Friday, November 24, 2006

கணினி ஜோக்ஸ்



*********************************************



*********************************************



*********************************************



*********************************************



*********************************************

மும்பை ஓட்டுனர் உரிமத் தேர்வு

செய்திக்குச் சுட்டி இங்கே..

Wednesday, November 22, 2006

கோலம் போடுவது இப்படி..



திரு வைத்த புள்ளிக்கு இதோ கோலம்..

சகா திரு சரிபார்க்கக் காத்திருக்கிறது..

அப்பளம் சுடுவது எப்படி?

கடைக்குப் போகவும்

அம்பிகா, அணில், பாப்புலர், பிந்து போன்ற அப்பள பாக்கெட் எதையாவது வாங்கிக் கொள்ளவும்



பாக்கெட்டை ஜாக்கிரதையாகப் பிரிக்கவும்




வாணலியை எடுத்துக் கொள்ளவும்

வீட்டில் எண்ணெய் இருக்கிறதா என்று பார்க்கவும்.



இல்லை என்றால் மீண்டும் கடைக்குப் போய் வாங்கிவரவும்

அம்மாவிடம் சொல்லி, வாணலியில் எண்ணையைச் சுடவைத்துத் தரச் சொல்லவும்

எண்ணை சுட்டுவிட்டவுடன், அம்மாவை ஒவ்வொரு அப்பளமாக வாணலியில் போட்டு எடுத்துத் தரச் சொல்லவும்

நன்கு பொரித்து வந்தபின் எடுத்துவிடவும்

கிண்ணத்தில் வைத்து கீழே இரைக்காமல் சாப்பிடவும்



குறிப்பு: இந்தக் குறிப்புகளை பாலபாரதி போன்ற குழந்தைகள் ஆவலுடன் படிப்பதால், எண்ணை அடுப்பின் அருகில் சிறுவர்கள் தனியே நிற்பது தவறு என்ற அடிப்படையில் ஜாக்கிரதையாக எழுதப் பட்டுள்ளது.

Tuesday, November 21, 2006

நேற்று இன்று நாளை

நேற்று:

//இவ்வாறு முகத்தை மூடிக்கொண்டு இவர்கள் ப்ளாக் ஏன் எழுதுகிறார்கள் என்பது புரியவில்லை?
தங்கள் கருத்துகளில் நேர்மை இல்லாதவர்கள் என்று சொன்னால் ரொம்பவும் காட்டமாக இருக்கிறது. ஆனால், உண்மை அதுதானோ?//

இன்று:

// போட்டோ போட வேண்டும் என்று ஜயராமன் சொன்னான் என்று சொல்லி என் கருத்தை கொச்சைப்படுத்தி அதை நிராகரிக்க எளிதாக்கவேண்டாம்.

தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு - புனைப்பெயராக இருந்தால் நிஜப்பெயரை சொல்லிக்கொண்டு - பதிவிடுவதே சிறந்தது என்பதே என் கருத்து.//

நாளை(???):

//நிஜப்பெயர் சொல்லிப் பதிவிடவேண்டும் என்று ஜயராமன் சொன்னார் என்று சொல்லி என்னைக் கொச்சைப் படுத்த வேண்டாம்.

எழுதுபவர் பெயரில்லாமலே கூட எழுதலாம். வால்மீகிக்குக் கூட அது தான் இயற்பெயர் என்று நமக்குத் தெரியுமா என்ன? // ;)


குறிப்பு: இங்கே எந்தப் பதிவரையும் தனி மனிதத் தாக்குதல் செய்யவில்லை. கருத்துகள் மட்டுமே சேமிக்கப் பட்டிருக்கிறது

Sunday, November 19, 2006

வலைபதிவர் கூட்டம் - கொறிக்க..

