கடைக்குப் போகவும்
அம்பிகா, அணில், பாப்புலர், பிந்து போன்ற அப்பள பாக்கெட் எதையாவது வாங்கிக் கொள்ளவும்
பாக்கெட்டை ஜாக்கிரதையாகப் பிரிக்கவும்
வாணலியை எடுத்துக் கொள்ளவும்
வீட்டில் எண்ணெய் இருக்கிறதா என்று பார்க்கவும்.
இல்லை என்றால் மீண்டும் கடைக்குப் போய் வாங்கிவரவும்
அம்மாவிடம் சொல்லி, வாணலியில் எண்ணையைச் சுடவைத்துத் தரச் சொல்லவும்
எண்ணை சுட்டுவிட்டவுடன், அம்மாவை ஒவ்வொரு அப்பளமாக வாணலியில் போட்டு எடுத்துத் தரச் சொல்லவும்
நன்கு பொரித்து வந்தபின் எடுத்துவிடவும்
கிண்ணத்தில் வைத்து கீழே இரைக்காமல் சாப்பிடவும்
குறிப்பு: இந்தக் குறிப்புகளை பாலபாரதி போன்ற குழந்தைகள் ஆவலுடன் படிப்பதால், எண்ணை அடுப்பின் அருகில் சிறுவர்கள் தனியே நிற்பது தவறு என்ற அடிப்படையில் ஜாக்கிரதையாக எழுதப் பட்டுள்ளது.
Wednesday, November 22, 2006
அப்பளம் சுடுவது எப்படி?
Subscribe to:
Post Comments (Atom)
//அம்மாவிடம் சொல்லி, வாணலியில் எண்ணையைச் சுடவைத்துத் தரச் சொல்லவும்//
யக்கோவ்
அப்போ இது உங்க அனுபவம் இல்லய்யா ????
பொன்ஸ்,
நாம் ஒரு சிரீயஸான பதிவை ரெடி பண்ணி வைத்துட்டு, வெளியிடலாமுன்னு நினைச்சா.. விடுமாட்டிங்கிறீங்களே.. இது நியாமா??
குழந்தைகள் தினம் கொண்டாடிய இப்பொன்னான நவம்பர் மாதத்தில்,
குழந்தைகளையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கான சமையல் குறிப்புகளைக் கொடுத்த படகு அவர்களை குழந்தை பாலபாரதி அவர்களின் சார்பாக பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அப்பளமாம் அப்பளம்
அம்மா சுட்ட அப்பளம்
அண்ணனுக்கு ரெண்டு
அக்காவுக்கு ரெண்டு
குட்டித்தம்பிக்கு ஒண்ணு
மீதியெல்லாம் எனக்கு!
(ஒரு பாக்கெட்டில் 50 அப்பளங்களுக்கான பாடல்)
//நாம் ஒரு சிரீயஸான பதிவை ரெடி பண்ணி வைத்துட்டு//
ஓ! சிவபாலன் குக்கரில் சாதம் வேக வைப்பது எப்படி என்பது பற்றித்தானே!
நீயுமா மா?? அசத்துங்க...
சிவபாலன் சார் நாளைக்கு போடுங்க ஒரு சுனாமியால் இங்க ஒரு புயல் கரையை கடக்காம மையம் கொண்டு இருக்கு... இன்னாபா பூகம்பத்துக்கு அப்புறம் சுனாமின்னு கேட்டிருக்கேன். இங்க சுனாமிக்கு அப்புறம் புயல் அடிக்குது....
கொடுமைடா சாமீ!!!!!!!!!!!
நொறுங்கத்தின்றால் நூறு வயது...
ஆகவே அப்பளத்தை நொறுக்கி நொறுக்கி சாப்பிடவும்...
:)
//நீயுமா மா??//
வீ த பீப்புள், என்னைப் பார்த்து நீயுமா என்று ஏதோ கோயபல்ஸ் வேலை(இதுயாருங்க கோயபல்?) செய்தவளைக் கேட்பது போல் கேட்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பா.க.சவில் இருந்து கொண்டு எங்கள் தலைக்காக இது கூட செய்யாட்டா எப்படி? நீங்க அப்பளத்தை உடைச்சி சாப்புடுங்க பாலா! அவர் கிடக்குறார்..
:)))
இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லை....ம்ம்ம்ம்...
இந்த ரேஞ்சுல அடுத்து "சாப்பிடுவதற்கு முன்,சாப்பிட்ட பின் கை கழுவுவது எப்படி"...ன்னு விலா வாரியா ஒரு பதிவு போடலாம்முன்னு தோணுது.
