முத்தமிழ் குழுமம் பற்றி நண்பர்கள் பலருக்கும் தெரிந்திருக்கும். நண்பர் மஞ்சூர் ராசா, மற்றும் நம்பிக்கை குழுமத்தின் பாசிடிவ் ராமா, முதலியோர் இணைந்து நடத்தும் யுனித்தமிழ் கூகிள் குழுமம்.
பதிவெழுதத் தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே முத்தமிழ்க் குழுமத்தில் இணைய எனக்கும் அழைப்பு வந்தது. நண்பர் மஞ்சூர் ராசா புதுப் பதிவர்களை அவ்வப்போது பார்த்து இது போல் அழைப்பு அனுப்பி விடுகிறார். குழுமத்தில் சேர்ந்த புதிதில் அங்கே நடக்கும் விவாதங்களை வெறுமே படிப்பதோடு சரி. நமது ரசிகவ் ஞானியார், கீதா சாம்பசிவம், செல்வன், ஸ்ரீஷிவ், நாமக்கல்லார் எல்லாரும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த முத்தமிழ்க் குழுமத்தின் அமைதிப்படையிலேயே என்னுடைய முதல் மூன்று மாதம் கழிந்தது.
அப்புறம் நமது நண்பர் அசுரன் மற்றும் நண்பர் ராஜாவனஜ்ஜும் வந்து சேர்ந்த பின்னர் கொஞ்சம் விறுவிறுப்பான விவாதங்களுடன் பொறிபறந்து கொண்டிருந்தபோதும் முத்தமிழ்க் குழுமத்தில் நான் வெறும் அமைதிப்படை உறுப்பினர் தான். சில சிறுவர் கதைகளைத் தாண்டி எதுவும் எழுதவில்லை அங்கே.
ஆனால், முத்தமிழ்க் குழுமம் இந்த ஜனவரி 20ஆம் தேதியன்று தான் முதல் ஆண்டு முடிவைக் கொண்டாடுகிறது என்பது மிக மிக ஆச்சரியமான தகவல் எனக்கு. ஒரு வருடத்தில் எத்தனை உறுப்பினர்கள், மடல்கள், விவாதங்கள்!!! வியப்பு அகலும் முன்னரே அவர்களின் பிறந்தநாள் விழாக் கொண்டாட்டங்கள் நல்லதொரு அறிவிப்பாக வந்தது.
இதோ முத்தமிழின் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களின் அறிவிப்பு:
* இந்தப் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் முத்தமிழ் குழுமத்தில் கடந்த ஒரு வருடத்தில் எழுதப்பட்ட முக்கிய கட்டுரைகள் முத்தமிழ் வலைப்பதிவிலும், நண்பர் செல்வனின் வலைப்பதிவிலும் தொடர்ந்து இடப்படுகிறது. இதன்மூலம் பல படைப்பாளர்களுக்கு வலைப்பதிவுகளின் அறிமுகமும் அவர்களின் படைப்புகள் பரவலாக அறியப்படவும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதுமட்டுமல்லாது முக்கிய படைப்புகள் விக்கிப்பீடியாவிலும் இணைக்கப்படும்.
* ஆண்டுவிழாவை ஒட்டி, புதுமையான கட்டுரை , கவிதை மற்றும் சிறுகதை போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டிக்காக அனுப்பப்படும் கவிதை, கட்டுரை மற்றும் சிறுகதைகளுக்கு தலைப்பு எதுவும் கிடையாது, தமிழ்மொழி மற்றும் தமிழ்நாட்டைப்பற்றி இருந்தாலே போதுமானது; சொந்த அனுபவங்களையும் கூட எழுதலாம். 400 வார்த்தைகளுக்கு மிகாத படைப்புகள் படைப்புகள் முத்தமிழ் குழுமத்திற்கு வந்து சேரவேண்டிய கடைசி நாள் பிப்ரவரி 10, 2007. படைப்புகளில் ஆங்கில வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது.
படைப்புகளை muththamiz@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிவையுங்கள்
சிறந்த படைப்புகளுக்கு சிறப்பான பரிசுகள் காத்துக்கொண்டிருக்கின்றன.
* மிக மிக முக்கியமான அடுத்த அறிவிப்பு, தமிழ்நாட்டு நூலகங்களை மேம்படுத்துதல். அதாவது தமிழ்நாட்டிலுள்ள சில கிராம பள்ளிக்கூடங்களுக்கு நூலகங்கள் அமைத்து தரலாம் என முத்தமிழ்க் குழுமம் முடிவுசெய்துள்ளது. நண்பர் உமாநாத் (விழியன்) அவர்கள் பொறுப்பில் நடக்க இருக்கும் இந்த நல்ல காரியத்திற்கு புத்தகங்களாகவோ அல்லது பணமாகவோ அனுப்பி உதவ விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:
Citibank Account
Bangalore - Koramangala
A/c No. 5637000804 - Umanath
Ph numbers : 09886217301/ 09894110534 (Tn number)
Mailing Address
S.Umanath
Bluestar Infotech Limited
#7, 18th Main Road,
7th Block
Koramangala -
Bangalore - 560095
ஆக, போட்டிகள், பரிசுகள், கிராமப்புற பிள்ளைகளின் படிப்புக்கு உதவ ஒரு வாய்ப்பு... வாருங்கள் நாமும் சேர்ந்து முத்தமிழின் ஆண்டுவிழாவைக் கொண்டாடி சிறப்பாக்க உதவுவோம்..
முத்தமிழ்க் குழுமத்தின் முதல் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்களுடன், இந்த அறிவிப்பை வெளியிட அமைதிப்படை உறுப்பினரான எனக்கும் வாய்ப்பளித்தமைக்கும் என் நன்றிகள்.. இன்னும் பல பிறந்த நாள் கண்டு சிறக்கட்டும் முத்தமிழ்க் குழுமம்.
அன்பு நண்பரே!
நான் முத்தமிழ்க் குழுமத்தில் உங்களைப் போன்று உறுப்பினன்தான்.
அதிக மடல்கள் இருப்பதால் அப்படி ஒரு தோற்றம் வந்தது போலும்.
மொத்தப் பெருமையும் மஞ்சூர் ராசாவுக்கே சேரும்!
நன்றி!