சென்னபட்டினத்தில் செய்தியறிக்கை சமர்ப்பித்துவிட்டாலும், எல்லாவற்றையும் அங்கே சொல்ல முடியாமையால்:

  • வரவணையான் கருப்புக் கண்ணாடியுடன் உட்கார்ந்திருந்ததைப் பார்த்து "தூத்துக்குடியிலும் மெட்ராஸ் ஐ போலும்" என்று நினைத்துக் கேட்டால், காலையில் சரவணா ஸ்டோர்ஸில் வாங்கிய புத்தம் புது கண்ணாடியாம்! (ஸ்டைலாம்!)

  • உண்மையான மெட்ராஸ் ஐயுடன் கண் நிறத்துக்கு மேட்சிங்காக சிகப்புச் சட்டையுடன் வந்திருந்த வினையூக்கி பாவம், அந்தக் கண்ணுடன் காலை பரிட்சை வேறு எழுதிவிட்டு வந்திருந்தாராம்!

  • "நான் இதுவரைக்கும் உருப்படியான பதிவே போட்டதில்லை" என்ற முக்கியமான பிரகடனத்தை சமீபத்தில் நூறு பதிவுகள் கண்டவரும், பா.க.ச.வின் தலைவருமான பாலபாரதி அறிவித்தார். ;)

  • "தமிழ் நதி தான் தமிழ் சசியா?" என்று யாரோ ஒரு அனானி கேட்டதாகச் சொன்ன தமிழ்நதி, "தமிழ் சசி யார்?" என்று கேட்டுத் தெரிந்து கொண்டார்.

  • தன் அண்ணன் மகளுடன் வந்திருப்பதாக தமிழ் நதி கூற, எனக்கு ஒரே ஆச்சரியம். இருவரும் கிட்டத்தட்ட சமவயது தோழிகள் மாதிரி தான் இருந்தார்கள்!

  • பூந்தளிர், கோகுலம், அம்புலிமாமா, போன்ற சிறுவர் புத்தகங்களை இன்றைய குழந்தைகளும் படிக்கிறார்களா? என்று ரோசாவசந்த் கேட்டதற்கு, "சுட்டிவிகடன் நல்லா போகுது. நானும் கூடப் படிக்கிறேனே" என்று அதிர்ச்சி கொடுத்தேன் ;)

  • மரவண்டு கணேஷ் சமீபகாலமாக பாலபாரதி பதிவை மட்டும் படிக்கிறார் போலும், பாலாவின் பதிவில் பின்னூட்டம் இடுபவர்களை எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார். அகிலன் முதலான ஈழப் பதிவர்களைத் தேன்கூட்டில் பதிந்து கொள்ளச் சொல்லி சிபாரிசு செய்தார்.

  • விக்கி blogcampக்குக்காக வாங்கிய டீ சர்ட்டை அணிந்து வந்தார். தமிழ்வலைப் பதிவர்களுக்கும் அப்படி ஒரு சட்டை ஏற்பாடு செய்தால், குங்குமம், சென்னை சில்க்ஸ் விளம்பரங்களுடன் செய்து பார்க்கலாம் என்று தோன்றியது

  • பார்வதி மினி ஹாலில் இருந்த சின்ன பிள்ளையார் ஒன்றை யாருக்கும் தெரியாமல் சுட முடியுமா என்ற கேள்வி எழுந்த போது, அப்படிச் செய்தால், அவர்களிடம் பாலபாரதி செல்பேசி எண் தான் இருக்கிறது என்ற விவரம் நினைவுக்கு வந்ததால், பெரிய பிள்ளையாரையே எடுப்பது என்று முடிவாயிற்று. பாலா ரொம்பவும் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

  • மரபூரார் பேச்சு மும்முரத்தில் தன் தொப்பியை விட்டுவிட்டுப் போய் வீட்டிலிருந்து தொலைபேசி அதைப் பற்றிக் கேட்டுக் கொண்டார்.

