எச்சரிக்கை: இது ஒரு கும்மிப் பதிவு
ஆசிப் அண்ணாச்சி சென்னை வந்ததை ஒட்டி எல்லாரும் பதிவு போட்டுக் கொண்டிருக்கையில், தாஸ் மற்றும் கவிஞர் வா.மவைத் தொடர்ந்து, இன்றைய அண்ணாச்சி பதிவாக மலர்கிறது இந்த இடுகை.
நேற்று மதியம் அண்ணாச்சியிடமிருந்து போன் வந்தது..
'அட! அண்ணாச்சி, உங்களுக்கு எப்படி இந்த நம்பர் தெரியும்?' - இது நான்
'ஆமாம், பெரிய ரகசியம், அடப் போங்க, சென்னை வந்து இறங்கியதுமே தல எல்லா நம்பரையும் அனுப்பிட்டாரில்ல.. அவர் கடைல வேலை ஏதாச்சும் பார்க்கிறாரா, இல்லை இப்படி நம்பர் அனுப்புறது தான் முழுநேரத் தொழிலான்னு சந்தேகமா இருக்கு!'
'அண்ணாச்சி, தலைமைக் கழகத்தைச் சேர்ந்த நாங்களே அடக்கமா இருக்கும், இப்படி துபாய் பாகசவிலிருந்து வந்து அநியாயத்துக்கு ஓட்டுறீங்களே!'
'தலைமைக் கழகத்தைப் பேசாம இடம் மாத்திரலாம்னு இருக்கோம். தலையை துபாய்க்கு கடத்திட்டம்னு வைங்க, அப்புறம் எங்க சிவ்ஸ்டார் ஆப்பக் கடை தான் தலைமைக் கழகம், நீங்க எல்லாம் கிளைக் கழகம் தானே?'
'என்னது துபாய்க்கு கடத்துறதா? அப்படி ஏதாச்சும் நடந்தா, நாங்க சென்னை பாகசவிலிருந்து ஏர்போர்ட் முன்னால காலவரையற்ற டீக்குடிக்கும் போராட்டம் நடத்துவோம், நினைவிருக்கட்டும்!'
'ஆமாமாம், நீங்க எல்லாம் டீ குடிக்கத் தொடங்கினதும், அதைப் பார்த்து நம்ம தலையும் டீ எங்கன்னு கேட்டுகிட்டு அந்தப் பக்கம் போயிடுவாரு.. கொஞ்சம் கஷ்டம் தான்..'
'சரி, இத்தனை தூரம் பக்கத்துல வந்துட்டீங்க, எப்ப சந்திக்கலாம்?'
'வீட்டுக்கு வாங்களேன் எல்லாரும்..'
***************
மாலை வழி கேட்டுக் கொண்டு நான், பாலா, லக்கி என்று பேரணியாக புறப்பட்டோம்.
'அண்ணாச்சி, முத்தாலம்மன்னு இங்க கோயிலே இல்லையாமே! முத்து மாரியம்மன் தான் இருக்காம்! '
'அடப்பாவி மக்கா.. நெசமாவே கெளம்பி வந்துட்டீங்களா?! இருங்க, கேட்டு சொல்லுதேன்.. அந்தக் கோயில் தானாம்!'
*************
பதினைந்து நிமிடத்துக்குப் பிறகு :
'அண்ணாச்சி, இங்க ட்ரான்ஸ்பார்மரே காணமே! ஜங்க்ஷன் பாக்ஸ் தானே இருக்கு!'
'அதான்லே துபாய்ல ட்ரான்ஸ்பார்மர்.. அப்படியே திரும்புங்கடே!'
ஒருவழியாக வீட்டுக்குப் போய் உட்கார்ந்தவுடன் அண்ணாச்சி சொன்னது: 'ஆச்சரியமா இருக்கு! என்னைக் கூட நாலுபேர் இவ்வளவு தூரம் தேடிகிட்டு வந்து பார்க்குறாங்கங்கிறதை நம்பவே முடியலை!'
'எங்களால கூட தான் நம்பவே முடியலை.. நீங்க வழி சொன்ன அழகுக்கு சரியான வீட்டுக்கு வந்திருக்கமே!'
__________________
அப்புறம்?
அப்புறமென்ன, இந்த இடுகை போலவே அரைமணி மொக்கை போட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தோம்.
இத்துடன் இன்றைய பாகச கடமை இனிதே நிறைவு பெறுகிறது.. மற்றவை நாளை
Tuesday, July 10, 2007
அண்ணாச்சி சென்னை விஜயம்
Posted by பொன்ஸ்~~Poorna at 10:29 PM 6 comments
Monday, December 25, 2006
கொஞ்சம் ஓவர் தான்....
பீட்டாவுக்கு மாறியபின் புது டெம்ப்ளேட் முயற்சி... எனக்கு நல்லாத் தான் இருக்கு.. ஆனா உங்களுக்கு?
[பயப்படாதீங்க.. இந்தக் காடு வார்ப்புரு பொன்ஸ் பக்கங்களுக்குத் தான். அது திரட்டியில் சேராததால், இதைப் போட்டுச் சோதனை..
