Friday, March 16, 2007

ஆண்டுவிழாக் கொண்டாட்டங்கள்

கவிதைப் போட்டி:

1. இயல்கவிதை - வாசிக்க
வழமையான வடிவம் தான். படைப்பாளி தன் கவிதையை யுனித்தமிழில்(Unicode) தட்டச்சு செய்து அனுப்பவேண்டும்.

2. இசைக்கவிதை - பாட
சில பாடல்கள் இசையோடு கேட்க இன்பம் கூட்டும். அவ்வகைக் கவிதைகளுகான (பாடல்களுக்கான) பிரிவு இது. படைக்கப்பட்ட கவிதை பாடலாக இசையோடு பதியப்பட்டு அனுப்பப்படவேண்டும்.

3. ஒலிக்கவிதை - கேட்க

சில கவிதைகள் படைப்பாளியின் உணர்வோடு கேட்க நம்மை உலுக்கியெடுக்கும்.அவ்வகைக் கவிதைகளுக்கான பகுதி இது. படைக்கப்பட்ட கவிதை படைப்பாளியின் குரலில் பதியப்பட்டு அனுப்பப்படவேண்டும்.

4. படக்கவிதை - பார்க்க

புகைப்படங்களுடக்கான கவிதை. பார்வைக்கு வைக்கப்படும் சில புகைப்படங்களுக்குப் படைப்பாளியின் கற்பனை வடிக்கும் கவிதையைத் தரவேண்டும்.

5. காட்சிக்கவிதை - இயக்க

இது ஒலி - ஒளி கவிதை. கவிதையைக் காட்சியாக்கித் தரவேண்டும்.

விதிமுறைகள்:

1. எந்தப் பிரிவுக்கும் தலைப்பு கிடையாது. எந்தத் தலைப்பின் கீழ் எழுதுவது என்பது படைப்பாளியின் விருப்பத்திற்கு விடப்படுகிறது.

2. ஒவ்வொரு பிரிவின் கீழும் ஒரு படைப்பாளி அதிகபட்சமாக நான்கு படைப்புகளை மட்டுமே அனுப்பலாம்.

3.படக்கவிதைக்கான படைப்பை அனுப்புவோர், எந்த படத்திற்கான கவிதை எனக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டுகிறோம்.அப்படிக் குறிப்பிடப்படாத படைப்புகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா.

4. படைப்பு முழுக்க முழுக்கப் புதியதாய் இருக்க வேண்டும். முன்னரே எந்த ஒரு ஊடகத்திலும் வெளிவந்த படைப்பாய் இருத்தல் கூடாது. முடிவுகள் அறிவிக்கப்படும்வரை எங்கும் படைப்பை பிரசுரித்தல் கூடாது. முடிவுகள் வெளியானதும் தாங்கள் தங்கள் கவிதைகளைப் பிரசுரம் செய்துக் கொள்ளலாம்.

5. படைப்பாளியின் பெயர், தொடர்பு எண், முகவரி ஆகியவை ஒவ்வொரு படைப்பு அனுப்பப்படும் போதும் குறிப்பிடப்பட வேண்டும். அவை எக்காரணம் கொண்டும் எங்கும் பொதுவில் வைக்கப்பட மாட்டாது என்று உறுதி அளிக்கின்றோம்.

6. படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 14-04-2007 (சனிக்கிழமை ஏப்ரல் 14, 2007 - சித்திரை மாத முதல்நாள்) இந்திய நேரம் இரவு 12.00 மணிக்குள்.

7. போட்டிக்கு வரும் படைப்புகளைப் போட்டி முடிந்ததும் அன்புடன் குழுமத்தில் பிரசுரிக்கும் அனுமதியை இப்போதே பெற்றுக் கொள்கிறோம்.

8. படைப்பை anbudan.pootti@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே அனுப்ப வேண்டுகிறோம். அன்புடன் குழுமத்துக்கு நேரடியாய் அனுப்பப்படும் படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

9. ஒலிக்கவிதை, இசைக்கவிதை, காட்சிக்கவிதை போன்றவற்றில் கோப்பின் பருமளவு (file size) அதிகமாகும் பட்சத்தில் ஏதாவது ஒரு கோப்பு மாற்று (File Share) இணைய தளத்தில் ஏற்றிவிட்டு அதைத் தரவிறக்கத் தேவையான (link) சுட்டியை மட்டும் anbudan.pootti@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் போதுமானது.

10. நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.


எங்கயோ படிச்சா மாதிரி இருக்குங்களா? இது பொன்ஸ் பக்கங்கள் ஆண்டுவிழாவுக்காக இல்லீங்க, நம்ம அன்புடன் குழுமத்தின் ஆண்டுவிழா போட்டி அறிவிப்பு :))

மேலும் தகவலுக்கு அன்புடனுக்கே போய்ப் பாருங்க :)

Tuesday, March 06, 2007

யானையாரின் அதிரடி ரிப்போர்ட்!

♠ யெஸ்.பாலபாரதி ♠


இதற்காகத் தான் சொன்னேன்
இரவு நேரங்களில்
மொட்டை மாடிக்கு வராதே என
இப்போது பார்
நட்சத்திரங்கள் வெட்கித்
தற்கொலை செய்து கொள்கின்றன.

வரவனையான்:


மாம்ஸ்!
மொட்டை மாடியிலிரூந்து
குதித்து தற்கொலை
செய்து கொண்டிருக்கலாம்
நீயும்..


ஆசிப் மீரான்:


இதனால் தான் சொன்னேன்
நீ பகலிலும் வெளியே வராதே என
கோபமாகிச் சூரியன்
என்னைச் சுட்டெரிக்கிறான்!


ஒண்ணுமில்லை, ரெண்டு நாள் முன்னால இவங்க எல்லாம் வச்சிருந்த கூகிள் சொந்த நிலை (அதாங்க, பர்சனலைஸ்டு ஸ்டேடஸ் மெசெஜ்!).

வரவனையான் காலையில் எழுதியிருந்ததையும் நினைவில் வைத்துக் கொண்டு தங்கவேலுவின் பதிவைப் படிச்சி பாருங்க.. அதில் எது பொய், எது கற்பனைன்னு தெளிவா புரியும்.. ஹி ஹி..

(ஏதோ நம்மாலானது.. குறிச் சொல்லைக் கவனிக்க... :) )