்றும் உணவு நாடி இடம்பெயர்வதும் உண்டு.

இந்தியாவில், 35000 யானைகள் உள்ளதாகவும்,அதில் 5000 யானைகள் மனிதனால் பழக்கப்பட்டவை எனவும் கணக்கிடப்பட்டுள்ளது


அவை, 10 முதல் 70 யானைகள் சேர்ந்த கூட்டமாகத்தான் வாழ்க்கை நடத்துகின்றன;வயதான ஒரு பெண்யானை தலைமைதாங்கி வழிநடத்தும்.

ஒரே கூட்டத்தைச் சேர்ந்த பெண்யானைகளுடன் இனப்பெருக்கம் செய்ய அக்கூட்டத்தின் ஆண்யானைகளை தலைவி அனுமதிக்காது;ஆண்யானைகளுக்கு தந்தம் நன்கு வளர்ந்தவுடன்,அவை விரட்டிவிடப்படும்.
யானைகளின் பார்வை மந்தமானது ("மாக்கண்");செவித்திறனும் மோப்பசக்தித்திறனும் வியப்பளிக்கக் கூடிய அளவில் உள்ளன!ஆங்கிலேய
ராணுவம் இந்தியர்களின் யானைப்படைக்கு மிரண்டோடியதும் உண்டு

யானைகள் நன்கு நீந்தும் திறன் உடையவை;ஒருமணி நேரத்தில் 4 கி.மீ. நடக்கவும், 17 கி.மீ. ஓடவும்
கூடியவை.எடை 7000 கிலோ; ஒருநாளைக்கு 150 லிட்டர் தண்ணீர்
பருகும்;முக்கிய எதிரி புலிகள்தாம்!.

யானைகள் நன்கு நீந்தும் திறன்
உடையவை;ஒருமணி நேரத்தில் 4 கி.மீ. நடக்கவும், 17 கி.மீ. ஓடவும்
கூடியவை.எடை 7000 கிலோ; ஒருநாளைக்கு 150 லிட்டர் தண்ணீர்
பருகும்;முக்கிய எதிரி புலிகள்தாம்!

சங்கஇலக்கியம் உள்ளிட்ட பழம்பாடல்களில் யானைகள் பற்றிக் குறிப்புகள் உள்ளன.

பஞ்சபூதங்களால் ஆன இந்த
உலகமும் பரமாத்மாவும், பார்ப்பவர் கண்ணுக்கு எப்படித் தெரிந்தாலும்,
அவை இரண்டும் ஒன்றுதான் எனபதை அறிக:

"மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்"
(திருமூலர் திருமந்திரம்)
'யானை இருந்தாலும் ஆயிரம் பொன்;

இறந்தாலும் ஆயிரம் பொன்'.
ஆனால் அவற்றை ஒத்தைரூபாய்க்
காசுக்காக பிச்சை எடுக்கவிட்டானே
மணுசப்பய!உஸ்ஸ்ஸ்...அப்பாடா! ஒருவழியா துளசிகிட்டேயும் பொன்ஸ்ட்டேயுமிருந்து தப்பிச்சுட்டோம்னு நினைச்சா இந்த சங்கிலிப் பயல் தடுக்கப் பார்க்கிறானே...
(யானையார்)
9 comments:

 1. சிந்தாநதி said...

  வெட்டியாகச் சுட்டாலும் விவரமாக இருக்கிறது.

  யானை என்றாலே உங்களுக்கு லட்டு தானே!

 2. siva said...

  அசத்திட்டீங்க பொன்ஸ்!
  சுட்டவை-இப்பொழுதுதான் பார்த்தேன்.நன்றி!

 3. sivagnanamji(#16342789) said...

  என்ன? எனக்கு ஞானம் வேண்டாம்னு
  விட்டுட்டீங்களா? பின்னூட்டத்தில்
  SIVA மட்டும்தான் தெரியுது...

 4. G Gowtham said...

  பொன்ஸ், அழகாக ஜடை போட்டுக்கொண்டு சைக்கிள் சவாரி செய்யும் அந்த அனிமேஷன் ஆனையாரைக் காணுமே?!

 5. SK said...

  வெள்ளை யானை என்ற ஒன்று தாய்லாந்தில் இருப்பதாகப் படித்திருக்கிறேன்.
  அது பற்றி ஏதும் விவரங்கள்>>>>??

  ம்ம்ம்... அப்புறம் இந்த "தங்க யானை"ன்னு ஒண்ணு சொல்றாங்களே! :) அது...?

  ஜூட்!

 6. Dharumi said...

  ஆனை அளவு விவரங்கள் தந்தமைக்கு நன்றி...

 7. kekkE PikkuNi #25511630 said...

  சுட்டதெல்லாம் நல்லா இருந்தது. ஆப்பிரிக்க ஆனைகளையும் (வலிக்காமல்) சுட்டுத் தள்ளிய பிரபஞ்ச ஆனை ரசிக மன்றத் தலைவி வாழ்க.

  நம்மூர் ஆனை அழகுதாங்க:-) அதுவும் அம்மாவும் குழந்தையுமா...

 8. நாமக்கல் சிபி said...

  aha! arumai!

 9. Kumaran said...

  நல்ல தொகுப்பு பொன்ஸ்.