  • சந்திப்பில் கலந்து கொள்ளாமலே அதிகம் பேசப்பட்ட இருவர் தருமியும் வஜ்ராவும் - தருமியில் சமீபத்தைய பதிவில் அவர்களது விவாதத்திற்காக. கிட்டத் தட்ட அதே மாதிரியான அனல் பறக்கும் விவாதம் பாலபாரதிக்கும் ஓகை நடராஜனுக்குமிடையில் நடந்தது - தருமி பதிவு போல் இல்லாமல், தமிழில்..!

  • வந்தோமா, வலைபதிவர் சங்கம் பற்றிப் பேசினோமா, போனோமா என்றிருந்தார் டிபிஆர் ஜோசப் அவர்கள். நேற்று அவருக்கு நிறைய வேலை போலும்.

  • சீக்கிரம் வெளியேறினவர்களில் மற்றொருவர் தமிழ்நதி. அவரின் அண்ணன் மகளுக்கு இந்த வலைப்பதிவு விவாதங்கள் சீக்கிரமே போரடிக்கத் தொடங்கிவிட்டது.

  • உதயசூரியன் சின்னம் போட்ட சன்ஃபீஸ்ட் பிஸ்கெட் வழங்கி பாலபாரதி தம் ஒரு கட்சி சார்பைக் காட்டிக் கொண்டார். (அநேகமாக இந்தப் பிஸ்கெட்டை அதிகம் ரசித்துச் சாப்பிட்டது முத்து தமிழினி, வலையுலக சின்னக் குத்தூசி லக்கிலுக் [நன்றி: பாலபாரதி], வரவணை முதலியோர்) ;)



திருமணத்திற்குத் தயாராகும் நட்சத்திரம் அருள்குமார்

  • தங்கவேல் முன்னமே வாக்குக் கொடுத்தபடி அதிக அளவிலான தேநீர் குடித்தார். கடைசியாகக் கிடைத்த தகவலின் படி அவர் கையில் சுமார் ஆறு காலி கப்கள் இருந்தன.

  • நெடுநாளைய வலைப்பதிவு வாசகர் பூபாலன், முத்து (தமிழினி) எது சொன்னாலும் கேட்கமாட்டேன் (என்ற உதாரணத்தைக் கூறி) தனிமனிதத் தாக்குதலில் ஈடுபட்டார். இருப்பினும் முத்து எதுவுமே சொல்லாமல் தப்பித்து வந்துவிட்டார்.

  • சந்திப்பு முழுவதும் அமைதியாக இருந்தவர்கள் மிதக்கும்வெளி சுகுணா திவாகர், சின்னக் குத்தூசி லக்கிலுக் மற்றும் வினையூக்கி. சாதீயம் குறித்த விவாதத்தின் போது மட்டும் முன்னிருக்கை தேடிப் போய் உட்கார்ந்து கொண்டார் லக்கிலுக். ஆனாலும் எதுவும் பேசவில்லை.

  • ஏதோ ஒரு பதிவில் "வயதானவர்களுடன் எந்தக் கொடுக்கல் வாங்கலும் வைத்துக் கொள்வதில்லை" என்று நான் சொல்லி இருந்ததைப் படித்துவிட்டு சிவஞானம்ஜி அதைப் பற்றியே கேட்டுக் கொண்டிருந்தார். "சிஜி, நீங்க எல்லாம் வயதானவர்கள் லிஸ்ட்லயே வரமாட்டீங்க!" என்று சொல்லிக் குளிர்விக்க முயன்றேன் :)) (ஐஸ் ஐஸ் பேபி :) )

  • அருள் சாதீயம் பற்றிய விவாதத்தில் தேநீர்க் கோப்பையை வைத்து ஏதோ விளக்க முயற்சித்தார். அதைப் பார்த்தவுடன் எனக்கும் செந்திலுக்கும் அடுத்த தேநீர் குடிக்கும் யோசனை வந்துவிட்டது.