சுட்டவை வார்ப்புரு பழையபடி மாறிடும் சீக்கிரமே... :) ]
Posted by பொன்ஸ்~~Poorna at 11:30 PM 13 comments
Labels: சோதனை
Wednesday, November 01, 2006
சோதனை முடிவுகள்
பீட்டாவில் இந்த வலைப்பூவைத் தொடங்கி, படம் காட்டி, சுட்டு, வெட்டி, எல்லாம் செய்து பிரித்து மேய்ந்தது இரண்டு நண்பர்களுக்காக - ஒன்று நம்ம ஆல் இன் ஆல் அழகு சுந்தரி ஆவி அம்மணி, அப்புறம் பா.க.சவின் அகில உலகத் தல வரவணையான். இவர்கள் இருவரும் சமீபத்தில் பீட்டாவுக்குப் போய் அதனால் அவர்கள் பதிவே தமிழ்மணத்தில் தெரியாமல் போனதால் தான், நான் இந்தச் சோதனையை மேற்கொள்ள வேண்டியதாகிவிட்டது.
சோதனையின் படிகள் : (அதாங்க steps)
1. முதலில் ப்ளாக்கர் பீட்டாவில் புதுக் கணக்கு ஒன்று தொடங்கினேன். திரு கிவியனின் நல்லாசியுடன் அந்தக் கணக்கு நாளொரு பதிவும் பொழுதொரு பின்னூட்டமுமாக வளர்ந்தது.
2. மூன்று பதிவுகள் போட்டதும் தமிழ்மணத்தில் அடுத்த நாளே வந்துவிட்டது!
3. இடுகைகளை நானாக வகைப்படுத்தும் முன்னரே யாரோ உதவி(?!) விட, எல்லா இடுகைகளும் நான் பார்க்காத போதே வகைப்படுத்தப்பட்டு விட்டது.
4. சரி, முதல் சில இடுகைகள் தமிழ்மணத்தில் சேருவதில் ஒன்றும் வியப்பில்லை என்றெண்ணி, புதிதாக ஒரு வெட்டியாகச் சுட்டவை இட்டேன்.
5. அதைச் சோதித்ததில், அதுவும் அழகாக தமிழ்மணத்தில் லிஸ்ட் ஆகிறது! (தல வரவணையின் ரியாக்ஷன் இங்கே ;) )
6. அப்புறம், சரி, இது வேலைக்காகாது என்று முடிவெடுத்து வரவணை போட்டிருக்கும் அதே வார்ப்புருவுடன் அடுத்த வெட்டியாய்ச் சுட்டவற்றைக் களம் இறக்கினேன்.
7. ஆகா, தமிழ்மணம், "வாம்மா மின்னல்" என்றபடி இதையும் உள்வாங்கிக் கொள்ள, என்ன பண்ணுவதென்றே தெரியவில்லை..
8. கடைசியாக, லேபிள், மற்றும் பிற அமைப்புகளிலும் வரவணை பதிவை அப்படியே சுட்டுச் சோதித்தாலும், நம்ம பதிவு மட்டும் அழகா வந்துவிட்டது தமிழ்மணத்தில்.
9. இறுதி கட்டமாக இன்று காலை ஆவி அம்மணியைச் சோதிக்கச் சொல்லி மடலிட்டதில், அம்மணியின் பதிவும் வருகிறது!!!!!!!!!!! என்ன அமானுஷ்ய வேலையோ தெரியவில்லை!
ஆக, சோதனை முடிவு:
வரவணை பதிவு மட்டும் தமிழ்மணத்தில் தெரியாமல் போவதன் காரணங்கள்:
1. தான் உண்டு தன் போனுண்டு என்று கடலை வறுத்துக் கொண்டிருந்தவரைச் சும்மா இல்லாமல் லால் சேட்ஜியின் சோட்டா பச்சாவாக்கியது
2. அனானி பின்னூட்டம் போட்டு ஆட்டையைக் குழப்பிக் கொண்டிருப்பவர்களைப் பிடித்து பட்டம் கொடுத்தே கொல்வது..
3. சென்னை, மங்களூர், மதுரை என்று வலைப்பதிவர் கூட்டம் சேர்த்துக் கொண்டிருந்தவரைப் பற்றிய திரைக்குப்பின் பதிவுகள்..
4. கௌபாய் பற்றிய உண்மைகளை உரைத்துவிட்டு சிகரெட்டுக்காகச் சொன்னேன் என்று காலை வாரி விட்டது..
இன்னும் பாதிக்கப்பட்டவர்கள் தத்தம் காரணங்களைச் சொல்லலாம்...
5. இதெல்லாம் தவிர, முக்கியமாக, தமிழ்மணத்தின் இந்த அறிவிப்புப் பதிவில் இன்னும் முறையிடாமல் இருப்பது ;)
முடிவுரை:
ஆக, சோதனை ஓவர், இன்னும் ஒரு வாரத்தில் இந்தப் பதிவைத் தூக்கினாலும் தூக்கிவிடுவேன்.. இல்லாமல், வேறு ஏதாவது சுட்டுப் போடுவதும் நடக்கலாம்.. ;)
Posted by பொன்ஸ்~~Poorna at 11:33 PM 14 comments
Labels: சோதனை
சோதனை
சோதனை - தயவு செய்து இதைப் பார்க்காதீர்கள்.. சும்மா சோதனை..
Posted by பொன்ஸ்~~Poorna at 4:50 AM 14 comments
Labels: சோதனை