நான் ஆம்லேட் லெவலுக்கு போயிட்டேன். இன்னுமென்னை குழந்தை என்று செல்லுவதை கண்டிக்கிறேன்.
அழௌதுடுவேன்.
'அப்பளம் சுடுவது எப்படி'ன்னு தலைப்பிலே சொல்லிட்டு அப்பளம் 'பொறிப்பது' பற்றி சொல்லியிருக்கீங்க. பொருள் குற்றம்.
- மாயவரத்தான் இன்ஸ்டிட்யூட் ஆப் கேட்டரிங் டெக்னாலஜி
பொன்ஸ் ,
பொறித்த அப்பளத்தைவிட, மைக்ரோவேவ் ஓ(அ)வனில் வைத்து பதமாக சுட்ட அப்பளம் தான் நல்லது, கொலஸ்ட்ராலை குறைக்கலாம் !
//'அப்பளம் சுடுவது எப்படி'ன்னு தலைப்பிலே சொல்லிட்டு அப்பளம் 'பொறிப்பது' பற்றி சொல்லியிருக்கீங்க. பொருள் குற்றம்.
//
வாங்கய்யா வாங்க..
காரணங்கள்:
1. வெட்டியாச் சுட்டவைன்னு வலைப்பூ வச்சிகிட்டு பொரித்தல்னு தலைப்பு வச்சாலும் சரியா வராதில்லையா?
2. இப்படிப் பொருட்குற்றத்தோட போடாவிட்டால், உங்கள் இன்ஸ்டிடுட்டில் இருந்து கவனம் பெற்றிருக்க முடியாதே..
கடைசியாக, மாயவரத்தான், உங்கள் பின்னூட்டத்தில் சொற்குற்றம் இருக்கிறது. பொரிக்கிறது
ஹிஹி
//நீயுமா என்று ஏதோ கோயபல்ஸ் வேலை(இதுயாருங்க கோயபல்?) செய்தவளைக் கேட்பது போல் கேட்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.//
அப்படியே டெக்னாலஜி என்னவென்று சொல்லி தந்த பொன்ஸ்க்கு நன்றி!!
ஒரு பொய்யை திரும்ப திரும்ப செய்தால் உண்மையாகிவிடும் என்பதே கோயபல்ஸ் தத்துவம்.
எந்த கடையிலிருந்து சுட்டது?..
//எந்த கடையிலிருந்து சுட்டது?.. //
நாடோடி, குழந்தைகளுக்கு இப்படித் தப்பும் தவறுமாகச் சொல்லிக் கொடுக்கக் கூடாது. அதனால் தான் கடைக்குப் போய் வாங்கிவரச் சொல்லுறோம்..
எனக்கு அப்பளம் இல்லியா பொன்ஸ்? சுட்ட அப்பளம் தான் சுவை அதிகம் :)
//நாடோடி, குழந்தைகளுக்கு இப்படித் தப்பும் தவறுமாகச் சொல்லிக் கொடுக்கக் கூடாது. அதனால் தான் கடைக்குப் போய் வாங்கிவரச் சொல்லுறோம்..//
கடைக்காரன் இன்னொரு கடையிலிருந்து சுட்டு வச்சிருந்தான் அது சுட்ட அப்பளமா இல்ல சுடாத அப்பளமா?.
ஆனாலும் இது ரொம்ப ஓவருங்க.
வலைப்பதிவே போடாத என்னை, மைக்ரோவேவில் அப்பளம் சுடுவது எப்படின்னு பதிவு போடவச்சிடுவீங்க போலிருக்கே? உங்க கூட்டத்துல சேர்ந்துக்கிட்ட இதப் போய் முதல் பதிவாப் போட்டேன்னா அப்புறம் யாரும் என் வலைப்பூவை பக்கமே வரமாட்டாங்களோன்ற பயத்தால மட்டுமே அந்த ஐடியாவைக் கைவிடுறேன்! :-D
பை த வே, மைக்ரோவேவில் அப்பளம் சுட்டு சாப்பிடறது நல்லது, தெரியுமா? சுத்தமா எண்ணையே உபயோகிக்க வேணாம்.
//பை த வே, மைக்ரோவேவில் அப்பளம் சுட்டு சாப்பிடறது நல்லது, தெரியுமா? சுத்தமா எண்ணையே உபயோகிக்க வேணாம்.//
ஹை! அவ்வளவு சீக்கிரம் விடுவோமா? மைக்ரோவேவ் செய்யும் முன் அப்பளத்தின் மேல் சிறிது எண்ணெய் தடவி பின் மைக்ரோவேவ் செய்தால் பொரித்த அப்பளம் டேஸ்ட் வரும். இல்லை என்றால் சுட்ட அப்பளம்தான்!