  • இறுதியாக எல்லாரும் கிளம்பியபின்னும் பேசிக் கொண்டிருந்துவிட்டுக் கிளம்பினர் அருளும் வீ த பீப்பிளும். அதற்குள் பார்வதி ஹாலைப் பூட்டியாகிவிட்டது ;)

Friday, November 17, 2006

ஒரு மறு ஒலிபரப்பு

சென்னை வலைபதிவர்களே..



தற்காலிகமாக நிறுத்தி வையுங்கள் உங்கள்
புதுப் பதிவுகளை / பின்னூட்டங்களை / படிப்பதை ..



கணினியுடனும் கீபோர்டுடனும் பேசியது போதும்!


சந்திப்போம், நேரில்!!!

பதிவுகள் கட்டுரைகளாக, பின்னூட்டங்கள் விவாதங்களாக,
பழகியவர்களை / பார்வையில் புதியவர்களைப் பார்க்க, பேச, மகிழ..
ஒரு கோப்பை தேநீரோடு..


இயற்கை சூழ்நிலையையும் இழக்காமல், மழையின் மகிழ்ச்சியையும் குலைக்காமல், செடி கொடி சூழ் அழகிய வீட்டின் கூடத்தில்



ஞாயிற்றுக் கிழமை - மாலை நான்கு மணிக்கு சந்திப்போம்..

உங்கள் அனைவரின் வருகையையும் எதிர்பார்க்கும்



சென்னை பட்டின நண்பர்கள்....
(முழுமையான விலாசத்துக்குப் பார்க்க பாலபாரதியின் பதிவு)
சில நண்பர்களின் தொடர் கேள்விகளுக்காக:
1. அனுமதி இலவசம்.
2. அனைவருக்குமான அழைப்பு இது. சென்னை வலைபதிவர்கள் எல்லாரும் வர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்
2. இரண்டாவது, மூன்றாவது டீ கண்டிப்பாக உண்டு - ஸ்டாக் உள்ளவரை ;)

Wednesday, November 01, 2006

சோதனை முடிவுகள்

பீட்டாவில் இந்த வலைப்பூவைத் தொடங்கி, படம் காட்டி, சுட்டு, வெட்டி, எல்லாம் செய்து பிரித்து மேய்ந்தது இரண்டு நண்பர்களுக்காக - ஒன்று நம்ம ஆல் இன் ஆல் அழகு சுந்தரி ஆவி அம்மணி, அப்புறம் பா.க.சவின் அகில உலகத் தல வரவணையான். இவர்கள் இருவரும் சமீபத்தில் பீட்டாவுக்குப் போய் அதனால் அவர்கள் பதிவே தமிழ்மணத்தில் தெரியாமல் போனதால் தான், நான் இந்தச் சோதனையை மேற்கொள்ள வேண்டியதாகிவிட்டது.

சோதனையின் படிகள் : (அதாங்க steps)

1. முதலில் ப்ளாக்கர் பீட்டாவில் புதுக் கணக்கு ஒன்று தொடங்கினேன். திரு கிவியனின் நல்லாசியுடன் அந்தக் கணக்கு நாளொரு பதிவும் பொழுதொரு பின்னூட்டமுமாக வளர்ந்தது.

2. மூன்று பதிவுகள் போட்டதும் தமிழ்மணத்தில் அடுத்த நாளே வந்துவிட்டது!

3. இடுகைகளை நானாக வகைப்படுத்தும் முன்னரே யாரோ உதவி(?!) விட, எல்லா இடுகைகளும் நான் பார்க்காத போதே வகைப்படுத்தப்பட்டு விட்டது.

4. சரி, முதல் சில இடுகைகள் தமிழ்மணத்தில் சேருவதில் ஒன்றும் வியப்பில்லை என்றெண்ணி, புதிதாக ஒரு வெட்டியாகச் சுட்டவை இட்டேன்.

