♠ யெஸ்.பாலபாரதி ♠
இதற்காகத் தான் சொன்னேன்
இரவு நேரங்களில்
மொட்டை மாடிக்கு வராதே என
இப்போது பார்
நட்சத்திரங்கள் வெட்கித்
தற்கொலை செய்து கொள்கின்றன.
வரவனையான்:
மாம்ஸ்!
மொட்டை மாடியிலிரூந்து
குதித்து தற்கொலை
செய்து கொண்டிருக்கலாம்
நீயும்..
ஆசிப் மீரான்:
இதனால் தான் சொன்னேன்
நீ பகலிலும் வெளியே வராதே என
கோபமாகிச் சூரியன்
என்னைச் சுட்டெரிக்கிறான்!
ஒண்ணுமில்லை, ரெண்டு நாள் முன்னால இவங்க எல்லாம் வச்சிருந்த கூகிள் சொந்த நிலை (அதாங்க, பர்சனலைஸ்டு ஸ்டேடஸ் மெசெஜ்!).
வரவனையான் காலையில் எழுதியிருந்ததையும் நினைவில் வைத்துக் கொண்டு தங்கவேலுவின் பதிவைப் படிச்சி பாருங்க.. அதில் எது பொய், எது கற்பனைன்னு தெளிவா புரியும்.. ஹி ஹி..
(ஏதோ நம்மாலானது.. குறிச் சொல்லைக் கவனிக்க... :) )
பொன்ஸ் உண்மையில் இந்த ஸ்டேடஸ் மெஸேஜ் கவிதைக்கு நான் எழுதிய பதில் கவிதை உதுதான் -
இதற்காகத் தான் சொன்னேன்
இரவு நேரங்களில்
மொட்டை மாடிக்கு வராதே என
இப்போது பார்
பக்கத்து வீட்டு குழந்தைகளுக்கு
உன்னை பூச்சாண்டியாய் காட்டி
சோறுட்டுகிறார்கள்
என்னோட 'சொந்தக் கவுஜை நிலை' பாபாவுக்காக எழுதியது. அதனை ஊருக்கு வெளிச்சப்படுத்திய யானைத்தலைவியை வன்மையாகக் கண்டிக்கிறேன்.(மொத்த கவுஜையையும் போட வேண்டியதுதானே?!!)
சாத்தான்குளத்தான்