இப்போ என்ன செய்வீங்க, இப்போ என்ன செய்வீங்க!!!!
//அப்பளத்தின் மேல் சிறிது எண்ணெய் தடவி பின் மைக்ரோவேவ் செய்தால்//
மைக்ரோவேவ் அப்பளத்தில் கூட எண்ணெய் தடவவேண்டுமென்று ஒற்றைக்காலில் நின்றால் அவ்வப்போது உங்கள் கொலஸ்டிரால் லெவல் செக் செய்துகொள்ளவும். இப்ப என்ன செய்வீங்க.. இப்ப என்ன செய்வீங்க :D
ஒரு பிடி அப்பளம்
ஒரு பிடி சோறு
பொன்ஸ்,
தேவனின் அப்பள கச்சேரி கதைகள் படித்திருக்கிறீர்களா?...
இந்த கொடுமை வேற இருக்கா??? எனக்கு கோலம் மட்டும்தான் கண்ணுக்கு தெரிஞ்சதால அதுல கமெண்ட் போட்டுட்டு வீட்டுக்கு வந்து பார்த்தா இது...
என்ன கொடுமை சரவணன் இது???
// உங்கள் பின்னூட்டத்தில் சொற்குற்றம் இருக்கிறது. பொரிக்கிறது //
கிண்ணத்தில் வைத்து கீழே "இரைக்காமல்" சாப்பிடவும்
இது ?
அட பாவமே இத்தன நாள் என் கண்ணுக்கு படாம போச்சே இந்த பதிவு! இந்த அருமையான பதிவை எனக்கு காமிச்சு குடுத்த வலைச்கரம் வலைச்சரம் தூயா வாழ்க வாழ்க! பதிவின் தாக்கம் எனக்கு 1 மணி நேரம் நீடித்தது. அதன் பின்பே இந்த பின்னூட்டம்! பிரம்மிப்பா இருக்கு! வரப்போகும் தங்க மச்சான் கொடுத்து வச்சவர்! சரி இது "பூங்கா"வில வந்துச்சா?
அப்பளத்தை விட அப்பளப்பூ என்று ஒன்னு இருக்கு அது இதை விட சுவையாக இருக்கும், அப்படியே சாப்பிடலாம் சோறு கூட வேணாம் அதுக்கு!
பொருட்காட்சி/புத்தக காட்சிகளில் ஒரு பெரிய சைஸ் அப்பளம் விற்பாங்க அது ரொம்ப சுவையா இருக்கும்!
sutta appaLam, poriththa appaLam makimaiyaith therivikkum
pons
vaazhka.....
mmmmmmmm :((
அருமையான குறிப்பு. படிக்கும்போதே நாவில் நீர்சுரக்கிறது. இந்த வாரயிறுதியில் முயற்சித்து பார்க்கிறேன்.
நான்கூட மற்றவர்களிடமிருந்து அப்பளத்தை எப்படிச் சுடுவது என்றுதான் சொல்லப்போகிறீர்களோ என்று நினைத்தேன்.((-
சரிங்க..இதை அடுத்த வலைபதிவர் பட்டறையில நேரடி செயல்முறை விளக்கம் தருவீங்களா..
நிறைய பேர அப்பளம் சுட வைக்கலாம்,,,:))))
/கிண்ணத்தில் வைத்து கீழே இரைக்காமல் சாப்பிடவும்/
இது..எனக்கு ரொம்ப பிடிக்காத விசயம் :(
நாகர்கோயில் பகுதியில் கிழங்கு அப்பளம் என்று விற்கிறார்கள். மரவள்ளிக்கிழங்கில் அப்பளம் இட்டு பாயில் உலர்த்துவதால், கோரைப்பாய் தடம் அப்பளத்தில் பதிந்திருக்கும். பொரித்துச் சாப்பிட்டால்... லேஸ் போன்ற அந்நிய சிப்ஸ், ஹாட்சிப்ஸில் கிடைக்கும் ரிப்பிள்ஸ் சிப்ஸ் - எல்லாவற்றையும் விட செம டேஸ்ட்டாக இருக்கும்.
மற்ற அப்பளங்கள் கிண்ணத்தில் வைத்து இறைக்காமல் சாப்பிட உகந்தது அல்ல... இதுதான் 100 சதவிகிதம் அப்படியே சாப்பிட ஏற்றது.
பாலபாரதிக்கு சிந்தாநதியிடம் சொல்லி கிழங்கு அப்பளம் வாங்கிக்கொடுக்கச் சொல்லவும்.
பி.கு.: சென்னையில் கிடைக்கும் போலி கிழங்கு அப்பளத்தை வாங்கி ஏமாற வேண்டாம்!