5. அதைச் சோதித்ததில், அதுவும் அழகாக தமிழ்மணத்தில் லிஸ்ட் ஆகிறது! (தல வரவணையின் ரியாக்ஷன் இங்கே ;) )

6. அப்புறம், சரி, இது வேலைக்காகாது என்று முடிவெடுத்து வரவணை போட்டிருக்கும் அதே வார்ப்புருவுடன் அடுத்த வெட்டியாய்ச் சுட்டவற்றைக் களம் இறக்கினேன்.

7. ஆகா, தமிழ்மணம், "வாம்மா மின்னல்" என்றபடி இதையும் உள்வாங்கிக் கொள்ள, என்ன பண்ணுவதென்றே தெரியவில்லை..

8. கடைசியாக, லேபிள், மற்றும் பிற அமைப்புகளிலும் வரவணை பதிவை அப்படியே சுட்டுச் சோதித்தாலும், நம்ம பதிவு மட்டும் அழகா வந்துவிட்டது தமிழ்மணத்தில்.

9. இறுதி கட்டமாக இன்று காலை ஆவி அம்மணியைச் சோதிக்கச் சொல்லி மடலிட்டதில், அம்மணியின் பதிவும் வருகிறது!!!!!!!!!!! என்ன அமானுஷ்ய வேலையோ தெரியவில்லை!


ஆக, சோதனை முடிவு:
வரவணை பதிவு மட்டும் தமிழ்மணத்தில் தெரியாமல் போவதன் காரணங்கள்:
1. தான் உண்டு தன் போனுண்டு என்று கடலை வறுத்துக் கொண்டிருந்தவரைச் சும்மா இல்லாமல் லால் சேட்ஜியின் சோட்டா பச்சாவாக்கியது

2. அனானி பின்னூட்டம் போட்டு ஆட்டையைக் குழப்பிக் கொண்டிருப்பவர்களைப் பிடித்து பட்டம் கொடுத்தே கொல்வது..

3. சென்னை, மங்களூர், மதுரை என்று வலைப்பதிவர் கூட்டம் சேர்த்துக் கொண்டிருந்தவரைப் பற்றிய திரைக்குப்பின் பதிவுகள்..

4. கௌபாய் பற்றிய உண்மைகளை உரைத்துவிட்டு சிகரெட்டுக்காகச் சொன்னேன் என்று காலை வாரி விட்டது..

இன்னும் பாதிக்கப்பட்டவர்கள் தத்தம் காரணங்களைச் சொல்லலாம்...

5. இதெல்லாம் தவிர, முக்கியமாக, தமிழ்மணத்தின் இந்த அறிவிப்புப் பதிவில் இன்னும் முறையிடாமல் இருப்பது ;)


முடிவுரை:

ஆக, சோதனை ஓவர், இன்னும் ஒரு வாரத்தில் இந்தப் பதிவைத் தூக்கினாலும் தூக்கிவிடுவேன்.. இல்லாமல், வேறு ஏதாவது சுட்டுப் போடுவதும் நடக்கலாம்.. ;)

சோதனை

சோதனை - தயவு செய்து இதைப் பார்க்காதீர்கள்.. சும்மா சோதனை..

வெட்டியாய்ச் சுட்டவை - 2

மழை வந்தாலும் வந்தாச்சு ஒரே குளிரு.. ஒருவழியா கொஞ்சம் தரையில் விரிச்சு படுக்க இதமா இதாவது கெடச்சுதே!



இது மழைக்கு முன்னால..


மோட்டுவளையப் பார்த்துகிட்டு உட்கார்ந்திருந்த ஒரு நாள் சும்மா அலட்டலுக்கு எடுத்தது...




ரெட்டை வால் பீட்ரூட் தெரியுமா?


ராகு கேது தோஷம் தீர்க்கும் காளஹஸ்தில கீறேன் நைனா.. எனக்கு என்ன தோஷம் எப்போ இங்கிருந்து விடுதலைன்னு சொன்னீங்கன்னா புண்யமாப் போவும்..


எட்டு போடத் தெரியுமா?